போட்டாப் போட்டி.. மாதம் ரூ.99 முதல் 1 வருட வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 3 மலிவான திட்டங்கள்.. எது பெஸ்ட்?
ஜியோ, ஏர்டெல், பிஎஸ்என்எல் நிறுவனங்களில் மிகவும் மாலிவான விலைக்கு கிடைக்கும் ஒரு வருட திட்டங்களில் எந்த திட்டத்தில் அதிக சலுகைகள் கிடைக்கின்றன. மாதத்துக்கு ரூ.99 செலவில் பிஎஸ்என்எல், ரூ.129 செலவில் ஜியோ, ரூ.149 செலவில் ஏர்டெல் திட்டங்களை வைத்திருக்கின்றன. பெஸ்ட் எது?
ஏர்டெல் ரூ 1799 திட்ட விவரங்கள் (Airtel Rs 1799 Plan Details): இந்த திட்டத்தில் டேட்டா , வாய்ஸ் காலிங் (Voice Calling), எஸ்எம்எஸ் மற்றும் கூடுதல் சலுகைகள் வருகின்றன. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், 24 ஜிபி லம்ப்-சம் டேட்டா (Lump-sum Data) சலுகை கொடுக்கப்படுகிறது. மொத்தமாக 3600 எஸ்எம்எஸ் சலுகை கிடைக்கிறது.

இதை நாளொன்றுக்கு 100 வீதம் கஸ்டமர்கள் அனுப்பி கொள்ளலாம். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice Call) சலுகை கிடைக்கிறது. அதோடு அப்பல்லோ 24|7 சர்க்கிள் (Apollo 24|7 Circle), ப்ரீ-ஹலோ டியூன்ஸ் (Free Hellotunes) மற்றும் விங்க் மியூசிக் (Wynk Music) சலுகையை பெற்று கொள்ளலாம்.
இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, இதற்கான மாதாந்திர செலவானது, ரூ.149ஆக மட்டுமே இருக்கிறது. இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை கொடுக்கப்படவில்லை. ஆனால், இதைவிட கம்மியான விலையில் கிடைக்கும் ஜியோ வருடாந்திர திட்டத்தில் அந்த சலுகை கிடைக்கிறது.
ஜியோ ரூ 1559 திட்ட விவரங்கள் (Jio Rs 1559 Plan Details): இந்த திட்டத்தில் லம்ப்-சம் டேட்டா, வாய்ஸ் கால்கள் , எஸ்எம்எஸ், ஜியோ ஆப்ஸ் மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை கிடைக்கிறது. முந்தைய திட்டத்தைப் போலவே மொத்தமாக 24 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது.

ஆனால், இந்த 24 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகையை கஸ்டமர்கள் பயன்படுத்தலாம். இது ஏர்டெல்லில் கிடையாது. அதேபோல அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையையும் வெல்கம் ஆஃபர் பெறும் கஸ்டமர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும், 3600 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம்.
இதிலும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் சலுகை கிடைக்கிறது. ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema) மற்றும் ஜியோ கிளவுட் (JioCloud) சலுகையும் இருக்கிறது. இதற்கு 336 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இதன் மாதாந்திர செலவானது, ரூ.141ஆக இருக்கிறது. இதைவிட மலிவான விலையில் பிஎஸ்என்எல் திட்டம் இருக்கிறது.
பிஎஸ்என்எல் ரூ 1499 திட்ட விவரங்கள் (BSNL Rs 1499 Plan Details): இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் சலுகைகள் கொடுக்கப்படுகிறது. முந்தைய திட்டங்களை போலவே 24 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது. இந்த திட்டத்தில் 336 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இதற்கான மாதாந்திர செலவு ரூ.99 மட்டுமேயாகும்.

எது பெஸ்ட்? ஏர்டெல் திட்டத்தில் கூடுதல் கட்டணம் இருக்கிறது. அதே நேரத்தில் வேலிடிட்டியும் கூடுதலாகவே கிடைக்கிறது. ஆனால், அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் 24ஜிபிக்கு பிறகு ஃபேர் யூசேஜ் டேட்டா கிடைக்கவில்லை. ஆனால், இந்த சலுகைகள் ஜியோவின் வருடாந்திர திட்டத்தில் அதைவிட கம்மியான பட்ஜெட்டிலேயே கிடைக்கிறது.
அதேபோல பிஎஸ்என்எலும் மலிவான விலையில் திட்டத்தை கொடுத்தாலும், 4ஜி டேட்டாவில் ஜியோவைவிட பின்தங்கியே இருக்கிறது. ஆகவே, மூன்று திட்டங்களில் நீங்கள் நினைத்ததை போலவே அம்பானியின் ஜியோ திட்டமே நல்ல சலுகைகளை கொடுக்கிறது. ரூ 1559 திட்டம் மட்டுமே இந்த மலிவு விலை வருடாந்திர திட்டத்தில் அதிக சலுகைகளை கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications








