Home
News

அதான் ஜியோ.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 24ஜிபி டேட்டா!

எந்தவொரு டெலிகாம் நிறுவனமும் கொடுக்க முடியாத வகையில் மாதாந்திரம் ரூ.141 செலவில் 336 நாட்கள் வேலிடிட்டி மட்டுமல்லாமல், 24 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகைகளை ஜியோ வழங்குகிறது. இதேபோல 28 நாட்கள் திட்டத்துக்கும் மலிவான விலையே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஜியோ ரூ 155 திட்ட விவரங்கள் (Jio Rs 155 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் (Prepaid Plan) வாய்ஸ் கால்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் சலுகையை பெற்று கொள்ளலாம். இதில் தினசரி டேட்டா கிடையாது.

மாதம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்!

இருப்பினும், 2 ஜிபி லம்ப்-சம் டேட்டா சலுகை கிடைக்கிறது. இந்த 2 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகையை கஸ்டமர்கள் பயன்படுத்தலாம். மொத்தமாக 300 எஸ்எம்எஸ் சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.

ஆகவே, மாதம் முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் சலுகை மட்டும் இருந்தால் போதும் என்று கேட்கும் ஜியோ கஸ்டமர்களுக்கு இந்த ப்ரீபெய்ட் திட்டம் பொருத்தமானதாக இருக்கும். இதேபோல ஆண்டு முழுவதும் வாய்ஸ் கால் சலுகைகள் கம்மியான விலைக்கு வேண்டுமானால், ஜியோ ரூ 1559 திட்டத்தை தேர்ந்தெடுங்கள்.

மாதம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்!

ஜியோ ரூ 1559 திட்ட விவரங்கள் (Jio Rs 1559 Plan Details): ஜியோவில் மிகவும் மலிவான விலைக்கு கிடைக்கும் வருடாந்திர திட்டமாக இது இருக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் டேட்டா (Data), வாய்ஸ் கால்கள் (Voice Calls), எஸ்எம்எஸ் (SMS), ஜியோ ஆப்ஸ் (Jio Apps) சலுகைகள் மட்டுமல்லாமல், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகையும் கொடுக்கப்படுகிறது.

இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், 24 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதுவொரு லம்ப்-சம் டேட்டா (Lump-sum Data) சலுகையாகும். ஆகவே, இந்த திட்டத்தின் வேலிடிட்டி நாட்களில் எப்போது வேண்டுமானாலும் முழுவதும் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த 24 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகை வழங்கப்படுகிறது.

இதுபோக ஜியோ 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகளில் வெல்கம் ஆஃபர் பெறும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. மொத்தமாக 3600 எஸ்எம்எஸ் சலுகை கிடைக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice Call) சலுகை வருகிறது.

இவ்வளவு சலுகைகள் போக ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema) மற்றும் ஜியோ கிளவுட் (JioCloud) ஆகிய ஆப்களை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த திட்டத்துக்கு 336 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இதற்கான மாதாந்திர செலவை பார்த்தால், வெறும் ரூ.141 மட்டுமே தேவைப்படுகிறது. ஆண்டு முழுவதும் வாய்ஸ் கால் சலுகை கோரும் கஸ்டமர்களுக்கு இது நல்ல திட்டமாகும்.

இந்த திட்டங்கள், ஜியோ வேல்யூ (Jio Value) பிரிவின் கீழ் வழங்கப்படுகிறது. இந்த 2 திட்டங்கள் மட்டுமே டேட்டா சலுகைகள் குறைப்பின் காரணமாக மிகவும் மலிவான விலைக்கு கிடைக்கின்றன. இந்த திட்டங்கள் மூலம் சிம்மை தொடர்ந்து ஆக்டிவாக வைத்திருக்கலாம். இதுபோன்ற செய்திகளுக்கு கிஸ்பாட் தளத்தை பின் தொடருங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 1559 Plan Offers Unlimited Voice Calls 24GB Data Check 336 Days Validity Check One Year Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X