Home
News

யப்பா சாமி.. மாதத்துக்கு ரூ.1,549 க்கு ரீசார்ஜ்.. 300 ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. இன்டர்நேஷனல் ரோமிங்!

ஜியோ நிறுவனத்தில் மாதத்துக்கு ரூ.1,549 விலைக்கு கிடைக்கும் போஸ்ட்பெய்ட் திட்டத்தின் சலுகைகளானது, விலைக்கு ஏற்ப அதிகப்படியாகவே கிடைக்கின்றன. லோக்கல் கால்கள் முதல் இன்டர்நேஷனல் கால்கள் வரையில் செய்து கொள்ளலாம். பிரீமியம் ஓடிடி ஆப்கள், டேட்டா ரோலோவர் போன்ற ஏகப்பட்ட சலுகைகள் கொடுக்கப்பட்டு உள்ளன. இந்த தனிநபர் போஸ்ட்பெய்ட் திட்டத்தின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ போஸ்ட்பெய்ட் திட்டங்களிலேயே அதிக விலை கொண்ட திட்டமாக ஜியோ ரூ. 1549 திட்டம் (Jio Rs 1549 Plan) இருக்கிறது. ஆகவே, டேட்டா, வாய்ஸ் கால்கள், ஓடிடி, இன்டர்நேஷன் ரோமிங் மற்றும் டேட்டா சலுகைகள் கொடுக்கப்பட்டு உள்ளன. பிரீமியம் ஓடிடி ஆப்களின் சந்தா, வருட கணக்கில் கிடைக்கின்றன. மாதத்துக்கு ரூ.1,500 மேல் செலவு செய்ய ரெடியாக இருக்கும் கஸ்டமர்களுக்கு இது பெஸ்ட் ஆப்ஷனாக உள்ளது.

யப்பா சாமி.. மாதத்துக்கு ரூ.1,549 க்கு ரீசார்ஜ்.. 300 ஜிபி டேட்டா!

ஜியோ ரூ. 1549 போஸ்ட்பெய்ட் திட்ட விவரங்கள் (Jio Rs 1549 Postpaid Plan Details): இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 300 ஜிபி டேட்டா கிடைக்கும். 500 ஜிபி டேட்டா ரோலோவர் கிடைக்கும். 300 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 1 ஜிபிக்கு ரூ.10 செலவாகும். மேலும், அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை (Unlimited 5G Data) சலுகையை கொடுத்து உள்ளது. 100 எஸ்எம்எஸ்களை தினசரிக்கு அனுப்பி கொள்ளலாம்.

அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் (Unlimited Local, STD, Roaming) வாய்ஸ் கால்கள் கிடைக்கிறது. கூடுதலாக யுஎஸ்ஏ நாடுகளுக்கு 500 நிமிடங்களுக்கு வாய்ஸ் கால்கள் மற்றும் 5 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படும். யுஏஇ நாடுகளுக்கு 300 நிமிடங்கள் வாய்ஸ் கால்கள் மற்றும் 1 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படும். இன்கம்மிங், அவுட்கோயிங் மற்றும் கால்பேக் நிமிடங்களும் இதில் அடங்கும்.

இந்த வாய்ஸ், டேட்டா, எஸ்எம்எஸ் சலுகைகள் போக நெட்பிளிக்ஸ் மொபைல் (Netflix Mobile), அமேசான் பிரைம் லைட் (Amazon Prime Lite) ஆகிய ஓடிடி ஆப்களின் சந்தா கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் அமேசான் பிரைம் லைட் சந்தாவை 2 வருடங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இதில் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் இருக்கின்றன. மேலும், ஜியோஹாட்ஸ்டார் மொபைல்/டிவி சந்தா கிடைக்கிறது.

இந்த ஹாட்ஸ்டார் சந்தாவை 3 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், வழக்கமாக கிடைக்கும் ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சந்தா கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் 50 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் இலவமாக கொடுக்கப்படும். மேலும், ஜெமினி ப்ரோ (Gemini Pro) சந்தாவும் இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்துக்கு கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்த சந்தாவானது 18 மாதங்களுக்கு கிடைக்கும். ரூ.35,100 மதிப்பில் கொடுக்கப்பட்டு உள்ளது. 2,000 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் (Cloud Storage) கிடைக்கும். நானோ பனானா (Nano Banana), வியோ வீடியோ ஜெனரேஷன் உள்ளிட்ட அணுகல்களையும் இந்த ஜெமினி ப்ரோ சந்தாவில் பெற்று கொள்ளலாம். இன்டர்நேஷனல் மற்றும் பிரீமியம் ஓடிடி ஆப்களுக்கு இந்த திட்டம் சரியாக இருக்கும்.

ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை தொடர்ந்து பெறுவதற்கு ஒரு பில் சைக்கிள் முடிந்த 48 மணி நேரத்துக்கு அடுத்த பில் சைக்கிளுக்கு செல்ல வேண்டும். கூகுள் ஜெமினி ப்ரோ சந்தாவை தொடர்ந்து பெறுவதற்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா கொண்ட திட்டத்தை வைத்திருக்க வேண்டும். ஆகவே, ரூ.349 விலைக்கு கொண்ட திட்டத்தில் இருந்து அடுத்த ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 1549 Postpaid Plan 300GB Data Unlimited Voice International Roaming Check Individual Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X