Jio சக்கைப் போடு.. ரூ.1549-க்கு முடிந்தது கதை.. வாய்ஸ், டேட்டா, ஓடிடி.. ஒட்டுமொத்தமும் 1 திட்டத்துல!
ஜியோ (Jio) நிறுவனம் தனது போஸ்ட்பெய்ட் (Postpaid) வாடிக்கையாளர்களுக்காக பிரீமியம் சலுகைகள் நிறைந்த ஒரு அசத்தலான தனிநபர் திட்டத்தை (Individual Plan) வழங்கி வருகிறது. கூடுதல் விலையில் கிடைக்கும் இந்தத் திட்டத்தில், சாதாரண ரீசார்ஜ் திட்டங்களில் கிடைக்காத பல சிறப்பு சலுகைகள் வாரி வழங்கப்படுகின்றன.
அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), மொத்த டேட்டா (Lumpsum Data), டேட்டா ரோலோவர் (Data Rollover), முன்னணி ஓடிடி சந்தாக்கள் (OTT Subscriptions) மட்டுமின்றி, சர்வதேச ரோமிங் (International Roaming) மற்றும் கூகுள் ஜெமினி ஏஐ (Google Gemini AI) சலுகையும் இதில் அடங்கும். இந்த ஜியோ போஸ்ட்பெய்ட் திட்டத்தின் (Jio Postpaid Plan) விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஜியோ ரூ.1549 திட்ட விவரங்கள் (Jio Rs 1549 Plan Details): மாதாந்திர பில் சுழற்சி (Bill Cycle) வேலிடிட்டி கொண்ட இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் மொத்தமாக 300 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. 500 ஜிபி வரையிலான டேட்டா ரோலோவர் (Data Rollover) வசதியும் உள்ளது. இந்த டேட்டா சலுகை மட்டுமல்லாமல், அன்லிமிடெட் ட்ரூ 5ஜி டேட்டா (Unlimited True 5G Data) சலுகையும் கிடைக்கிறது.
ஒருவேளை 300 ஜிபி டேட்டா வரம்பு முடிந்துவிட்டால், அதன் பிறகு பயன்படுத்தப்படும் ஒவ்வொரு 1 ஜிபி டேட்டாவுக்கும் ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படும். உங்களுக்கு 5ஜி நெட்வொர்க் தடையின்றி கிடைக்கும்பட்சத்தில், நீங்கள் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் கிடைக்கின்றன.
தினமும் 100 எஸ்எம்எஸ் (SMS) சலுகைகள் வழங்கப்படுகின்றன. இது ஒரு தனிநபர் திட்டம் (Individual Plan) என்பதால், இதில் ஃபேமிலி பிளான் போல கூடுதல் சிம் கார்டுகளை (Additional SIM Cards) இணைக்க முடியாது. ஆனால், வெளிநாடு செல்பவர்களுக்குப் பயன்படும் வகையில் சர்வதேச ரோமிங் (International Roaming) சலுகை இதில் இணைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்கா (USA) செல்லும் வாடிக்கையாளர்களுக்கு 5 ஜிபி அதிவேக டேட்டா மற்றும் 500 நிமிடங்களுக்கான வாய்ஸ் கால்கள் (இன்கம்மிங், லோக்கல் அவுட்கோயிங் மற்றும் இந்தியாவுக்கான கால்பேக்) சலுகை கிடைக்கிறது. இதேபோல ஐக்கிய அரபு அமீரகத்திற்கு (UAE) பயணிப்பவர்களுக்கு 1 ஜிபி அதிவேக டேட்டா கொடுக்கப்பட்டு இருக்கிறது.
மேலும், 300 நிமிடங்களுக்கான வாய்ஸ் கால்கள் (இன்கம்மிங், லோக்கல் அவுட்கோயிங் மற்றும் இந்தியாவுக்கான கால்பேக்) சலுகை வழங்கப்படுகிறது. ஓடிடி (OTT) சலுகைகளைப் பொறுத்தவரை, இந்தத் திட்டத்தில் நெட்பிளிக்ஸ் மொபைல் (Netflix Mobile) சந்தா மற்றும் அமேசான் பிரைம் லைட் (Amazon Prime Lite) சந்தா ஆகியவை நேரடியாகக் கிடைக்கின்றன.
இதில் ஒருமுறை சலுகையாக (One-time Offer) அமேசான் பிரைம் லைட் சந்தா முதல் 2 வருடங்களுக்குச் செல்லுபடியாகும் (இதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஜியோ தளத்தில் காணலாம்). இதுதவிர, ஜியோ ஸ்பெஷல் ஆஃபரின் (Jio Special Offer) கீழ் ஜியோஹாட்ஸ்டார் மொபைல் + ஹாலிவுட் (JioHotstar Mobile+ Hollywood) சந்தாவும், கிடைக்கிறது.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக, கிளவுட் மற்றும் ஏஐ (AI) சலுகைகளும் இத்திட்டத்தில் கொட்டிக்கிடக்கின்றன. ஜியோ ஏஐ கிளவுட் (JioAICloud) மூலம் 50 ஜிபி இலவச கிளவுட் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. அத்துடன், ரூ.35,100 மதிப்புள்ள கூகுள் ஜெமினி புரோ திட்டம் (Google Gemini Pro Plan) 18 மாதங்களுக்கு முற்றிலும் இலவசமாகக் கிடைக்கிறது.
இந்த சலுகைகளை தொடர்ந்து பெறுவதற்குச் சில நிபந்தனைகளும் உள்ளன. ஜியோஹாட்ஸ்டார் சலுகையைத் தொடர்ந்து அனுபவிக்க வாடிக்கையாளர்கள் தகுதியான போஸ்ட்பெய்ட் திட்டத்தில் ஆக்டிவாக இருப்பதுடன், மாதாந்திர பில்லை சரியான நேரத்தில் செலுத்த வேண்டும். மேலும், உங்களது அதே ஜியோ எண்ணைப் பயன்படுத்தி மட்டுமே ஓடிடி ஆப்களை லாகின் செய்ய வேண்டும்.


Click it and Unblock the Notifications
