இவ்ளோ அதிகமா.. வெறும் 1 மாசத்துக்கு ரூ.1549.. 300GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. 3 ஓடிடி சந்தா.. எந்த திட்டம்?
ஜியோ (Jio) நிறுவனத்தின் போஸ்ட்பெய்ட் (Postpaid) கஸ்டமர்களுக்கு அதிகப்படியான விலைக்கு கிடைக்கும் ஒரு திட்டம் இருக்கிறது. இந்த விலைக்கு ஏற்ப மற்ற திட்டங்களில் கிடைக்காத சலுகைகளும் வருகின்றன. வாய்ஸ் கால்கள் (Voice Calls), லம்ப்-சம் டேட்டா (Lumpsum Data), டேட்டா ரோலாவர் (Data Rollover), ஓடிடி சந்தா (OTT Subscription) மட்டுமல்லாமல், இன்டர்நேஷனல் ரோமிங் (International Roaming) சலுகையையும் கொடுக்கிறது. இந்த ஜியோ போஸ்ட்பெய்ட் திட்டத்தின் (Jio Postpaid Plan) முழு சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஜியோ ரூ 1549 திட்ட விவரங்கள் (Jio Rs 1549 Plan Details): இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் 300 ஜிபி டேட்டா மற்றும் 500 ஜிபி டேட்டா ரோலோவர் சலுகை கிடைக்கிறது. இந்த டேட்டா சலுகை போக அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகையும் இதில் கிடைக்கிறது. 300 ஜிபி டேட்டா முடிந்த பிறகு 1 ஜிபிக்கு ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படும்.

5ஜி டேட்டா தொடர்ந்து கிடைக்கும்பட்சத்தில் 300 ஜிபி டேட்டா குறையாது. இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்துக்கு தினமும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் ஆகிய சலுகை கிடைக்கிறது. இதில் நேஷனல் ரோமிங் மட்டுமல்ல, இன்டர்நேஷன் ரோமிங் சலுகையும் இருக்கிறது.
ஆகவே, யுஎஸ்ஏ நாடுகளுக்கு 500 நிமிடங்களுக்கான இன்கம்மிங் மற்றும் அவுட்கோயிங் கால்கள் கிடைக்கிறது. அதேபோல 5 ஜிபி டேட்டாவையும் பயன்படுத்தி கொள்ளலாம். இதுபோக யுஏஇ நாடுகளுக்கு 300 நிமிடங்களுக்கான இன்கம்மிங் மற்றும் அவுட்கோயிங் வாய்ஸ் கால்கள் சலுகை கிடைக்கிறது. கூடவே 1 ஜிபி டேட்டா சலுகையும் கொடுக்கப்படுகிறது.
ஓடிடி சலுகைகளை பார்க்கையில், மூன்று பிரீமியம் ஆப்கள் கிடைக்கின்றன. சொல்லப்போனால், 2 ஓடிடிகள் மட்டுமே இந்த திட்டத்துக்கு கிடைக்கிறது. புதிதாக சேர்க்கப்பட்ட ஜியோ அன்லிமிடெட் ஆஃபரின் (Jio Unlimited Offer) கீழ் இப்போது ஜியோஹாட்ஸ்டார் சந்தா (JioHotstar Subscription) கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. இதை 90 நாட்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.
இதுபோக நெட்பிளிக்ஸ் மொபைல் (Netflix Mobile) சந்தா மற்றும் அமோசான் பிரைம் லைட் (Amazon Prime Lite) சந்தா கிடைக்கிறது. இதில் அமேசான் பிரைம் ஓடிடிக்கு 2 வருடங்களுக்கு சந்தா கிடைக்கிறது. ஆனால், இதற்கு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் இருக்கின்றன. இதை ஜியோ வெப்சைட்டில் தெரிந்து கொள்ளுங்கள். இந்த சலுகைகள் போக ஜியோவில் கிடைக்கும் சில சலுகைகள் வருகின்றன.
ஆகவே, இந்த ஜியோ போஸ்ட்பெய்ட் திட்டத்தில் ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சலுகை கிடைக்கிறது. இந்த கிளவுட் ஸ்டோரேஜ் ஆனது, ஜியோ கிளவுட் ஆப் மூலம் அனுக கிடைக்கிறது. ஆனால், அதற்கு உங்களது ஜியோ நம்பரை பயன்படுத்தினால், மட்டுமே அனுக கிடைக்கும். இந்த ஜியோ ஏஐ கிளவுட் மற்றும் ஜியோஹாட்ஸ்டார் சந்தாவுக்கு தொடர்ந்து திட்டத்தை வைத்திருக்க வேண்டும்.
அதாவது, ஒரு பில் சைக்கிள் முடிந்தவுடன் அடுத்த பில் சைக்கிளை தொடர வேண்டும். அப்போதுதான், ஜியோஹாட்ஸ்டார் 90 நாட்களுக்கு பயன்படுத்த கிடைக்கும். இந்த போஸ்ட்பெய்ட் திட்டம் மட்டுமே அதிகப்படியான விலை மற்றும் சலுகைகளுடன் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் ஃபேமிலி சிம் கார்டை ஆட் செய்ய முடியாது. ஒரேவொரு சிம் கார்டுக்கு மட்டுமே சலுகைகளை கொடுக்கும்.


Click it and Unblock the Notifications