Home
News

அம்பானிக்கு கும்பிடு.. வெறும் ரூ.152 போதும்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 1 ஜிபி டேட்டா.. Jio கஸ்டமர்களுக்கு குஷி!

ஜியோ (Jio) கஸ்டமர்களுக்கு என்னதான் ரீசார்ஜ் கட்டணங்கள் உயர்த்தப்பட்டாலும், ஜியோபோன் (JioPhone) கஸ்டமர்களுக்கு அதே அடிமட்ட விலையில் ப்ரீபெய்ட் திட்டங்கள் (Prepaid Plan) கிடைக்கிறது. இதில் மாதாந்திர வேலிடிட்டி கொண்ட திட்டங்களின் சலுகைகளை பார்த்தால், ஜியோபோனை வாங்கிடலாம் போலயே என்று டெலிகாம் கஸ்டமர்களுக்கு தோன்றலாம். அப்படியான சலுகைகள் இந்த ப்ரீபெய்ட் திட்டங்களில் கிடைக்கின்றன.

ஜியோபோன் கஸ்டமர்களுக்கு 23 நாட்கள் முதல் வேலிடிட்டி திட்டங்கள் தொடங்குகின்றன. ஆனால், பெரும்பாலான கஸ்டமர்கள் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை ரீசார்ஜ் செய்து வருகின்றனர். ஏனென்றால், அனைத்து திட்டங்களும் அடிமட்ட விலைக்கே கிடைக்கிறது. ஆகவே, 28 நாட்கள் வேலிடிட்டியில் கிடைக்கும் திட்டங்களின் விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

அம்பானிக்கு கும்பிடு.. வெறும் ரூ.152 போதும்.. அன்லிமிடெட் வாய்ஸ்!

ஜியோபோன் ரூ 91 திட்ட விவரங்கள் (JioPhone Rs 91 Plan Details): இந்த ஜியோபோன் திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் நாளொன்றுக்கு 100 எம்பி டேட்டா மற்றும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்கள் (Roaming Calls) சலுகை கிடைக்கிறது. 200 எம்பி டேட்டா கூடுதலாக கொடுக்கப்படுகிறது.

ஆகவே, 28 நாட்களுக்கு 3 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். இந்த ஜியோபோன் திட்டங்களுக்கும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகைகள் கிடைக்கின்றன. லம்ப்-சம் சலுகையில் 50 எஸ்எம்எஸ்கள் கிடைக்கின்றன. இந்த ஜியோபோன் திட்டத்துக்கு ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ கிளவுட் (Jio Cloud) சலுகைகள் கொடுக்கப்படுகின்றன.

ஜியோபோன் ரூ 152 திட்ட விவரங்கள் (JioPhone Rs 152 Plan Details): டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் அதிகமாக வேண்டுமானால், இந்த ஜியோபோன் திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த திட்டத்துக்கும் அதே 28 நாட்கள் வேலிடிட்டியில் நாளொன்றுக்கு 0.5 ஜிபி டேட்டா மற்றும் அதற்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கிறது.

இதில் 1 ஜிபி டேட்டா கூடுதலாக கிடைக்கும். ஆகவே, 0.5 ஜிபி வீதம் 28 நாட்களுக்கு 14 ஜிபி டேட்டாவும், அதோடு 1 ஜிபி கூடுதல் டேட்டாவும் பயன்படுத்த கிடைக்கிறது. இதில் 300 எஸ்எம்எஸ்கள் லம்ப்-சம் முறையில் கிடைக்கும். மற்ற சலுகைகள் ஒரே மாதிரிதான். ஆகவே, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், ஜியோ டிவி மற்றும் ஜியோ கிளவுட் சலுகைகள் இதில் கிடைக்கின்றன.

ஜியோபோன் ரூ 186 திட்ட விவரங்கள் (JioPhone Rs 186 Plan Details): இந்த ஜியோபோன் திட்டமானது நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா வீதம் தொடங்குகிறது. ஆகவே, 28 நாட்களில் அதிக டேட்டா வேண்டுமானால், இதை ரீசார்ஜ் செய்யலாம். இந்த டேட்டா சலுகைகளுக்கு அடுத்து அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கிறது.

ஜியோபோன் ரூ 223 திட்ட விவரங்கள் (JioPhone Rs 223 Plan Details): இந்த ஜியோ போன் திட்டத்தில் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவும் அதற்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவும் கிடைக்கிறது. இதில் கூடுதல் டேட்டா கிடைக்காது. மற்ற சலுகைகளை பார்க்கையில் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரேமிங் கால்கள் வருகிறது.

இதுபோக ஜியோ டிவி மற்றும் ஜியோ கிளவுட் சலுகைகளையும் இந்த ஜியோபோன் திட்டம் கொடுக்கிறது. உங்களிடம் ஜியோபோன் இருந்தால் 28 நாட்கள் வேலிடிட்டியில் கிடைக்கும் இந்த திட்டங்களில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். இந்த திட்டங்களில் 4ஜி வேகத்தில் டேட்டா சேவை கொடுக்கப்படும். இதைவிட மலிவான திட்டங்கள் கிடையாது.

Best Mobiles in India

English summary
Jio Rs 152 Plan With Unlimited Voice Calls 14GB Data 28 Days Validity Check JioPhone Monthly Plans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X