இதைவிட என்ன வேணும்.. ரூ.151-க்கு அன்லிமிடெட் டேட்டா.. ஆக்டிவ் திட்ட வேலிடிட்டி.. மூன்று அப்கிரேடு திட்டங்கள்!
ஜியோ சிம் கார்டு (Jio SIM Card) வைத்திருக்கும் கஸ்டமர்கள் தங்களது 4ஜி திட்டத்திலேயே அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பயன்படுத்த மூன்று அன்லிமிடெட் அப்கிரேடு திட்டங்கள் (Unlimited Upgrade Plan) கிடைக்கின்றன. இந்த திட்டங்களுக்கு ஆக்டிவ் திட்ட வேலிடிட்டி (Active Plan Validity) கிடைக்கிறது. இதுபோக 4ஜி டேட்டாவும் கிடைக்கின்றன. இந்த ப்ரீபெய்ட் திட்டங்களின் (Prepaid Plan) விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.
ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்களில் 4ஜி டேட்டா மட்டுமே கொண்ட திட்டங்களை ரீசார்ஜ் செய்துவிட்டு, அதே திட்டங்களில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) பெற முடியுமா? என்று கேட்டால், நிச்சயமாக முடியும். இதற்காகவே பிரத்யேகமாக இந்த அன்லிமிடெட் அப்கிரேடு திட்டங்கள் கிடைக்கின்றன. ஆனால், ஆக்டிவ் திட்டங்களில் சில கட்டுப்பாடுகள் இருக்கும்.

அதாவது, 1.5 ஜிபி தினசரி டேட்டாவுடன் 2 மாதங்கள் அல்லது 3 மாதங்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களை ரீசார்ஜ் செய்துள்ள கஸ்டமர்களுக்கு மட்டுமே இந்த அப்கிரேட் திட்டம் கிடைக்கும் என்று கட்டுப்பாடுகள் வருகின்றன. மூன்று திட்டங்களுக்கும் இதில் மாறுதல்கள் இருக்கின்றன. ஆகவே, அந்த திட்டங்களின் சலுகைகளை பார்த்தால் மட்டுமே உங்களுக்கு புரியவரும்.
ஜியோ ரூ 151 திட்டம் 5ஜி அப்கிரேடு (Jio Rs 151 Plan 5G Upgrade): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு ஆக்டிவ் திட்ட வேலிடிட்டி கிடைக்கும். ஆகவே, உங்களது ஆக்டிவ் திட்டத்தில் எவ்வளவு நாட்கள் வேலிடிட்டி இருக்கிறதோ அதுவரையில் இந்த திட்டத்தின் சலுகைகள் இருக்கும். அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பயன்படுத்தலாம். கூடுதலாக 9 ஜிபிக்கான 4ஜி டேட்டாவும் கிடைக்கிறது.
இந்த திட்டத்தை பெற வேண்டுமானால், உங்களிடம் 1.5 ஜிபி டேட்டாவை தினசரிக்கு கொடுக்கும்படி 2 மாதங்களுக்கு மேல் அல்லது 3 மாதங்களுக்குள் வேலிடிட்டி கொடுக்கும் திட்டம் ஆக்டிவாக இருக்க வேண்டும். இதுபோன்ற திட்டத்தை கொண்டிருக்கும் கஸ்டமர்களுக்கு மட்டுமே இந்த 5ஜி அப்கிரேடு திட்டம் கிடைக்கிறது. இதற்கு கம்மியான விலையில் மற்றொரு திட்டம் உள்ளது.
ஜியோ ரூ 101 திட்டம் 5ஜி அப்கிரேடு (Jio Rs 101 Plan 5G Upgrade): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கும் ஆக்டிவ் திட்ட வேலிடிட்டி கிடைக்கிறது. 6 ஜிபிக்கான 4ஜி டேட்டா கிடைக்கிறது. அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த அப்கிரேடு திட்டத்தை பெற விரும்பும் கஸ்டமர்கள் தினசரிக்கு 1 ஜிபி டேட்டா கொடுக்கும் திட்டத்தை வைத்திருக்க வேண்டும்.
மேலும், 1.5 ஜிபி தினசரி டேட்டாவுடன் 1 மாத வேலிடிட்டிக்கு மேல் மற்றும் 2 மாதங்களுக்குள் வேலிடிட்டி கொடுக்கும் திட்டங்களுக்கும் இந்த அப்கிரேட் திட்டம் கொடுக்கப்படுகிறது. இதைவிட மலிவான விலைக்க மற்றொரு திட்டம் இருக்கிறது. இந்த திட்டம் மட்டுமே ஆரம்ப விலைக்கு கிடைக்கும் அன்லிமிடெட் 5ஜி அப்கிரேடு திட்டமாகும்.
ஜியோ ரூ 51 திட்டம் 5ஜி அப்கிரேடு (Jio Rs 51 Plan 5G Upgrade): இந்த மலிவான 5ஜி அப்கிரேட் திட்டத்துக்கும் ஆக்டிவ் திட்ட வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. 2 ஜிபி 4ஜி டேட்டாவை பெற்று கொள்ளலாம். அதேபோல அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் கிடைக்கிறது. இந்த திட்டத்தை பெற வேண்டுமானால், ஜியோ கஸ்டமர்களிடம் பின்வரும் திட்டம் இருக்க வேண்டும்.
அதாவது, ஏற்கனவே உங்களிடம் 1.5 ஜிபி டேட்டாவை தினசரிக்கு கொடுக்கும் திட்டம் இருக்க வேண்டும். இந்த திட்டம் 28 நாட்கள் அல்லது அதற்கு மேலான வேலிட்டி கொண்ட திட்டமாகவும் இருக்க வேண்டும். இதுபோன்ற திட்டங்களை வைத்திருக்கும் கஸ்டமர்கள் தங்களது 4ஜி டேட்ட திட்டங்களை எளிதாக 5ஜி திட்டங்களாக மாற்றி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications