Home
News

இதையும் வச்சிக்கோங்க! சத்தமே இல்லாமல் Jio கொடுக்குது.. ரூ.151-க்கு வருது 5ஜி திட்டம்.. மொத்தம் 3 திட்டங்கள்!

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) கட்டணங்கள் விலை ஏற்றத்துக்கு பிறகு கஸ்டமர்கள் புதிய திட்டங்களுக்கு பழகுவதற்குள் அன்லிமிடெட் 5ஜி டேட்டா திட்டங்களையும் பார்க்க வேண்டியிருக்கிறது. இனிமேல் 5ஜி டேட்டாவை பெற வேண்டுமானால், இந்தடேட்டா திட்டங்களை ரீசார்ஜ் செய்ய வேண்டி இருக்கும். அதிகபட்சம் கஸ்டமர்களுக்கு ரூ 151 வரையில் திட்டங்கள் இருக்கின்றன. ஏர்டெல் நிறுவனம் 5ஜி டேட்டா திட்டங்களை களமிறக்கி இருந்தது. இப்போது ஜியோவுக்கும் இருக்கிறது. இந்த அன்லிமிடெட் 5ஜி டேட்டா திட்டங்கள் குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ ரூ 51 திட்ட விவரங்கள் (Jio Rs 51 Plan Details): இந்த திட்டத்தில் 3 ஜிபிக்கான 4ஜி டேட்டா சலுகை கிடைக்கிறது. அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. ஆக்டிவ் திட்டத்தின் (Active Plan) வேலிடிட்டி வருகிறது. 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகையும் வருகிறது. 1.5ஜிபி/1மாத வேலிடிட்டி கொண்ட திட்டங்களுக்கு இந்த டேட்டா வவுச்சர் சலுகைகளை கொடுக்கும்.

இதையும் வச்சிக்கோங்க! சத்தமே இல்லாமல் ரூ.151-க்கு Jio கொடுக்குது!

ஜியோ ரூ 101 திட்ட விவரங்கள் (Jio Rs 101 Plan Details): இந்த டேட்டா திட்டத்துக்கும் ஆக்டிவ் திட்ட வேலிடிட்டி கிடைக்கிறது. 4ஜி வேகத்தில் 6 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை வருகிறது. 1 ஜிபி தினசரி டேட்டா கொண்ட அனைத்து திட்டங்களுக்கும் இந்த சலுகைகள் கிடைக்கும். 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கிறது.

ஜியோ ரூ 151 திட்ட விவரங்கள் (Jio Rs 151 Plan Details): இந்த டேட்டா திட்டத்தில் 9 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இதை 4ஜி வேகத்தில் பயன்படுத்தி கொள்ளலாம். முந்தைய திட்டங்களை போலவே அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை கிடைக்கிறது. 1.5ஜிபி தினசரி டேட்டா மற்றும் 2 மாதம் வேலிடிட்டி கொண்ட திட்டங்களுக்கு இதன் சலுகைகள் கிடைக்கும்.

இந்த திட்டத்துக்கும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகை வருகிறது. இதற்கும் ஆக்டிவ் திட்டத்தின் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த மூன்று 5ஜி டேட்டா திட்டங்களும் 5ஜி சலுகையை பெறும் கஸ்டமர்களுக்கு சேவையை கொடுக்கின்றன. இப்போது, ஏற்கனவே இருக்கும் 4ஜி டேட்டா திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.

4ஜி டேட்டா திட்டங்களை பார்க்கையில், ரூ 139, ரூ 69, ரூ 29 மற்றும் ரூ 19 விலையில் திட்டங்கள் இருக்கின்றன. இவற்றின் சலுகைகளை பார்க்கையில் ரூ 139 திட்டத்தில் 12 ஜிபி டேட்டா, ஆக்டிவ் திட்ட வேலிடிட்டி மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகை வருகிறது. ரூ 69 திட்டத்தில் 6 ஜிபி டேட்டா கிடைக்கிறது.

இந்த திட்டத்துக்கும் ஆக்டிவ் வேலிடிட்டி மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கிறது. ரூ 29 மதிப்பிலான திட்டத்தில் 2 ஜிபி டேட்டா, 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா மற்றும் ஆக்டிவ் வேலிடிட்டி வருகிறது. இதேபோல ரூ 19 திட்டத்தில் 1 ஜிபி டேட்டா மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா வருகிறது. ஆக்டிவ் வேலிடிட்டி கிடைக்கிறது.

முன்னதாக ஏர்டெல் நிறுவனம் 5ஜி டேட்டா திட்டங்களை அறிவித்திருந்தது. ஏர்டெல்லின் 5ஜி டேட்டா திட்டங்களை பொறுத்தவரையில் ஜியோவை போலவே ரூ 51, ரூ 101 ரூ 151 மதிப்பில் கிடைக்கின்றன. டேட்டாவை பார்க்கையில், ரூ 51 மதிப்பிலான திட்டத்தில் 3 ஜிபி டேட்டாவும், ரூ 101 மதிப்பிலான திட்டத்தில் 6 ஜிபி டேட்டாவும் வருகிறது.

ரூ 151 மதிப்பிலான டேட்டா திட்டத்தில் 9 ஜிபி டேட்டா வருகிறது. இந்த திட்டங்களுக்கும் ஜியோவை போலவே ஆக்டிவ் திட்டத்தின் வேலிடிட்டி வருகிறது. அதேபோல தினசரி 1 ஜிபிய/1.5 ஜிபி டேட்டா திட்டங்களுக்கு இந்த சலுகைகள் கிடைக்கிறது. ஆகவே, 5ஜி டேட்டா திட்டங்களில் 2 நிறுவனங்களும் ஒரே மாதிரியான சலுகைகளையே கொடுக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 151 Plan With 9GB 4G Data Active Plan Validity Check Unlimited 5G Data Plans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X