அம்பானியா கொக்கா.. ரூ.15 விலையில் டேட்டா.. Jio-வில் அசத்தலாக 7 மலிவு விலை திட்டங்கள்.. எது உங்க சாய்ஸ்..
ஜியோ (Jio) நிறுவனம், அதன் பயனர்களுக்கு ரூ.15 முதல் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது. இந்த பதிவில் ரூ.15 விலை முதல் துவங்கி ரூ.29 விலைக்குள் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் மலிவு விலை திட்டங்களை பற்றி தான் பார்க்கப்போகிறோம்.
ஜியோ அதன் வாடிக்கையாளர்களுக்கு பல ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. ஜியோ என்றாலே மலிவு விலையில் சிறந்த நன்மை என்று தானே மக்கள் மனதில் ஆழமாக ஒரு கருத்து பதிவாகிவிட்டது. அதற்கு சான்றாக, ஜியோ நிறுவனம் அதன் ப்ரீபெய்ட் பயனர்களை குஷி அடைய செய்ய ரூ.15 விலை முதல் திட்டங்களை வழங்கி வருகிறது.

ஜியோவின் மிகவும் மலிவு விலை திட்டங்கள் ரூ.15, ரூ.19, ரூ.25, ரூ.29, ரூ. 61, ரூ. 121, மற்றும் ரூ.222 திட்டங்கள் என மொத்தம் 7 திட்டங்களை வழங்குகிறது. இந்த திட்டங்கள் அனைத்தும் இப்போது இந்தியாவில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன. இந்த திட்டங்கள் டேட்டா பூஸ்டர் (Data Booster) திட்டங்களாக செயல்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஜியோ டேட்டா பூஸ்டர் திட்டங்கள் (Jio Data Booster Plans):
ஆம், இது ப்ரீபெய்ட் பயனர்களுக்காக வழங்கப்படும் டேட்டா ஒன்லி (Jio data add-on) திட்டங்களாகும். இந்த திட்டங்களில் பயனர்கள் எந்தவொரு வாய்ஸ் கால்ஸ் நன்மை (voice calls) மற்றும் எஸ்எம்எஸ் (SMS) போன்ற கூடுதல் நன்மைகளை பெற மாட்டார்கள். இதில் டேட்டா நன்மை மட்டுமே வழங்கப்படும் என்பது கவனிக்கத்தக்கது. சரி, இப்போது இதில் உள்ள எந்த விலை திட்டம் எவ்வளவு டேட்டா நன்மையை வழங்குகிறது என்று பார்க்கலாம் வாங்க.
1. ஜியோ ரூ.15 திட்டம் (Jio Rs 15 Plan):
இந்த திட்டம் ரூ.15 விலையில் 1ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்தில் வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் போன்ற நன்மை எதுவும் கிடைக்காது. இதன் வேலிடிட்டி பற்றி பேசுகையில், நீங்கள் ரீச்சார்ஜ் செய்துள்ள அடிப்படை திட்டத்துடன் செல்லுபடியை இது பின்பற்றுகிறது.
2. ஜியோ ரூ.19 திட்டம் (Jio Rs 19 Plan):
இந்த திட்டம் ரூ.19 விலையில் 1.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இதன் வேலிடிட்டி உங்கள் அடிப்படை திட்டத்துடன் தொடர்புடையது. இதில் வேறெந்த கூடுதல் நன்மைகளும் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

3. ஜியோ ரூ.25 திட்டம் (Jio Rs 25 Plan):
இந்த ஜியோ டேட்டா பூஸ்டர் திட்டம் ரூ.25 விலையில் உங்களுக்கு 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி செல்லுபடியாகும் காலமும், உங்கள் அடிப்படை திட்டத்துடன் தொடர்புடையது என்பது குறிப்பிடக்கத்து.
4. ஜியோ ரூ.29 திட்டம் (Jio Rs 25 Plan):
இந்த ஜியோ டேட்டா பூஸ்டர் திட்டம் ரூ.29 விலையில் 2.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்தில் வாய்ஸ் கால் நன்மை மற்றும் எஸ்எம்எஸ் நன்மை போன்ற இதர நன்மைகள் எதுவும் கிடைக்காது. இதன் வேலிடிட்டி, உங்கள் அடிப்படை திட்டத்தின் வேலிடிட்டியை தழுவியது.
5. ஜியோ ரூ.61 திட்டம் (Jio Rs 61 Plan):
இந்த திட்டம் உங்களுக்கு மொத்தமாக 6ஜிபி டேட்டாவை வெறும் ரூ.61 விலையில் வழங்குகிறது. மற்ற டேட்டா பூஸ்டர் திட்டங்களை போலவே, இதன் வேலிடிட்டி நன்மையையும் உங்களுடைய அடிப்படை திட்டத்தின் வேலிடிட்டிக்கு நிகரானது.
6. ஜியோ ரூ.121 மற்றும் ரூ.222 திட்டம் (Jio Rs 121 and Rs 222 Plan):
இந்த இரண்டு டேட்டா பூஸ்டர் திட்டங்களும் முறையே 12ஜிபி டேட்டா மற்றும் 50ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. ஜியோவின் எல்லா டேட்டா பூஸ்டர்களின் வேலிடிட்டி அடிப்படை திட்டத்துடன் செல்லுபடியாகிறது.


Click it and Unblock the Notifications








