கேபிள் டிவி எதுக்கு? 1000+ டிவி சேனல்கள்.. 15+ ஓடிடி சந்தா.. அள்ளி கொடுக்கும் ஜியோ.. எந்த திட்டம்?
இந்தியா முழுவதும் ஜியோவின் பிராட்பேண்ட் திட்டங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதுவும் கேபிள் டிவிகளை விட அதிகமான சேனல்கள் மற்றும் அனைத்து முக்கியமான ஓடிடி சந்தாவை கொடுக்கின்றன ஜியோ பிராட்பேண்ட் திட்டங்கள். எனவே தான் ஜியோ பிராட்பேண்ட் திட்டங்களை மக்கள் அதிகம் தேர்வு செய்கின்றனர்
அதுவும் தற்போது ஜியோ ரூ.1499 பிராட்பேண்ட் திட்டம் ஆனது எக்கச்சக்க சலுகைகள் வழங்குகிறது. இங்கே இந்த திட்டத்தின் முழு நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஜியோ ரூ.1499 பிராட்பேண்ட் திட்டத்தின் நன்மைகள்(Jio Rs 1499 Broadband Plan Complete Benefits): இந்த ஃபைபர் திட்டம் 300 எம்பிபிஎஸ் டவுன்லோடு மற்றும் அப்லோடு வேகத்தை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் இலவச வாய்ஸ் கால்கள் நன்மையும் உள்ளது. ஆனால் பயனர்கள் லேண்ட்லைன் கருவிகளை தாங்களாகவே வாங்க வேண்டியிருக்கும்.
அதேபோல் ஜியோ ரூ.1499 பிராட்பேண்ட் திட்டத்தில் OTT சலுகைகளைப் பொறுத்தவரை, நெட்பிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் லைட் (Amazon Prime Lite), சோனிலிவ் (Sony Liv), ஜீ5 (ZEE5), டிஸ்கவரி பிளஸ் (Discovery+), ஈராஸ்நவ் (Eros Now), ஷீமாரூமீ (ShemarooMe), எபிக்ஆன் (EPICON), ஈடிவி வின் (ETV Win), தரங் பிளஸ் (Tarang Plus), சன்நெக்ஸ்ட் (Sun NXT), ஹோய்சோய் (Hoichoi), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), ஃபேன் கோட் (FanCode), டாகுபே (DocuBay), டைம்ஸ் பிளே (TimesPlay), ஜியோ ஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி சந்தா கிடைக்கிறது.
குறிப்பாக 1000+ டிவி சேனல்கள் வழங்குகிறது இந்த ஜியோ ரூ.1499 பிராட்பேண்ட் திட்டம். மேலும் ஏர்ஃபைபர் வாடிக்கையாளர்களுக்கு, இந்த திட்டத்தின் மூலம் டேட்டா வரம்பு 1TB ஆகும். ஃபைபர் வாடிக்கையாளர்களுக்கு, டேட்டா வரம்பு 3.3TB ஆகும். அதிக டேட்டா, வாய்ஸ் கால்கள், லைவ் டிவி சேனல்கள் மற்றும் ஓடிடி நன்மைகளை இந்த ஜியோ திட்டம் வழங்குவதால் நம்பி தேர்வு செய்யலாம்.
அதேபோல் ஜியோ நிறுவனம் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டத்தில் கூடுதல் சலுகைகளை வழங்குகிறது. இப்போது இந்த ஜியோ திட்டத்தின் வேலிடிட்டி மற்றும் நன்மைகளைப் பார்க்கலாம்.
ஜியோ ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டம்(Jio rs 3999 prepaid plan) ஆனது தினசரி 2.5ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக 365 நாட்கள் வேலிடிட்டி இந்த திட்டத்தில் கிடைக்கிறது. எனவே நீங்கள் இந்த ஜியோவின் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 912.5ஜிபி டேட்டா வழங்கப்படும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறையும்.
ஃபேன் கோட் (Fan Code) என்கிற தளத்திற்கான இலவச அணுகலை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த திட்டத்தில் கொடுக்கப்படுகிறது. ஜியோஹாட்ஸ்டார் மொபைல் / டிவி சந்தா (JioHotstar Mobile / TV Subscription) இந்த திட்டம் மூலம் பெற முடியும்.
மேலும் இந்த திட்டத்தில் ஜெமினி ப்ரோ சந்தா உள்ளது. இதை 18 மாதங்களுக்கு கஸ்டமர்கள் பயன்படுத்தலாம். குறிப்பாக தினமும் 100 எஸ்எம்எஸ் இதில் கிடைக்கும். மேலும் ஜியோ டிவி (JioTV), ஜியோ ஜியோ கிளவுட் (JioCloud), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) ஆகியவற்றை இந்த ஜியோ ரூ.3999 திட்டத்தில் பயன்படுத்திக்கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications








