மினிமம் ரீசார்ஜ்.. சிம் ஆக்டிவா இருக்கனுமா.. இந்த கட்டணத்த கொடுங்க.. ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா மூனுக்கும்!
ஜியோ சிம் கார்டு (Jio SIM Card) வைத்திருக்கும் ஒவ்வொரு கஸ்டமர்களுக்கும் இனிமேல் இந்த திட்டத்தை பற்றி தெரியாமல் இருக்காது. உங்களது சிம் ஆக்டிவாக (SIM Active) இருக்க வேண்டுமானால், மினிமம் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்திருக்க வேண்டும். இப்போது, திட்டங்களின் விலை மாற்றப்பட்டிருப்பதால், அதை தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. அதேபோல ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்களுக்கும் மினிமம் ரீசார்ஜ் (Minimum Recharge) செய்ய எவ்வளவு வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம்.
ஜியோவின் 4ஜி சேவையின் வருகைக்கு பிறகு சிம் ஆக்டிவாக இருக்கவும் கட்டணங்கள் விதிக்கப்பட்டன. இப்போது, அவை மினிமம் ரீசார்ஜ் திட்டங்களாக மாறிவிட்டன. இந்த மினிமம் ரீசார்ஜ் கட்டணங்களில் எந்த டெலிகாம் நிறுவனம் மிகவும் மலிவாக கொடுக்கிறது என்பதில்தான் இப்போது போட்டி ஏற்பட்டுள்ளது. ஆனால், ஜியோ முன்னிலையில் இருக்கிறது.

ஜியோ மினிமம் ரீசார்ஜ் திட்டம் (Jio Minimum Recharge Plan): ஜியோ நிறுவன கஸ்மடர்களுக்கு ரூ.149 திட்டமானது, இப்போது சிம் ஆக்டிவ் திட்டமாக இருக்கிறது. ஜியோ சேவைகளை தொடர்ந்து பெற வேண்டுமானால், குறைந்தது இந்த விலை திட்டத்தை கஸ்டமர்கள் ரீசார்ஜ் செய்திருக்க வேண்டும். இப்போது, இந்த திட்டத்தின் சலுகைகளை பார்ப்போம்.
இந்த ப்ரீபெய்ட் திட்டமானது, சிம் ஆக்டிவ் திட்டம் என்பதால், அன்லிமிடெட் வாய்ஸ் கால் (Unlimited Voice Call) சலுகை கட்டயாம் கொடுக்கப்படும். அதேபோல நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டாவை ஜியோ கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த 1 ஜிபிக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகையை பெற்று கொள்ள முடிகிறது.
இதுபோக வழக்கமாக கிடைக்கும் 100 எஸ்எம்எஸ் சலுகைகள் வருகிறது. அதேபோல ஜியோ ஆப்களை (Jio Apps) பயன்படுத்த முடியும். ஆகவே, ஜியோ சினிமா (JioCinema), ஜியோடிவி (JioTV) மற்றும் ஜியோ கிளவுட் (JioCloud) ஆகிய ஆப்களின் சந்தா கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு 14 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.

வோடபோன் ஐடியா மினிமம் ரீசார்ஜ் திட்டம் (Vodafone Idea Minimum Recharge Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டம் ஜியோவை விட மலிவான விலைக்கு கிடைக்கிறது. ஆனால், ஜியோ கொடுக்கும் சலுகைகளுக்கு பாதிகூட இதில் கிடைக்கவில்லை. மிகவும் மலிவான சலுகைகளுடன் சிம் கார்டை ஆக்டிவாக வைத்திருக்க வேண்டுமானால், இந்த திட்டத்தை பெற்று கொள்ளலாம்.
ஆகவே, இந்த மினிமம் ரீசார்ஜ் திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 15 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த நாட்களில் ரூ.99 மதிப்பிலான லிமிடெட் வேலிடிட்டி டாக்டைம் கிடைக்கிறது. இந்த டாக்டைம் மூலம் நொடிக்கு 2.5 பைசா வீதம் கால்களுக்கு வசூலிக்கப்படும். அதேபோல 200 எம்பி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது.
ஏர்டெல் மினிமம் ரீசார்ஜ் திட்டம் (Airtel Minimum Recharge Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டமானது, ஜியோவை விட சற்று கூடுதல் விலைக்கு கிடைக்கிறது. ஆனால், விலைக்கு ஏற்ப சலுகைகளும் கூடுதலாகவே இருக்கின்றன. இருப்பினும், குறைந்தபட்சம் ரூ.199 இருந்தால் மட்டுமே ஏர்டெல் சிம் கார்டை தொடர்ந்து ஆக்டிவில் வைத்திருக்க முடியும்.
இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 28 நாட்கள் வேலிடிட்டி வருகிறது. இது ஜியோவை விட 1 மடங்கு அதிகமாகும். அதேபோல 2 ஜிபி டேட்டா சலுகையை பெற்று கொள்ளலாம். மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகைகளை இந்த மினிமம் திட்டம் கொடுக்கிறது.

அதேபோல 100 எஸ்எம்எஸ் சலுகையானது, தினசரிக்கு கிடைக்கிறது. மேற்கூறிய திட்டங்கள் அல்லது அதற்கு மேலான திட்டங்களை ரீசார்ஜ் செய்தால் மட்டுமே உங்களது சிம் கார்டுகளை தொடர்ந்து ஆக்டிவில் வைத்திருக்க முடியும். இதில் ஏர்டெல் நிறுவனம் மற்ற நிறுவனங்களைவிட கூடுதல் விலைக்கு திட்டத்தை கொடுக்கிறது.


Click it and Unblock the Notifications








