Jio ரீசார்ஜ்: 150 ரூபாய்க்குள் தினசரி 1GB டேட்டா.. அன்லிமிடெட் கால்.. SMS வேணுமா? இந்த 2 பிளான் தான் பெஸ்ட்..
டெலிகாம் துறையில் நடக்கும் போட்டிகளுக்கு மத்தியில் கிங்காக விளங்கும் ஒரு நிறுவனம் என்றால், நாம் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனத்தை குறிப்பிடலாம். ஜியோ (Jio) தனது வாடிக்கையாளர்களுக்கு பல விலை வரம்பில் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது.
என்ன தான் பல விலை வரம்புகளில் ஜியோ நிறுவனம் பல்பல திட்டங்களை வழங்கி வந்தாலும், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் ஜியோவிடம் இருந்து கிடைக்கும் மிகவும் மலிவான விலை திட்டம் மட்டுமே அதிகமாக ரீசார்ஜ் செய்யப்பட்டுள்ளன. இதை விலை வரம்பில் ஏர்டெல் (Airtel), வோடபோன்-ஐடியா (Vi) மற்றும் பிஎஸ்என்எல் (BSNL) போன்ற நிறுவனங்களும் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கினாலும் ஜியோ தனித்து நிற்கிறது.

ஜியோ 1 மாத வேலிடிட்டிற்குள் கிடைக்கும் 2 மலிவு விலை திட்டங்களை தனது போர்ட்போலியோவில் கொண்டுள்ளது. இந்த 2 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் (Prepaid recharge) திட்டங்களும் பயனர்களுக்கு தினசரி டேட்டா நன்மையை தருவதோடு, அன்லிமிடெட் வாய்ஸ் கால் (voice call) நன்மை மற்றும் இலவச எஸ்எம்எஸ் (SMS) நன்மைகளையும் வழங்குகிறது. இது மிகவும் மலிவு விலை திட்டம் என்பதனால், 1 மாதத்திற்கும் குறைவான வேலிடிட்டி உடன் வருகின்றன.
ஜியோ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் (Jio prepaid recharge):
இங்கு நாம் பார்க்கவிருக்கும் ஜியோ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் (Jio prepaid recharge) திட்டங்கள் முறையே ரூ.149 மற்றும் ரூ.179 என்ற விலையில் வருகின்றன. இந்த 2 திட்டங்களும் என்னென்ன நன்மைகளை வழங்குகிறது என்று இப்போது தெரிந்துகொள்ளலாம். உங்கள் பாக்கெட் பணத்திற்கு அதிக செலவு வைக்காத ப்ரீபெய்ட் திட்டத்தை தினசரி டேட்டா நன்மையுடன் தேடுகிறீர்கள் என்றால், இந்த 2 திட்டத்தை கட்டாயம் ட்ரை செய்யவும்.
ஜியோ ரூ 149 ப்ரீபெய்ட் பிளான் (Jio Rs 149 Prepaid Plan):
ஜியோவின் இந்த ரூ. 149 ப்ரீபெய்ட் திட்டம் தான் ஜியோவிடம் இருந்து கிடைக்கும் மிகவும் மலிவான விலை கொண்ட திட்டமாகும். இந்த திட்டம் தினசரி 1ஜிபி டேட்டா (data) நன்மையை வழங்குகிறது. இத்துடன் இந்த திட்டம் பயனர்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை மற்றும் எஸ்எம்எஸ் (SMS) நன்மையுடன் வருகிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 20 நாட்களாகும். இந்த 20 நாளில் உங்களுக்கு ஒட்டுமொத்தமாக 20ஜிபி டேட்டா கிடைக்கிறது.
ஜியோ ரூ 179 ப்ரீபெய்ட் பிளான் (Jio Rs 179 Prepaid Plan):
ஜியோவின் அடுத்த 2வது மலிவு விலை திட்டமாக ரூ.179 ப்ரீபெய்ட் திட்டம் உள்ளது. இந்த திட்டமும் தினசரி 1ஜிபி டேட்டா (1gb daily data) நன்மையுடன் வருகிறது.இதுவும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மையுடன் 100 இலவச எஸ்எம்எஸ் நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 24 நாளாகும். இந்த திட்டத்தின் மூலம் உங்களுக்கு 24 ஜிபி டேட்டா மொத்தமாக கிடைக்கிறது.
இந்த ரூ.149 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் மற்றும் ரூ.179 ப்ரீபெய்ட் திட்டம் இரண்டுமே ஜியோவின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கம் மற்றும் ஜியோ ஆப்ஸ் வழியாக ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன. இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை பேடியம் (Paytm) வழியாகவும் நீங்கள் ரீசார்ஜ் செய்து மகிழலாம். கம்மி விலையில் தினசரி டேட்டா நன்மையுடன் வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளை தேடுபவர்களுக்கு இந்த திட்டம் மிகவும் சிறந்தது.


Click it and Unblock the Notifications