Home
News

ஒரே பிளான் 14 OTT.. அன்லிமிடெட் கால்ஸ் | டேட்டா.. Airtel-ஐ தோற்கடிக்க அம்பானி வெளியிட்ட புது Jio பிளான்..

ஜியோ பயனர்களுக்கு அற்புதமான நன்மைகளை வழங்கும் 4 புதிய திட்டங்களை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டங்களின் சிறப்பே இது 14 வகையான OTT நன்மையை வழங்குகிறது. OTT நன்மைகளை விரும்பும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் இந்த திட்டங்களை தேர்வு செய்யலாம்.

ஜியோ நிறுவனம் இப்போது ரூ. 148, ரூ. 398, ரூ.1198 மற்றும் ரூ. 4498 விலையில் 4 புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை மற்றும் டேட்டா நன்மைகளை வழங்குகிறது. இத்துடன் கூடுதல் சிறப்பு இலவச நன்மைகளையும் ஜியோ நிறுவனம் இப்போது வழங்கு வருகிறது.

ஒரே பிளான் 14 OTT.. அன்லிமிடெட் கால்ஸ் | டேட்டா..

டெலிகாம் வட்டத்தில் நடைபெறும் போட்டியை சமாளிக்க ஜியோ நிறுவனம் புதிய திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் இருக்கிறது. அதன் பழைய திட்டங்களில் சில மேம்படுத்தல்களையும் மேற்கொண்டு வருகிறது. ஏர்டெல் உடனான போட்டியை சமாளிக்க நிறுவனம் இந்த 4 புதிய திட்டங்களை இப்போது அறிமுகம் செய்துள்ளது போல் தெரிகிறது.

மக்களை ஈர்க்கும் புதிய Jio திட்டம்:

இதில் அதிக கவனத்தை ஈர்த்த திட்டமாக ரூ.1198 திட்டம் திகழ்கிறது. இந்த புதிய ப்ரீபெய்ட் திட்டம் அட்டகாசமான நன்மைகளை மொத்த பேக்கேஜாக ஒரே திட்டத்தில் வழங்கியுள்ளது. இந்த திட்டம் தினசரி 2GB டேட்டா நன்மையை வழங்குகிறது. இதில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை மற்றும் 100 SMS நன்மையுடன் வருகிறது.

இந்த திட்டத்தை தேர்வு செய்யும் பயனர்களுக்கு கூடுதல் இலவச டேட்டா நன்மையாக 18GB டேட்டா கிடைக்கிறது. இதை மூன்று இலவச டேட்டா வவுச்சர் மூலம் ஜியோ ஆப்ஸ் வழியாக நீங்கள் கிளைம் செய்துகொள்ளலாம். இந்த திட்டத்துடன் 14 வகையான OTT சந்தாவுக்கான அணுகல் கிடைக்கிறது. இதில் 3 மாத இலவச சந்தா மற்றும் 84 செல்லுபடியாகும் சந்தாவுடன் OTT நன்மைகளை கிடைக்கிறது.

14 OTT நன்மை:

இந்த திட்டத்தை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கும் சோனி லைவ் (SonyLIV), ஜீ5 (ZEE5), ஜியோ சினிமா பிரீமியம் (JioCinema Premium), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரி பிளஸ் (Discovery+), சன்நெக்ஸ்ட் (SunNXT), கண்சா லங்கா (Kanchha Lannka), பிளானட் மராத்தி (Planet Marathi), சாவ்பால் (Chaupal), டாகுப்பே (DocuBay), எபிக் ஆன் (EPIC On), மற்றும் ஹொய்ச்சொய் (Hoichoi) போன்ற சந்தா அணுகல் கிடைக்கிறது.

இதில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 3 மாத மொபைல் சந்தா நன்மையுடன் வருகிறது. இத்துடன் கிடைக்கும் அமேசான் பிரைம் சந்தா 84 நாள் வேலிடிட்டி உடன் வருகிறது. அதேபோல் 84 நாள் செல்லுபடியாகும் ஜியோ சினிமா பிரீமியம் சந்தாவுடன் வருகிறது. அன்லிமிடெட் ட்ரூ 5ஜி (Unlimited True 5G) அம்சத்துடன் வருகிறது. இதேபோல், மற்ற ரீசார்ஜ் திட்டங்களும் பல நன்மைகளை வழங்குகிறது.

நீங்கள் குறைந்த விலையில் சிறப்பான நன்மையை எதிர்பார்க்கிறீர்கள் என்றால், ரூ. 148 மற்றும் ரூ. 398 விலை கொண்ட திட்டங்களை ரீசார்ஜ் செய்யலாம். இந்த திட்டங்களின் நன்மையை பற்றி அறிந்துகொள்ள ஜியோவின் அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தை பார்வையிடவும்.

Best Mobiles in India

English summary
Jio Rs 148 Rs 398 Rs 1198 Rs 4498 Prepaid Recharge Plans In India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X