Home
News

அடுத்து இதுக்கா.. மினிமம் ரூ.148 கொடுத்தாதான்.. இப்போதைக்கு 10 ஜிபி டேட்டா.. 12 ஓடிடி சந்தா.. அதுக்கப்புறம்?

ஜூலை 3ஆம் தேதிக்கு பிறகு ஜியோ (Jio) ப்ரீபெய்ட் (Prepaid) மற்றும் போஸ்ட்பெய்ட் (Postpaid) திட்டங்களின் கட்டணங்கள் உயருகின்றன (Tariff Hike). இதே சூட்டில் ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியாவும் (Vodafone Idea) தங்களது திட்டங்களில் விலை உயர்வை அறிவித்துவிட்டன. இது ஒருபுறமிருக்க ஓடிடி பிரியர்கள் தங்களுக்கு வழங்கப்படும் திட்டங்களில் ஏதாவது அதிகரிப்பு இருக்குமா என்ற பதற்றத்தில் இருக்கின்றனர். இப்போதைக்கு ஜியோவில் கிடைக்கும் மலிவான ஓடிடி திட்டங்களை பார்த்துவிட்டு, விலை உயர வாய்ப்புள்ளதா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்வோம்.

ஜியோ ரூ 148 திட்ட விவரங்கள் (Jio Rs 148 Plan Details): இதுவொரு டேட்டா வவுச்சர் திட்டமாகும். ஆகவே, இந்த திட்டத்தின் சலுகைகளை பெற பேஸ் ஆக்டிவ் திட்டம் இருக்க வேண்டும். இருப்பினும், டேட்டா மட்டுமல்லாமல், 12 ஓடிடி ஆப்களின் சந்தாவையும் பெற்று கொள்ளலாம். ஆகவே, இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 10 ஜிபி டேட்டா கிடைக்கிறது.

அடுத்து இதுக்கா.. மினிமம் ரூ.148 கொடுத்தா? இப்போதைக்கு ஓடிடி+டேட்டா!

இந்த 10 ஜிபிக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. ஓடிடி சலுகையை பார்க்கையில், ஜியோசினிமா பிரீமியம் (JioCinema Premium) சந்தா கிடைக்கிறது. மேலும், சோனிலிவ் (SonyLIV), ஜீ5 (ZEE5), சன்நெக்ஸ்ட் (SunNXT), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரி பிளஸ் (Discovery+) சந்தா கொடுக்கப்படும்.

மேலும், கான்ச்சா லங்கா (Kanchha Lannka), பிளானட் மராத்தி (Planet Marathi), சாவ்பால் (Chaupal), டாகுபே (Docubay), எபிக் ஆன் (EPIC ON), ஹோய்சோய் (Hoichoi) மற்றும் ஜியோ டிவி (JioTV) பீரிமியம் சந்தாவும் கிடைக்கிறது. இந்த திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இதே சலுகைகள் ஆக்டிவ் திட்டமின்றி வேண்டுமானால், பின்வரும் மலிவான திட்டம் சரியாக இருக்கும்.

ஜியோ ரூ 398 திட்ட விவரங்கள் (Jio Rs 398 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு ஆக்டிவ் திட்டம் இருக்க வேண்டியது கிடையாது. ஆகவே, டேட்டா, ஓடிடி சலுகைகள் மட்டுமல்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை கிடைக்கிறது. இதில் 2 ஜிபி தினசரி டேட்டா மற்றும் 6 ஜிபி கூடுதல் டேட்டா சலுகை வருகிறது.

இந்த டேட்டா சலுகைகள் போக 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா மற்றும் ஜியோ 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகளில் ஆஃபர் பெறும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை கிடைக்கிறது. மேலும், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் மற்றும் 100 எஸ்எம்எஸ்களை இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் செய்து கொள்ளலாம்.

இந்த சலுகைகள் போக 13 ஓடிடி ஆப்களின் சந்தா கிடைக்கிறது. ஆகவே, ஜியோசினிமா பிரீமியம், சோனிலிவ், ஜீ5, சன்நெக்ஸ்ட், லயன்ஸ்கேட் பிளே, டிஸ்கவரி பிளஸ், கான்ச்சா லங்கா, பிளானட் மராத்தி, சாவ்பால், டாகுபே, எபிக் ஆன், ஹோய்சோய், ஜியோ டிவி மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் விரும்பும் ஃபேன்கோட் சந்தாவும் கிடைக்கிறது.

இந்த வாய்ஸ் கால்கள், டேட்டா, ஓடிடி மற்றும் அன்லிமிடெட் 5ஜி சலுகைகளை 28 நாட்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். அதிகப்படியான ஓடிடி சந்தாவோடு 5ஜி டேட்டா சலுகையானது, மலிவான விலையில் வேண்டுமானால், இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதில் முதலாவதாக பார்த்த டேட்டா வவுச்சர் திட்டத்தின் விலை அதிகரிக்கப்பட வாய்ப்பில்லை. ஏனென்றால், அதற்கு பேஸ் ஆக்டிவ் திட்டம் தேவைப்படுகிறது.

ஆகவே, பேஸ் திட்டத்திலேயே விலை உயர்வு அடங்கிவிடும். ஆனால், ஓடிடி சலுகையோடு வாய்ஸ் கால்கள் மற்றும் டேட்டா கிடைக்கும் திட்டங்களின் விலை அதிகரிக்கும். அதேநேரத்தில் 2 ஜிபிக்கும் குறைவாக திட்டங்கள் இருந்தால் 5ஜி டேட்டா சலுகையும் கிடைக்காது. ஓடிடி நிறுவனங்கள் தங்களது விலையை உயர்த்தாத வரையில் அது தொடர்பான திட்டங்களில் மாற்றம் இருக்காது. ஆனால், இது வெறும் ஓடிடிக்கு மட்டுமே பொருந்தும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 148 Plan With 12 OTT Subscription, 10GB Data Check Most Affordable JioCinema Premium Plans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X