அம்பானி ஆட்டத்துல சிக்கியாச்சு.. மாதம் ரூ.374 செலவில் 365 நாட்கள் வேலிடிட்டி.. மிஸ் ஆகாது.. திட்டம் அப்படி!
டெலிகாம் மார்கெட்டே அதிரும்படி மாதத்துக்கு வெறும் ரூ.374 செலவில் 365 நாட்கள் வேலிடிட்டியோடு அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் போன்ற 14 ஓடிடி ஆப்கள் மட்டுமல்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ், டேட்டா போன்ற எந்தவொரு சலுகைகளும் மிஸ் ஆகாமல் ஒரு திட்டத்தை ஜியோ வழங்குகிறது.
ஜியோ ரூ 148 திட்ட விவரங்கள் (Jio Rs 148 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் ஓடிடி சலுகை (OTT Benefits) மட்டுமல்லாமல், டேட்டாவும் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், 10 ஜிபி லம்ப்-சம் டேட்டா (Lump-sum Data) சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த டேட்டாவை வேலிடிட்டி நாட்களில் எப்போது வேண்டுமானாலும், முழுவதும் பயன்படுத்தலாம்.

இந்த டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம். இதுபோக 12 ஓடிடி தளங்களின் சப்ஸ்கிரிப்ஷன் வழங்கப்படுகிறது. ஆகவே, சோனிலிவ் (SonyLIV), ஜீ5 (ZEE5), ஜியோசினிமா பிரீமியம் (JioCinema Premium), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரி பிளஸ் (Discovery+), சன்நெக்ஸ்ட் (SunNXT) ஆகியவற்றை பயன்படுத்தலாம்.
அதேபோல கான்ச்சா லங்கா (Kanchha Lannka), பிளானட் மராத்தி (Planet Marathi), சௌபால் (Chaupal), டாக்குபே (DocuBay), எபிக்ஆன் (EPIC On), ஹோய்சோய் டிவி (Hoichoi TV) ஆகியவற்றின் சப்ஸ்கிரிப்ஷனும் கிடைக்கிறது. இதில் ஜியோசினிமா பிரீமியம் சப்ஸ்கிரிப்ஷனை பெற மைஜியோ (MyJio) ஆப்பில் கொடுக்கப்படும் கூப்பனை பயன்படுத்த வேண்டும்.
மற்ற சப்ஸ்கிரிப்ஷன்கள் உங்களுக்கு ஜியோ நம்பரை லாகின் செய்தாலே கிடைத்துவிடும். இந்த திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இவ்வளவு மலிவான விலையில், 12 ஓடிடி தளங்களை பயன்படுத்த முடிவதால், நல்ல சலுகை கொண்ட திட்டமாகவே இருக்கிறது. ஒருவேளை உங்களுக்கு கூடுதல் வேலிடிட்டி வேண்டுமானால், ஜியோ ரூ 1198 திட்டத்தை தேர்ந்தெடுங்கள்.

ஜியோ ரூ 1198 திட்ட விவரங்கள் (Jio Rs 1198 Plan Details): இந்த திட்டத்தில் ஓடிடி சலுகைகளோடு டேட்டா, வாய்ஸ் கால்கள் சலுகையும் வழங்கப்படுகிறது. ஆகவே, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா வீதம் மொத்தமகா 168 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம்.
அதுமட்டுமல்லாமல், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்களை செய்து கொள்ளலாம். இந்த சலுகைகள் போக முந்தைய திட்டத்தில் கிடைக்கும் 12 ஓடிடி சலுகைகள் மட்டுமல்லாமல், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ மொபைல் சப்ஸ்கிரிப்ஷன் கூடுதலாக கிடைக்கிறது.
இந்த திட்டத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஆப்பை 90 நாட்களுக்கும், மற்ற ஆப்களின் சப்ஸ்கிரிப்ஷனை 84 நாட்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 84 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இதே சலுகைகள் வருடம் முழுவதும் தேவைப்பட்டால், ஜியோ ரூ 4498 திட்டத்தை பயன்படுத்துங்கள்.
ஜியோ ரூ 4498 திட்ட விவரங்கள் (Jio Rs 4498 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 365 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. தினசரி 2 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 730 ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும். அதேபோல நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை செய்துகொள்ளலாம். அதுமட்டுமல்லாமல், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை செய்து கொள்ள முடியும்.
முந்தை திட்டத்தை போலவே சோனிலிவ், ஜீ5, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஜியோசினிமா பிரீமியம், அமேசான் பிரைம் வீடியோ மொபைல் போன்ற 14 ஓடிடி சப்ஸ்கிரிப்ஷன் கொடுக்கப்படுகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கான மாதாந்திர செலவு, வெறும் ரூ.374 மட்டுமேயாகும். ஆகவே, ஆண்டு முழுவதும் டேட்டா, வாய்ஸ் கால்கள் சலுகையோடு பெரும்பாலான ஓடிடி ஆப்களின் சப்ஸ்கிரிப்ஷன் கிடைப்பதால், வேறு எந்தவொரு திட்டமும் வாடிக்கையாளர்களுக்கு தேவைப்படாது.


Click it and Unblock the Notifications








