Jio-வின் மறைமுக சம்பவம்.. 12 OTT நன்மை உடன் 2 திட்டம்.. எது உண்மையில் லாபமானது? சாமர்த்தியமா இதை சூஸ் பண்ணுங்க
ஜியோ (Jio) நிறுவனம், புதிதாக இப்போது ரூ.148 விலையில் 12 OTT நன்மை கிடைக்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. உண்மையில், இது லாபகரமான திட்டமா? அல்லது ஜியோவின் ரூ.398 திட்டம் லாபமானதா என்று பார்க்கப்போகிறோம்.
ஜியோ நிறுவனம் இன்று அதன் ப்ரீபெய்ட் திட்ட வரிசையில் புதிதாக ஜியோ ரூ.148 திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இது பயனருக்கு டேட்டா நன்மையை வழங்குவதோடு 12 வகையான வெவ்வேறு OTT தளத்திற்கான சந்தாஅணுகலையும் வழங்குகிறது. இந்த திட்டத்தில் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது? இது உண்மையில் சிறந்ததா? என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க.

ஜியோ தற்போது அறிமுகம் செய்துள்ள இந்த திட்டம் ஒரு டேட்டா வவுச்சர் திட்டமாகும். இந்த திட்டத்துடன் உங்களுக்கு வாய்ஸ் கால் நன்மை மற்றும் எஸ்எம்எஸ் போன்ற நன்மைகள் கிடைக்காது. ஆனால், இந்த ரூ.148 புதிய திட்டம் உங்களுக்கு 10ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இத்துடன் ஜியோடிவி பிரீமியம் (JioTV Premium) சந்தாவுக்கான அணுகளை வழங்குகிறது.
ஜியோ ரூ.148 திட்டம் (Jio Rs 148 Plan):
ஜியோடிவி பிரீமியம் சாந்தாவின் கீழ் 12 OTT சேனலுக்கான அணுகலை ஒரே லாகின் கீழ் வழங்குகிறது. இது இந்த டேட்டா வவுச்சர் திட்டம் 28 நாள் வேலிடிட்டி உடன் வருகிறது. இதில், சோனி லைவ் (SonyLIV), ஜீ5 (ZEE5), ஜியோ சினிமா பிரீமியம் (JioCinema Premium), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரி பிளஸ் (Discovery+), சன்நெக்ஸ்ட் (SunNXT) சந்தா போன்றவற்றை வழங்குகிறது.
இத்துடன் கூடுதல் சேர்ப்பாக, கண்சா லங்கா (Kanchha Lannka), பிளானட் மராத்தி (Planet Marathi), சாவ்பால் (Chaupal), டாகுப்பே (DocuBay), எபிக் ஆன் (EPIC On), மற்றும் ஹொய்ச்சொய் (Hoichoi) போன்ற சேனல் சந்தாவுடன் வருகிறது. இந்த திட்டத்தை செயல்பாட்டில் வைக்க உங்களுக்கு ஒரு அடிப்படை திட்டம் இருக்க வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது.

ஜியோ ரூ.398 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 398 Prepaid Plan):
சரி, இப்போது மறுபுறம் ஜியோ வழங்கும் 12 OTT நன்மையுடன் கிடைக்கும் ஜியோ ரூ.398 ப்ரீபெய்ட் திட்டத்தை பற்றி பார்க்கலாம். இதுவொரு வழக்கமான ப்ரீபெய்ட் திட்டம் என்பதனால், இதில் உங்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா நன்மை, வாய்ஸ் கால் நன்மை, தினசரி 100 எஸ்எம்எஸ் போன்ற நன்மைகள் கிடைக்கிறது. இதன் வேலிடிட்டியும் கூட 28 நாட்களாகும்.
இந்த திட்டத்துடன் ஜியோ வழக்கமாக வழங்கும் கூடுதல் ஜியோ நன்மைகளை வழங்குகிறது. இதில் ஜியோடிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) போன்ற நன்மைகளை நிறுவனம் வழங்குகிறது. இதற்கு முன்பு நாம் பார்த்த ரூ.148 திட்டத்தில் கிடைக்கும் ஜியோடிவி பிரீமியம் (JioTV Premium) சந்தாவுடனான 12 OTT சேனலுக்கான அணுகலை வழங்குகிறது.
இந்த திட்டத்தை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கும் சோனி லைவ் (SonyLIV), ஜீ5 (ZEE5), ஜியோ சினிமா பிரீமியம் (JioCinema Premium), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரி பிளஸ் (Discovery+), சன்நெக்ஸ்ட் (SunNXT), கண்சா லங்கா (Kanchha Lannka), பிளானட் மராத்தி (Planet Marathi), சாவ்பால் (Chaupal), டாகுப்பே (DocuBay), எபிக் ஆன் (EPIC On), மற்றும் ஹொய்ச்சொய் (Hoichoi) போன்ற சந்தா அணுகல் கிடைக்கிறது.
இரண்டு திட்டங்களை ஒப்பிட்டு பார்க்கையில், ரூ.398 திட்டம் தான் லாபகரமான நன்மைகளை வழங்குகிறது. ரூ.148 திட்டம் வெறும் 10ஜிபி டேட்டாவை மட்டும் வழங்குகிறது. இதில் வாய்ஸ் கால் மற்றும் SMS போன்ற நன்மை கிடைக்காது. ஆனால், ரூ.398 திட்டம் தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்கி, மொத்தமாக 56ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இத்துடன் அன்லிமிடெட் ட்ரூ 5ஜி நன்மை, வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் நன்மை போன்றவை கிடைக்கிறது. இறுதியில் ரூ.398 லபமானதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications








