இறங்கி வந்த அம்பானி.. ரூ.139-க்கு இறக்கிய திட்டம்.. Jio-க்கு இதுதான்.. வேலிடிட்டிக்கு பஞ்சமில்ல.. 4 திட்டம்!
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் கட்டண உயர்வுக்கு பிறகு ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களில் பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது. இப்போது, ரூ.19 முதல் ரூ.139 வரையில் 4 திட்டங்களை கஸ்டமர்களுக்கு கொடுத்துள்ளது. இனிமேல் டேட்டா சலுகை விரும்பும் கஸ்டமர்களுக்கு ஆக்டிவ் திட்ட வேலிடிட்டி உடன் இந்த டேட்டா திட்டங்கள் மட்டுமே ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன. இந்த டேட்டா பூஸ்டர் திட்டங்கள் (Data Booster Plans) குறித்த முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்த டேட்டா திட்டங்கள் பார்தி ஏர்டெல் (Bharati Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்களால் கொடுக்க முடியாத சலுகைகளை கொடுக்கின்றன. ஏனென்றால், இந்த திட்டங்களுக்கு உங்களது ஆக்டிவ் திட்டத்தின் வேலிடிட்டி வருகிறது. ஆகவே, பேஸ் திட்டத்தின் (Base Plan) வேலிடிட்டி வரையில் இந்த திட்டங்களின் டேட்டாவை பயன்படுத்த முடியும்.

இந்த டேட்டா பூஸ்டர் திட்டங்கள் ரூ.19, ரூ.29, ரூ.69 மற்றும் ரூ.139 ஆகிய 4 விலைகளில் கிடைக்கின்றன. ஆக்டிவ் திட்டத்தின் டேட்டா முடிந்த பிறகு கூடுதல் டேட்டா சலுகை தேவைப்படும் கஸ்டமர்களுக்கு இந்த திட்டங்கள் பக்கா தேர்வாக இருக்கும். இப்போது ஒவ்வொரு திட்டத்திலும் எவ்வளவு ஜிபி டேட்டா கிடைக்கிறது என்பதை பார்ப்போம்.
ரூ.19 மதிப்பிலான டேட்டா பூஸ்டர் திட்டத்தில் 1 ஜிபி டேட்டா மற்றும் ஆக்டிவ் திட்ட வேலிடிட்டி கிடைக்கிறது. 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகையும் வருகிறது. அதேபோல ரூ.29 மதிப்பிலான டேட்டா பூஸ்டர் திட்டத்தில் 2 ஜிபி டேட்டா, ஆக்டிவ் திட்ட வேலிடிட்டி மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகை கிடைக்கிறது.
இதற்கு அடுத்தபடியான பெரும்பாலான கஸ்டமர்கள் ரீசார்ஜ் செய்யும் ரூ.69 மதிப்பிலான டேட்டா பூஸ்டர் திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்தில் 6 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். முந்தைய திட்டங்களை போலவே ஆக்டிவ் திட்ட வேலிடிட்டி மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகையை கஸ்டமர்கள் பெற்று கொள்ள முடியும்.
இறுதியாக அதிகபட்ச விலை கொண்ட டேட்டா பூஸ்டர் திட்டமாக ரூ.139 மதிப்பிலான திட்டம் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் 12 ஜிபி டேட்டா சலுகையை பெறலாம். முந்தைய திட்டங்களை போலவே ஆக்டிவ் திட்டத்தின் வேலிடிட்டியை பெற்று கொள்ளலாம். கூடுதலாக 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகையும் கிடைக்கிறது.
ஒருவேளை உங்களுக்கு கூடுதல் டேட்டா மட்டுமல்லாமல், ஓடிடி ஆப்களின் சந்தாவும் வேண்டுமானால், ரூ.175 மதிப்பில் கிடைக்கும் டேட்டா திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதுவொரு டேட்டா பேக் திட்டமாகும். ஆகவே, ஆக்டிவ் திட்டத்தின் வேலிடிட்டி கிடைக்காது. குறிப்பிட்ட நாளுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
ஜியோ ரூ 175 திட்ட விவரங்கள் (Jio Rs 175 Plan Details): இந்த திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி மட்டுமே கிடைக்கிறது. ஆனால், டேட்டா மட்டுமல்லாமல் 12 ஓடிடி ஆப்களின் சந்தாவை பெற்று கொள்ள முடியும். ஆகவே, இந்த டேட்டா பேக் (Data Pack) திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் 10 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம்.
இந்த திட்டத்துக்கும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகை கிடைக்கிறது. இதுபோக சோனிலிவ் (Sony LIV), ஜீ5 (ZEE5), ஜியோசினிமா பிரீமியம் (JioCinema Premium), பிளானட் மராத்தி (Planet Marathi), சாவ்பால் (Chaupal), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரி பிளஸ் (Discovery+), எபிக் ஆன் (EPIC ON), ஹோய்சோய் (Hoichoi) சந்தா கிடைக்கிறது.
மேலும், சன்நெக்ஸ்ட் (Sun NXT) மற்றும் கான்ச்சா லங்கா (Kanchha Lannka), பிளானட் மராத்தி (Planet Marathi), சாவ்பால் (Chaupal) மற்றும் டாகுபே (DocuBay) ஆப்களின் சந்தாவும் கொடுக்கப்படுகிறது. ஆகவே, கூடுதல் டேட்டா திட்டங்களுக்கு செல்லும்போது, டேட்டாவின் அளவுக்கு ஏற்ப சலுகைகளை கொண்ட இந்த திட்டங்களை தேர்ந்தெடுங்கள்.


Click it and Unblock the Notifications








