Home
News

Jio-வுக்கு இதுதான் சாய்ஸ்.. 2 ப்ரீபெய்ட் திட்டங்கள்.. இதுல ஒன்னுதான் ஓடிடி சலுகை..அன்லிமிடெட் வாய்ஸ்.. டேட்டா!

ரிலையன்ஸ் ஜியோவின் (Reliance Jio) கட்டண உயர்வுக்கு பிறகு நெட்பிளிக்ஸ் சந்தா (Netflix Subscription) கொடுக்கப்பட்ட திட்டங்களின் விலையும் அதிரடியாக மாற்றப்பட்ட விட்டன. இப்போது, புதிய நெட்பிளிக்ஸ் சந்தா திட்டங்களானது, குறைந்தது ரூ 1299 விலைக்கே கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது. ஆனால், சலுகைகளும் பின்னிப்பெடல் எடுத்துள்ளது. அதேபோல வேலிடிட்டியும் பட்டையை கிளப்புகிறது. இப்போதைக்கு 2 ப்ரீபெய்ட் திட்டங்களில் (Prepaid Plan) மட்டுமே நெட்பிளிக்ஸ் சந்தாவை பெற்று கொள்ள முடியும். ஆகவே, அந்த ப்ரீபெய்ட் திட்டங்களின் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

நெட்பிளிக்ஸ் சந்தாவை பொறுத்தவரையில், ரூ 1299 மற்றும் ரூ 1799 ஆகிய 2 ப்ரீபெய்ட் திட்டங்களில் கொடுக்கப்படுகிறது. இந்த 2 திட்டங்களும் 3 மாதங்களுக்கான வேலிடிட்டியை கொடுக்கின்றன. அதேபோல அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையையும் வைத்திருக்கின்றன. இதுபோக தினசரிக்கு கிடைக்கும் மற்ற சலுகைகளும் வழக்கம் போல கிடைக்கிறது.

Jio-வுக்கு இதுதான் சாய்ஸ்.. 2 ப்ரீபெய்ட் திட்டங்கள்.. இதுல ஒன்னுதான்!

ஜியோ ரூ 1299 திட்ட விவரங்கள் (Jio Rs 1299 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் டேட்டா, வாய்ஸ் கால்கள், ஜியோ ஆப்கள் மற்றும் ஓடிடி சந்தா போன்ற பல்வேறு சலுகைகள் கிடைக்கிறது. இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு நெட்பிளிக்ஸ் மொபைல் (Netflix Mobile) சந்தா கொடுக்கப்படுகிறது. இந்த சந்தாவை மூன்று மாதங்களுக்கு பயன்படுத்தலாம்.

இந்த திட்டத்தின் வேலிடிட்டியை பார்க்கையில், 84 நாட்களுக்கு கிடைக்கிறது. இந்த 3 மாதங்களில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STS) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) செய்து கொள்ளலாம். வழக்கமாக கிடைக்கும் 100 எஸ்எம்எஸ் சலுகையும் தினசரிக்கு கிடைக்கிறது. இந்த திட்டத்தில் 2 ஜிபி டேட்டா சலுகை வருகிறது.

ஆகவே, தினசரிக்கு 2 ஜிபி வீதம் 168 ஜிபி டேட்டாவை மொத்தமாக ஜியோ கஸ்டமர்கள் பெற்று கொள்ள முடியும். இந்த டேட்டா தீர்ந்துவிட்டால், 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. மேலும், ஜியோ அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Jio Unlimited 5G Data) சலுகையை பெற்று கொள்ளலாம். மேலும் ஜியோ ஆப்ஸ் (Jio Apps) சலுகை கிடைக்கிறது.

நெட்பிளிக்ஸ் மட்டுமல்லாமல், ஜியோசினிமா (JioCinema) மற்றும் ஜியோடிவி (JioTV) சலுகை வருகிறது. அதேபோல ஜியோகிளவுட் (JioCloud) சலுகையையும் பெற்று கொள்ளலாம். இதேபோன்ற சலுகைகளுடன் கூடுதல் டேட்டா வேண்டுமானால், ரூ 1799 திட்டத்தை ஜியோ கஸ்டமர்கள் ஆப்ஷனில் எடுக்கலாம். விலைக்கு ஏற்ப கூடுதல் சலுகைகள் இருக்கின்றன.

ஜியோ ரூ 1799 திட்ட விவரங்கள் (Jio Rs 1799 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கும் 84 நாட்கள் வேலிடிட்டி மற்றும் 3 மாதங்களுக்கான நெட்பிளிக்ஸ் மொபைல் சந்தா கொடுக்கப்படுகிறது. அதேபோல தினசரி டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையும் கொடுக்கபடுகிறது. ஆகவே, 3 ஜிபியை தினசரிக்கு பயன்படுத்தலாம்.

மொத்தமாக 252 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். முந்தைய திட்டத்தை போலவே 3 ஜிபிக்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகை மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. அதேபோல அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகை இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கும் பொருந்தும்.

மேலும், 100 எஸ்எம்எஸ் சலுகைகள் மற்றும் ஜியோசினிமா மற்றும் ஜியோடிவி, ஜியோகிளவுட் சலுகைகள் கிடைக்கின்றன. மேற்கூறிய 2 திட்டங்களில் மட்டுமே நெட்பிளிக்ஸ் சந்தா கொடுக்கபடுகிறது. இந்த சந்தாவின் மூன்று மாதங்களுக்கான மதிப்பு ரூ 447 ஆக இருக்கிறது. ஆகவே, இந்த திட்டங்கள் சலுகைகளுக்கு ஏற்ப கூடுதல் விலை கொண்டிருக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 1299 Plan With 84 Days Validity, Unlimited Voice Calls, 3GB Data Netflix Subscription
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X