வெச்சாரு அம்பானி.. மாதாந்திரம் ரூ.102 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. ஓடிடி சந்தா!
ஜியோ நிறுவனமானது, அதனுடைய எந்தவொரு கஸ்டமரும் மற்ற டெலிகாம் நிறுவனங்களுக்கு மாறாமல் இருக்கவும், அதே நேரத்தில் மற்ற நிறுவனங்களின் கஸ்டமர்களை தங்களது பக்கம் சாய்க்கவும் யாரும் கொடுக்க முடியாத விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை களமிறக்கி வருகிறது. இந்த திட்டங்களில் மாதாந்திரம் வெறும் ரூ.102 செலவில் வருடம் முழுவதும் வேலிடிட்டி மட்டுமல்லாமல், அன்லிமிடெட் கால்கள், டேட்டா மற்றும் ஓடிடி சலுகை கொடுக்கும் திட்டமானது, ஜியோ நிறுவனத்தை (Jio) தாண்டி மற்ற நிறுவனங்களின் கஸ்டமர்களையும் மூக்கில் விரல் வைக்க செய்துள்ளது.
ஜியோ ரூ 123 திட்ட விவரங்கள் (Jio Rs 123 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில், 28 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த நாட்களில் தினசரி டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மட்டுமல்லாமல், ஓடிடி சந்தாவையும் ஜியோ கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். நாளொன்றுக்கு 0.5 ஜிபி டேட்டா கிடைக்கிறது.

ஆகவே, வேலிடிட்டி நாட்களில் மொத்தமாக 28 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த 500 எம்பி டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவை (Post Data) பயன்படுத்தலாம். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) வருகிறது.
இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் எஸ்எம்எஸ் சலுகையும் வருகிறது. ஆகவே, மொத்தமாக 300 எஸ்எம்எஸ் சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த சலுகைகள் மட்டுமல்லாமல், ஜியோசினிமா (JioCinema) ஓடிடி ஆப்பின் சந்தா கிடைக்கிறது. அதேபோல ஜியோசாவன் (JioSaavn) சந்தாவையும் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
ஜியோ ரூ 234 திட்ட விவரங்கள் (Jio Rs 234 Plan Details): முந்தைய திட்டத்தை போலவே தினசரி டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எம்எஸ் மற்றும் ஓடிடி சலுகைகளை இந்த ப்ரீபெய்ட் திட்டமும் கொண்டிருக்கிறது. ஆகவே, அதேபோல நாளொன்றுக்கு 0.5 ஜிபி டேட்டா மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவை பயன்படுத்தலாம்.
ஆனால், இந்த திட்டத்துக்கு 56 நாட்கள் வேலிடிட்டி கிடைப்பதால், மொத்தமாக 28 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இதுபோக 28 நாட்கள் வீதம் தலா 300 எஸ்எம்எஸ் சலுகையை பெற்று கொள்ளலாம். மேலும், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்கள் சலுகைகள் இந்த திட்டத்துக்கும் கிடைக்கிறது.
ஜியோ சாவன் மற்றும் ஜியோ சினிமா ஆப்களை 56 நாட்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இப்போது, மாதாந்திரம் வெறும் ரூ.102 செலவில் வருடம் முழுவதும் வேலிடிட்டி கொடுக்கும் ஜியோ ரூ 1234 திட்டத்தின் சலுகைகளை பார்க்கலாம். இதிலும் டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் ஓடிடி சந்தாவை பயன்படுத்தலாம்.
ஜியோ ரூ 1234 திட்ட விவரங்கள் (Jio Rs 1234 Plan Details): இந்த வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு நாளொன்றுக்கு 0.5 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது. அதேபோல 336 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைப்பதால், மொத்தமாக மொத்தமாக 168 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ள முடிகிறது.
இந்த வருடாந்திர திட்டத்துக்கும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகை பொருந்தும். அதேபோல அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்கள் சலுகைகளும் 336 நாட்களில் 28 நாட்கள் வீதம் 300 எஸ்எம்எஸ்கள் சலுகையும் கொடுக்கப்படுகிறது. முந்தைய திட்டங்களை போலவே ஜியோ சாவன் மற்றும் ஜியோ சினிமா ஓடிடி ஆப்பின் சந்தா கிடைக்கிறது.
இந்த மூன்று திட்டங்களின் ஜியோசினிமா சாந்தாவில் பிரீமியம் சலுகை கொடுக்கப்படாது. அதேபோல ஜியோபாரத் போன் (JioBharat Phone) கஸ்டமர்களுக்கு மட்டுமே இந்த ப்ரீபெய்ட் திட்டங்களின் சலுகைகள் கிடைக்கும். இந்த சலுகைகளை மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், மலிவான விலையில் 4ஜி சேவை கொடுப்பது ஜியோ மட்டுமே என்பதை மறுக்க முடியாது.


Click it and Unblock the Notifications