Home
News

Jio SIM-க்கு கும்பிடு.. மாதம் ரூ.103 க்கு 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ்.. 165ஜிபி டேட்டா!

ஏர்டெல், வோடபோன் ஐடியா நினைத்து கூட பார்க்க முடியாத விலைக்கு ஜியோ (Jio) நிறுவனம், வருடாந்திர திட்டங்களை வைத்து இருக்கிறது. இதில் மாதத்துக்கு ரூ.103 செலவில் கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு மலிவான விலைக்கு கிடைக்கிறது என்றால், அது ஒட்டுமொத்த கஸ்டமர்களுக்கும் ரீசார்ஜ் செய்ய கிடைக்காது. ஜியோ 4ஜி பீச்சர் போன்களை வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இந்த கஸ்டமர்களுக்கு 336 நாட்கள் (மாதம் 28 நாட்கள் வீதம்) வேலிடிட்டியை ஜியோ ரூ.1234 திட்டம் கொடுக்கிறது.

Jio SIM-க்கு கும்பிடு.. மாதம் ரூ.103 க்கு 336 நாட்கள் வேலிடிட்டி!

ஆகவே, 1 மாதத்துக்கு ஏற்படும் செலவானது வெறும் ரூ.103 ஆக மட்டுமே இருக்கிறது. இந்த விலைக்கு 4ஜி டேட்டாவுடன் வேறு டெலிகாம் நிறுவனங்களிடம் திட்டங்கள் கிடையாது. பிஎஸ்என்எல் நிறுவனத்தில் கூட ரூ.1499 விலையில் இருந்தே 300 நாட்கள் வேலிடிட்டி கொண்ட வருடாந்திர திட்டம் கிடைக்கிறது.

ஜியோ ரூ.1234 திட்ட விவங்கள் (Jio Rs 1234 Plan Details): இந்த 4ஜி பீச்சர் போன் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 336 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படும். அதாவது, 28 நாட்கள் வீதம் 12 மாதங்களுக்கு வேலிடிட்டி கிடைக்கும். ஆகவே, வருடம் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்களை செய்யலாம்.

நாளொன்றுக்கு 0.5 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். ஆகவே, 336 நாட்களில் மொத்தமாக 165 ஜிபி டேட்டாவை இந்த திட்டம் கொடுக்கும். நாளொன்றுக்கு கிடைக்கும் 0.5 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கொடுக்கப்படும். மேலும், 28 நாட்களுக்கு 300 எஸ்எம்எஸ்கள் வீதம் 12 மாதங்கள் கொடுக்கப்படும்.

ஜியோசாவன் (JioSaavn) மற்றும் ஜியோடிவி (JioTV) சந்தாவும் கொடுக்கப்படும். இந்த டேட்டா போதாது என்றால், டேட்டா வவுச்சர்களை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். அதாவது, ஜியோ 4ஜி பீச்சர் போன்களில் யூடியூப், ஜியோடிவி, ஜியோஹாஸ்டார் உள்ளிட்ட ஓடிடி ஆப்கள் கிடைக்கும். இதற்கு டேட்டா தேவைப்பட்டால், வவுச்சர்கள் இருக்கின்றன.

ஜியோ ரூ.122 திட்ட விவரங்கள் (Jio Rs 122 Plan Details): இது ஆட் ஆன் டேட்டா திட்டமாக இருக்கிறது. ஆகவே, ஆக்டிவ் திட்டம் இருக்க வேண்டும். இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த நாட்கள் முழுவதும் நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா கிடைக்கும். பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்கும்.

இதைவிட அதிக டேட்டா வேண்டுமானால், ஜியோ ரூ.182 திட்டத்தை பெற்று கொள்ளலாம். இதிலும் 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். ஆனால், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்துக்கு டேட்டா குறைக்கப்படும். இந்த திட்டம் ஜியோபோன் மட்டுமல்லாமல், பிரைமா உள்ளிட்ட மாடல்களுக்கும் பொருந்தும்.

இந்த 4ஜி பீச்சர் போன் திட்டங்களில் ஆரம்ப விலை திட்டமாக ரூ.123 திட்டம் இருக்கிறது. சொல்லப்போனால், ஜியோவில் அடிமட்ட விலைக்கு கிடைக்கும் திட்டமாக இது இருக்கிறது. 28 நாட்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் (Roaming Voice) கிடைக்கும். நாளொன்றுக்கு 0.5 ஜிபி டேட்டா, 28 நாட்களுக்கு 300 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Jio Rs 1234 Plan With Unlimited Voice Calls 168GB Data 336 Days Validity Check 4G Feature Phone Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X