யாரு சாமி நீ.. ரூ.103-க்கு இறக்கிய அம்பானி.. 336 நாட்களுக்கு வாய்ஸ்.. 168 ஜிபி டேட்டா.. மாதச் செலவு அடிமட்டம்!
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ (Jio) நிறுவனத்தில் 336 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 168 ஜிபி டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை கொடுக்கும் ப்ரீபெய்ட் திட்டம் அடிமட்ட விலைக்கு கிடைக்கிறது. மாதத்துக்கு ரூ.103 செலவில் இந்த திட்டம் கிடைக்கிறது. இந்த விலைக்கு மற்ற டெலிகாம் நிறுவனங்களில் வருடாந்திர திட்டங்கள் கிடைக்காது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் என்னென்ன சலுகைகள் கிடைக்கும் என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்த 336 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டம் ஜியோபாரத் போன் (JioBharat Phone) பயன்படுத்தும் கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இதிலும் 4ஜி வேகத்தில் டேட்டா கிடைப்பதால், அடிமட்ட விலை கொண்ட 4ஜி திட்டமாக இது இருக்கிறது. இந்த திட்டத்தின் மொத்த விலை ரூ.1234ஆக இருக்கிறது. இந்த விலைக்கு 12 மாதங்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.

ஆகவே, ஒவ்வொரு 28 நாட்களுக்கும் ரூ.103 செலவில் சலுகைகளை பெற்று கொள்ளலாம். மற்ற ஜியோ திட்டங்களை போலவே இதிலும் தினசரி டேட்டா (Daily Data) மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) சலுகை கிடைக்கிறது. ஆனால், எஸ்எம்எஸ் சலுகை மட்டும் மாதத்துக்கு லம்ப்-சம் முறையில் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
ஜியோ ரூ 1234 திட்ட விவரங்கள் (Jio Rs 1234 Plan Details): இந்த ஜியோபாரத் போன் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 336 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த நாட்கள் முழுவதும் வழக்கம் போல அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம்.
டேட்டாவை பார்க்கையில், நாளொன்றுக்கு 500 எம்பி கிடைக்கிறது. 336 நாட்களுக்கு சேர்த்து மொத்தமாக 168 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இதற்கும் டேட்டா வவுச்சர்கள் கிடைக்கின்றன. 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா (Post Data) சலுகையை இந்த திட்டத்தில் பெற்று கொள்ளலாம். எஸ்எம்எஸ் சலுகைகள் தினசரிக்கு கிடைக்காது.
அதேபோல வருடம் முழுவதுக்கும் மொத்தமாகவோ கொடுக்கப்படவில்லை. 28 நாட்கள் வீதம் 300 எஸ்எம்எஸ்கள் என்னும் கணக்கில் கொடுக்கப்படுகிறது. ஆகவே, 12 மாதங்களில் ஒவ்வொரு மாதத்துக்கும் 300 எஸ்எம்எஸ்கள் கஸ்டமர்களுக்கு கொடுக்கப்படுகிறது. இந்த சலுகைகள் போக ஜியோசாவன் (JioSaavn) சந்தா கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது.
மேலும், ஜியோ டிவி (JioTV) சந்தாவும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இந்த ஜியோபாரத் போனில் கிட்டத்தட்ட ஸ்மார்ட்போனில் கிடைக்கும் டேட்டா வேகம் மற்றும் ஆப்களின் அனுகல்கள் கிடைக்கின்றன. யூடியூப், பேஸ்புக், வாட்ஸ்அப் இருக்கின்றன. ஆகவே, இதையெல்லாமல், பயபடுத்தும்படி மலிவு விலைக்கு இந்த திட்டம் கிடைக்கிறது.
வருடாந்திர வேலிடிட்டி வேண்டாம். அதைவிட மலிவான விலைக்கு ஜியோபாரத் போன் திட்டம் இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு மற்றொரு திட்டம் இருக்கிறது. இது 56 நாட்கள் வேலிடிட்டியுடன் அடிமட்ட விலைக்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. இதன் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஜியோ ரூ 234 திட்ட விவரங்கள் (Jio Rs 234 Plan Details): இந்த ஜியோபாரத் போன் திட்டத்திலும் முந்தைய திட்டத்தில் பார்த்த அதே சலுகைகள் கிடைக்கும். ஆனால், வேலிடிட்டி மட்டும் 56 நாட்களு மட்டுமே கொடுக்கப்படும். ஆகவே, இந்த நாட்களில் நாளொன்றுக்கு 500 எம்பி டேட்டா மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவை பெற்று கொள்ளலாம்.
அதேபோல 28 நாட்கள் வீதம் 300 எஸ்எம்எஸ்களை அனுப்பி கொள்ளலாம். 56 நாட்களுக்கு 2 முறை தலா 300 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். மேலும், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களுடன், ஜியோ நிறுவனத்தின் ஜியோடிவி மற்றும் ஜியோசாவன் ஆகிய ஆப்களை பயன்படுத்தி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications