Home
News

4G-க்கு காப்பு கட்டிய அம்பானி.. போட்டிக்கு ஆளில்ல.. ரூ.1234 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்ஸ்!

ஜியோவை (Jio) விட்டு எந்தவொரு கஸ்டமர்களும் வேறு நிறுவனத்துக்கு செல்ல கனவிலும் நினைக்காதபடியான சலுகையானது, ரூ 1234 விலை கொண்ட திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. 336 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் கால்கள் மட்டுமல்லாமல், ஓடிடி சலுகையும் கிடைக்கிறது. இந்த திட்டத்தின் விவரம் இதோ.

ஜியோ ரூ 1234 திட்ட விவரங்கள் (Jio Rs 1234 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் வாய்ஸ் கால்கள் (Voice Calls) முதல் ஓடிடி (OTT) வரையில் சலுகைகள் கொடுக்கப்படுகின்றன. இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்கள் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்களை (Roaming Calls) செய்து கொள்ளலாம்.

4G-க்கு காப்பு கட்டிய அம்பானி.. ரூ.1234 போதும்.. 1 வருட வேலிடிட்டி!

நாளொன்றுக்கு 0.5 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது. மொத்தமாக 168 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த 0.5 ஜிபிக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா (Unlimited Data) சலுகையை பெற்று கொள்ளலாம். இதுபோக வருடம் முழுவதும் 28 நாட்கள் வீதம் 300 எஸ்எம்எஸ்கள் வழங்கப்படுகிறது.

இவ்வளவு சலுகைகள் போக ஜியோ சாவன் (JioSaavn) மற்றும் ஜியோ சினிமா (JioCinema) ஆப்களின் சந்தா கொடுக்கப்படுகிறது. ஜியோசினிமாவில் பிரீமியம் சலுகை கிடையாது. இந்த திட்டத்துக்கு 336 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. கிட்டத்தட்ட ஆண்டு முழுவதும் சலுகைகளை பெற்று கொள்ள முடிகிறது.

இந்த திட்டத்தின் மாதாந்திர செலவை கணக்கிட்டால், வெறும் ரூ.112 ஆக மட்டுமே இருக்கிறது. இந்த விலைக்கு இவ்வளவு சலுகைகள் கிடைப்பது, ஜியோ கஸ்டமர்களுக்கு மிகுந்த நன்மைகள் கொண்டதாகவே இருக்கிறது. இப்போது, புதிதாக சேர்க்கப்பட்ட 56 நாட்கள் வேலிடிட்டி கொண்ட மலிவான ரீசார்ஜ் திட்டத்தை பற்றி பார்ப்போம்.

4G-க்கு காப்பு கட்டிய அம்பானி.. ரூ.1234 போதும்.. 1 வருட வேலிடிட்டி!

ஜியோ ரூ 234 திட்ட விவரங்கள் (Jio Rs 234 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்திலும் ஓடிடி, டேட்டா, வாய்ஸ் கால் சலுகைகளை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்கள் நாளொன்றுக்கு 500 எம்பி டேட்டா சலுகையை பயன்படுத்தலாம்.

மொத்தமாக 28 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது. முந்தைய திட்டத்தைபோலவே 500 எம்பி டேட்டாவுக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. அதேபோல அன்லிமிடெட் வாய்ஸ்களை செய்து கொள்ளலாம். லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்கள் இதில் அடங்கும். 28 நாட்களுக்கு 300 எஸ்எம்எஸ்கள் வீதம் கிடைக்கிறது.

இதுபோக ஜியோ சாவன் மற்றும் ஜியோ சினிமா சந்தா கிடைக்கிறது. இந்த திட்டத்துக்கு கிட்டத்தட்ட 2 மாதங்கள் அதாவது 56 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த திட்டமானது, டெலிகாம் மார்கெட்டே அதிரும்படி 28 நாட்களுக்கு ரூ.78 செலவில் கிடைக்கிறது. இப்போது, 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ஆரம்ப திட்டத்தை பார்ப்போம்.

ஜியோ ரூ 123 திட்ட விவரங்கள் (Jio Rs 123 Plan Details): இந்த திட்டமானது, ஜியோவில் மிகவும் மலிவான விலை கொண்டதாகும். 28 நாட்களுக்கு சலுகைகளை கொடுக்கிறது. இருப்பினும், டேட்டா, வாய்ஸ், ஓடிடி சலுகைளை கொடுக்கிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், 500 எம்பி டேட்டா சலுகை கிடைக்கிறது.

மொத்தமாக 28 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். முந்தைய 2 திட்டங்களை போலவே, அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம். அதேபோல 300 எஸ்எம்எஸ்கள் சலுகை கிடைக்கிறது. மேலும், ஜியோசாவன் மற்றும் ஜியோசினிமா ஆப்களை பயன்படுத்தலாம்.

இந்த 3 திட்டங்களும் ஜியோபாரத் (JioBhart) போன்களுக்காக பிரத்யேகமாக வழங்கப்படும் ப்ரீபெய்ட் திட்டங்களாலும் (Prepaid Plans), இந்த திட்டங்கள் அனைத்தும் 4ஜி டேட்டா சலுகையோடு வருகின்றன. 4ஜி சேவையில் இதைவிட மலிவான திட்டங்களை வேறெந்த டெலிகாம் நிறுவனத்திலும் கிடையாது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 1234 Plan Offers 336 Days Validity, Unlimited Voice Calls 168GB Data Check One Year Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X