Home
News

மே.1 ஆரம்பமே Jio க்கு போடு.. மாதம் ரூ.102 க்கு 336 நாட்கள் வேலிடிட்டி.. புதுசா வந்தது 4G பீச்சர் போன் திட்டம்!

ஜியோபாரத் போன் திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. ஆனால், பழையபடி அதே விலைக்கு திட்டங்கள் கிடைக்கின்றன. ஜியோ வெப்சைட்டில் 4ஜி பீச்சர் போன் திட்டங்களின் (4G Feature Phone Plans) கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன. இதில் மாதம் ரூ.102 செலவு செய்ய ரெடியாக இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு 336 நாட்கள் வேலிடிட்டி கொண்ட 4ஜி பீச்சர் போன் திட்டம் கிடைக்கிறது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது 4ஜி பீச்சர் போன் (முன்னதாக ஜியோபாரத் போன்) வாடிக்கையாளர்களுக்கு மிகக் குறைந்த விலையில் நீண்ட கால வேலிடிட்டி கொண்ட சிறப்பு திட்டத்தை வழங்கி வருகிறது. ரூ.1234 விலையிலான இந்த திட்டத்தை பற்றிய விரிவான தகவல்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

மே.1 ஆரம்பமே Jio க்கு போடு.. மாதம் ரூ.102 க்கு 336 நாட்கள் வேலிடிட்டி!

ஜியோ ரூ. 1234 திட்டம், 4ஜி ஃபீச்சர் போனுக்கான திட்டம்: இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, தனது 4ஜி பீச்சர் போன் வாடிக்கையாளர்களுக்கு கவரும் வகையில், அதே விலைக்கு இந்த ரூ. 1234 திட்டத்தை கொடுக்கிறது. ஒருமுறை ரீசார்ஜ் செய்தால் சுமார் 12 மாதங்களுக்கு ரீசார்ஜ் தொல்லையில் இருந்து விடுபடலாம் என்பதே இந்த திட்டத்தின் சிறப்பாகும்.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
1. வேலிடிட்டியை (Validity) பார்க்கையில், இந்த திட்டம் 336 நாட்களை (28 நாட்கள் வீதம் 12 மாதங்கள்) கொடுக்கிறது.
2.டேட்டா (Data) நன்மைகளை பொறுத்தவரையில், கஸ்டமர்களுக்கு நாளொன்றுக்கு 0.5 ஜிபி (500 எம்பி) டேட்டா வழங்கப்படுகிறது. ஆகவே, மொத்த வேலிடிட்டி காலத்தில் 168 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ள கிடைக்கும். தினசரி டேட்டா தீர்ந்த பிறகு இணைய வேகம் 64 கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.
3. வாய்ஸ் கால்களை (Voice Calls) பார்க்கையில், இந்தியா முழுவதும் எந்தவொரு நெட்வொர்க்கிற்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை (Unlimited Voice Calls) மேற்கொள்ளலாம்.
4.எஸ்எம்எஸ் (SMS) சலுகையானது, ஒவ்வொரு 28 நாட்களுக்கும் 300 எஸ்எம்எஸ் வீதம் இந்தத் திட்டத்தில் வழங்கப்படுகிறது.

கூடுதல் சலுகைகள்:
இந்த திட்டத்தில் டேட்டா மற்றும் வாய்ஸ் கால்கள், தவரி ஜியோ நிறுவனத்திண் பொழுதுபோக்கு ஆப்களுக்காக இலவச சந்தாவும் கிடைக்கிறது:
1. ஜியோசாவன் (JioSaavn) சலுகையில் பாடல்களைக் கேட்கலாம்.
2. ஜியோடிவி (JioTV) சலுகையில் நேரலை டிவி நிகழ்ச்சிகள் மற்றும் மூவிக்களை காணலாம்.

யாருக்கு இது லாபகரமானது?
குறைந்த விலையில் நீண்ட கால வேலிடிட்டியை எதிர்பார்க்கும் ஜியோபாரத் போன் வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும். இந்த திட்டத்தின் மாத செலவைக் கணக்கிட்டுப் பார்த்தால், இது வெறும் ரூ. 102 என்ற செலவிலேயே கிடைக்கிறது. இந்த ரூ. 1234 ரீசார்ஜ் திட்டமானது ஜியோபாரத் போனை வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

அதிலும் ஜியோ வெப்சைட் மற்றும் மைஜியோ ஆப்பில் ஜியோபாரத் திட்டங்களாக கிடைக்காது. ஜியோவின் மாற்றியிருக்கும்படி 4ஜி பீச்சர் போன் திட்டங்களாக மட்டுமே கிடைக்கும். அதேபோல ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு இந்த திட்டம் கிடைக்காது. இதனாலேயே 4ஜி பீச்சர் போன் திட்டங்களாக இது மாற்றப்பட்டுள்ளது.

மற்றபடி வழக்கமாக கிடைக்கும் ஜியோபோன் திட்டம், ஜியோபோன் பிரைமா திட்டங்கள் மைஜியோஆப் வழியாக கிடைக்கின்றன. ஆனால், ஜியோ வெப்சைட்டில் 4ஜி பீச்சர் போன் திட்டங்கள் மட்டுமே இருக்கின்றன. ஆகவே, ரீசார்ஜ் செய்வதற்கு முன்பு மைஜியோ ஆப்பையும் கஸ்டமர்கள் சரிபார்த்து கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Jio Rs 1234 Plan 4G Feature Phone Plan Unlimited Voice Calls 0.5 GB Data 336 Days Validity
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X