Home
News

Jio-க்கு பெரிய கும்பிடு.. 336 நாட்களுக்கு ரூ.1234 போதும்.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 0.5 ஜிபி டேட்டா!

ஜியோ நிறுவனத்தின் 4ஜி பீச்சர் போனை வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு ரூ.1,234 செலவில் வருடம் முழுவதும் வேலிடிட்டி, வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்களை கொடுக்கும் திட்டம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. போட்டி நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் நிறுவத்தில் கூட இந்த விலைக்கு திட்டம் கிடையாது.

ஜியோவில் ஸ்மார்ட்போன்களுக்கு தனி ரீசார்ஜ் மற்றும் 4ஜி பீச்சர் போன்களுக்கு தனி ரீசார்ஜ் கிடைக்கிறது. இதில் பீச்சர் போன்களுக்கு அடிமட்ட விலைக்கு திட்டங்கள் கிடைக்கின்றன. வருடாந்திர திட்டங்கள் நம்ப முடியாத விலைக்கு வருகின்றன. அப்படியான திட்டமாக ஜியோ 4ஜி பீச்சர் போன் திட்டம் ரூ.1,234 இருக்கிறது. இதன் சலுகைகளை முதலில் பார்க்கலாம்.

Jio-க்கு பெரிய கும்பிடு.. 336 நாட்களுக்கு ரூ.1234 போதும்.. வாய்ஸ்!

ஜியோ ரூ.1,234 திட்ட விவரங்கள் (Jio Rs.1,234 Plan Detail): 336 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். 28 நாட்கள் வீதம் 12 மாதங்களுக்கு வேலிடிட்டி கொடுக்கப்படும். காலண்டர் மாத கணக்கில் பார்த்தால், 11 மாதங்களுக்கு வேலிடிட்டி கிடைக்கும். இந்த நாட்கள் முழுவதுமே சிம் ஆக்டிவ் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) கொடுக்கப்படும்.

லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்கள் இதில் கொடுக்கப்படும். பீச்சர் போனுக்கு கிடைப்பதால், டேட்டா அதிகமாக கிடைக்காது. நாளொன்றுக்கு 0.5 ஜிபி கிடைக்கும். அதாவது, 500 எம்பி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால், இந்த டேட்டாவும் 4ஜி வேகத்தில் கொடுக்கப்படும். 336 நாட்கள் வேலிடிட்டி கிடைப்பதால், மொத்தம் 168 ஜிபி கிடைத்திருக்கும்.

குறிப்பாக, 500 எம்பி டேட்டா தீர்ந்தவுடன் மற்ற திட்டங்களை போலவே 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவையும் இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கும். 300 எஸ்எம்எஸ்களை ஒவ்வொரு 28 நாட்களுக்கும் பயன்படுத்தி கொள்ளலாம். இப்படி 12 முறை தலா 300 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்படும். ஜியோ நிறுவனத்தின் ஆப்களின் அணுகல்களும் கிடைத்துள்ளன.

ஆனால், இது பிரீமியம் சலுகைகளை கொடுக்காது. இலவசமாக கிடைக்கும் அணுகல்களை மட்டுமே கொடுக்கும். இப்படி ஜியோ டிவி (Jio TV) கிடைக்கிறது. கூடுதலாக ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) ஆப் கிடைக்கிறது. இவ்வளவு சலுகைகளையும் ரூ.1,234 விலைக்கு கொடுக்கிறது. இதேபோல பல்வேறு திட்டங்கள் மலிவாகவும், சலுகைகளுடனும் கிடைக்கின்றன.

இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்வது எப்படி?
1.ஜியோ நிறுவனத்தின் அதிகார்ப்பூர்வ போர்ட்டலுக்கு சென்று கொள்ளுங்கள். ஹோம் பேஜ்ஜில் இருக்கும் மொபைல் விருப்பத்தை கிளிக் செய்தால், ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்ட் உள்ளிட்ட விருப்பங்கள் தோன்றும். இதில் ப்ரீபெய்ட் விருப்பத்தை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

2. பாப்புலர் திட்டம், ட்ரூ 5ஜி அன்லிமிடெட் திட்டம், யூத் & கேமிங் உள்ளிட்ட பல்வேறு விருப்பங்கள் தோன்றும். இதில் 4ஜி பீச்சர் போன் திட்டம் (4G Feature Phone Plan) விருப்பத்தை கிளிக் செய்து கொள்ளுங்கள். ஓப்பன் செய்யப்பட்ட உடனேயே ரூ.1,234 திட்டம் தோன்றும். கீழே பை (Buy) விருப்பம் இருக்கும்.

3. இதை கிளிக் செய்தால், மொபைல் நம்பர் கேட்கப்படும். இதை கொடுத்தால் பேமெண்ட் பேஜ் தோன்றும். கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட்பேங்கிங் அல்லது யுபிஐ வழியாக பேமெண்ட் செய்து கொள்ளலாம். இதேபோல ரூ.369 திட்டம், 84 நாட்கள் வேலிடிட்டி, ரூ.234 திட்டம், 56 நாட்கள் வேலிடிட்டி, ரூ.123 திட்டம், 28 நாட்கள் வேலிடிட்டியில் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Jio Rs 1234 Plan 336 Days Validity Voice Calls 0.5 GB Data Check 4G Feature Phone Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X