Home
News

Airtel, Vi-க்கு கும்பிடு.. மாதம் ரூ.104-க்கு 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 0.5 ஜிபி டேட்டா!

ஜியோ (Jio) நிறுவனத்தின் 4ஜி பீச்சர் போன் வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு ஏர்டெல், வோடபோன் ஐடியாவை விட மலிவான விலைக்கு ப்ரீபெய்ட் திட்டங்கள் கிடைக்கின்றன. இதில் வருடாந்திர திட்டமே கிட்டத்தட்ட ரூ.104 மாத செலவில் கிடைக்கிறது. இந்த 4ஜி பீச்சர் போன் திட்டத்தை பார்க்கலாம்.

4ஜி பீச்சர் போன்களுக்கான பிரத்யேக திட்டங்களை ஜியோ நிறுவனம் வைத்துள்ளது. ரூ.123 விலை முதல் ரூ.1234 வரையில் 4 திட்டங்கள் கிடைக்கின்றன. இதில் ஜியோ ரூ.369 திட்டம் மற்றும் ஜியோ ரூ.1234 திட்டம் ஆகியவை நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. ரூ.1234 திட்டமானது மாதத்துக்கு ரூ.104 செலவில் கிடைக்கிறது.

Airtel, Vi-க்கு கும்பிடு.. மாதம் ரூ.104-க்கு 336 நாட்கள் வேலிடிட்டி!

ஜியோ ரூ.1234 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1234 Prepaid Plan): இந்த 4ஜி பீச்சர் போன் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் 336 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. அதாவது, 28 நாட்கள் வீதம் தொடர்ச்சியாக 12 மாதங்களுக்கு வேலிடிட்டி கிடைக்கும். இதன் மூலம் ஆண்டு முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்களை செய்ய முடியும்.

அதேபோல், தினசரி 0.5 ஜிபி டேட்டாவும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. இதன்படி 336 நாட்களுக்கு மொத்தமாக சுமார் 168 ஜிபி டேட்டா கிடைக்கும். தினசரி வழங்கப்படும் 0.5 ஜிபி டேட்டா முழுவதும் பயன்படுத்தப்பட்ட பிறகு, தொடர்ந்து 64 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டாவை பயன்படுத்தும் வசதியும் உள்ளது.

இதுதவிர, ஒவ்வொரு 28 நாட்களுக்கும் 300 எஸ்எம்எஸ்கள் வழங்கப்படுகின்றன. 12 மாதங்களுக்கு இந்த சலுகை தொடர்வதால், ஒவ்வொரு மாதத்திற்கும் 300 எஸ்எம்எஸ்கள் வீதம் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த திட்டத்தின் கூடுதல் நன்மையாக ஜியோசாவன் மற்றும் ஜியோடிவி சந்தாக்களும் வழங்கப்படுகின்றன.

ஒருவேளை தினசரி கிடைக்கும் 0.5 ஜிபி டேட்டா போதவில்லை என்றால், பயனர்கள் தனியாக டேட்டா வவுச்சர்களை ரீசார்ஜ் செய்து கூடுதல் டேட்டாவைப் பெற்றுக் கொள்ளலாம். இதைவிட மலிவான விலைக்கு 4ஜி பீச்சர் போன் திட்டம் வேண்டுமானால், 84 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கும் ரூ.369 திட்டத்தை பெறலாம்.

ஜியோ ரூ.369 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 369 Prepaid Plan): இந்த திட்டத்தை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 84 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. அதாவது, ஒரே ஒரு ரீசார்ஜ் மூலம் தொடர்ந்து 84 நாட்களுக்கு ஜியோ சேவைகளை பயன்படுத்திக் கொள்ள முடியும். அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

இந்த ரூ.369 திட்டத்தில் மொத்தம் 42 ஜிபி டேட்டா கிடைக்கிறது. அதாவது, தினசரி 0.5 ஜிபி டேட்டாவை அதிவேகத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம். 0.5 ஜிபி தினசரி டேட்டா வரம்பு முழுமையாக பயன்படுத்தப்பட்ட பிறகு, தொடர்ந்து 64 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது.

இதுதவிர, இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களும் கிடைக்கின்றன. இதன் மூலம் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்களை கூடுதல் கட்டணம் இல்லாமல் மேற்கொள்ளலாம். ஒவ்வொரு 28 நாட்களுக்கும் 300 எஸ்எம்எஸ்கள் வழங்கப்படுகின்றன. இந்த சலுகைகளை 84 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் பயன்படுத்தலாம்.

முந்தைய திட்டத்தில் கிடைத்த ஜியோ சாவன் மற்றும் ஜியோ டிவி சலுகைகள் இந்த திட்டத்திலும் கிடைக்கிறது. இந்த விலைக்கு ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவில் திட்டங்கள் கிடைக்காது. சொல்லப்போனால், 4ஜி வேகத்தில் கிடைக்கும் மலிவு விலை திட்டங்களாக இந்த ஜியோ பீச்சர் போன் திட்டங்கள் இருக்கின்றன.

Best Mobiles in India

English summary
Jio Rs 1234 Plan 336 Days And Rs 369 Plan 84 Days Validity Check Feature Phone Plan Benefits
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X