மினிமம் ரீசார்ஜ்.. ரூ.123-க்கு இறக்கிய அம்பானி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 14 ஜிபி டேட்டா.. எந்த கஸ்டமர்களுக்கு?
ஜியோ (Jio) நிறுவனத்தின் 4ஜி பீச்சர் போன் வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு கிடைக்கும் மினிமம் ரீசார்ஜ் திட்டத்தின் விலை வெறும் ரூ.123ஆக மட்டுமே இருக்கிறது. இந்த விலைக்கு பிஎஸ்என்எல் நிறுவனமே 24 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கொடுக்கிறது. ஆனால், ஜியோ நிறுவனம் 28 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுத்து இருக்கிறது.
ஜியோவில் அடிமட்ட விலைக்கு ப்ரீபெய்ட் திட்டம் கிடைக்கிறது என்றால், அது 4ஜி பீச்சர் போன் வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது. 4ஜி டேட்டாவுடன் இந்த திட்டங்கள் கிடைக்கின்றன. ஏனென்றால், ஜியோடிவி, ஜியோஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி ஆப்களை ஜியோ 4ஜி பீச்சர் போன்களில் பயன்படுத்தி கொள்ளலாம்.

ரூ.123 முதல் ரூ.1234 வரையில் திட்டங்கள் கிடைக்கின்றன. இந்த விலைகளுக்கு முறையே 28 நாட்கள் முதல் 336 நாட்கள் வரையில் வேலிடிட்டி கொடுக்கிறது. இருப்பினும், வழக்கம்போல 28 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கும் ஜியோ ரூ.123 திட்டமானது, அதிகமாக ரீசார்ஜ் செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் சலுகைகளை தெரிந்து கொள்ளலாம்.
ஜியோ ரூ.123 திட்ட விவரங்கள் (Jio Rs 123 Plan Details): இதுவொரு ஆரம்ப விலை ஜியோ 4ஜி பீச்சர் போன் திட்டமாக இருப்பதால், 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். இந்த வேலிடிட்டி முழுவதும் வழக்கம்போல அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கிடைக்கின்றன.
நாளொன்றுக்கு 0.5 ஜிபி டேட்டாவை இந்த ஜியோ ரூ.123 திட்டம் கொடுக்கிறது. அதாவது, 500 எம்பி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். பீச்சர் போனாக இருப்பதால், இந்த டேட்டாவே ஒரு நாளுக்கு போதுமானதாக இருக்கும். இருப்பினும், கூடுதல் டேட்டாவுக்கும் வவுச்சர்களை இந்த ஜியோ ரூ.123 திட்டம் கொடுக்கிறது.
0.5 ஜிபி டேட்டா வீதம் வேலிடிட்டி முழுவதும் 14 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ள முடியும். 0.5 ஜிபி டேட்டா முடிந்த பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவை கொடுக்கிறது. ஜியோசாவன் (JioSaavn) மற்றும் ஜியோடிவி (JioTV) ஆப்களையும் இந்த திட்டத்தில் வழியாக அணுகலாம். 300 எஸ்எம்எஸ்களை கொடுத்து இருக்கிறது.
பிஎஸ்என்எல் நிறுவனமே, இந்திய டெலிகாம் மார்கெட்டில் மலிவான விலைக்கு திட்டங்களை வைத்துள்ளது. ரூ.99 முதல் திட்டங்கள் கிடைக்கின்றன. இருப்பினும், 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தின் விலையை ஒப்பிடுகையில் ஜியோ மலிவாக கொடுத்து இருக்கிறது. அதாவது, 20 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ஜியோ திட்டத்தின் விலை ரூ.147 ஆக இருக்கிறது.
இது ஜியோவை விட அதிகமாகும். அதே நேரத்தில் 20 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த நாட்களில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls), 5 ஜிபி டேட்டா கிடைக்கிறது. 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கிறது. இதில் எஸ்எம்எஸ் சலுகைகள் கிடையாது.
இதில் இருக்கும் வித்தியாசம் என்னவென்றால், ஜியோ ரூ.123 திட்டத்தை ஜியோவின் 4ஜி பீச்சர் போன்களை வைத்திருக்கும் கஸ்டமர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால், பிஎஸ்என்எல் திட்டத்தை ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் கஸ்டமர்களும் பயன்படுத்தலாம். வேகத்தை பொறுத்தவரையில், ஜியோவே அதிகவேக டேட்டாவை கொடுக்கிறது.


Click it and Unblock the Notifications
