அறக்க பறக்க ரீசார்ஜ்.. 84 நாட்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. ஓடிடி சந்தா!
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனமானது, ப்ரீபெய்ட் கஸ்டமர்களை கவரும் வகையில் பல அதிரடி ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில், அதிக டேட்டா மற்றும் பிரீமியம் ஓடிடி (OTT) ஆப்களின் சந்தாக்களை எதிர்பார்க்கும் கஸ்டமர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு சிறப்பான திட்டமாக ஜியோ ரூ.1199 ரீசார்ஜ் இருக்கிறது.
தினசரிக்கு அதிகப்படியான டேட்டாவை கொடுக்கும் திட்டமாகவும் இது இருக்கிறது. கூடுதலாக போஸ்ட் டேட்டா (Post Data) மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் (Unlimited 5G Data) இந்த திட்டத்துக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. ஏஐ கிளவுட் ஸ்டோரேஜ் மற்றும் லைவ் டிவி சேனல்களை கொடுக்கும் பிரத்யேக ஜியோ ஆப்களும் வருகின்றன.

ஜியோ ரூ.1199 திட்டத்தின் விவரங்கள்:
ஜியோவின் இந்த ரூ.1199 திட்டமானது 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இந்த நாட்களில் கஸ்டமர்கள் தினமும் 3 ஜிபிக்கான அதிவேக டேட்டாவை பயன்படுத்தலாம். மொத்தமாக 252 ஜிபி டேட்டா பயன்படுத்த கிடைக்கிறது. இந்த தினசரி டேட்டா தீர்ந்த பிறகு, இணைய வேகம் 64 கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும். இது தவிர, தகுதியுள்ள கஸ்டமர்களுக்கு எவ்வித கூடுதல் கட்டணமுமின்றி அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கும்.
மேலும், இந்தியாவில் உள்ள எந்தவொரு நெட்வொர்க்கிற்கும் அன்லிமிடெட் வாய்ஸ் (Unlimited Voice) கிடைக்கும். ஆகவே, லோக்கல் (Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) செய்து கொள்ளலாம். தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்களையும் (SMS) கஸ்டமர்கள் அனுப்பி கொள்ளலாம். இந்த சலுகைகள் சிம் கார்டை ஆக்டிவாக வைத்திருக்க கிடைக்கும் சலுகைகளாக இருக்கிறது.
ஓடிடி மற்றும் ஜெமினி பிரீமியம்:
இந்த திட்டத்தின் மிகப்பெரிய சிறப்பம்சமே இதனுடன் கிடைக்கும் கூடுதல் சலுகைகள் தான். இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 3 மாதங்களுக்கான ஜியோஹாட்ஸ்டார் மொபைல் + ஹாலிவுட் (JioHotstar Mobile + Hollywood) சந்தா இலவசமாக கிடைக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, ரூ.35,100 மதிப்புள்ள கூகுள் ஜெமினி ப்ரோ பிளான் (Google Gemini Pro Plan) 18 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
இதனுடன் 5,000 ஜிபி (5 டிபி) அளவிலான கிளவுட் ஸ்டோரேஜ், நானோ பனானா போன்ற பிரத்யேக ஏஐ (AI) பீச்சர்களும் கஸ்டமர்களுக்கு அணுக கிடைக்கிறது. மேலும், ஜியோ டிவி (JioTV) மற்றும் 50 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் கொடுக்கும் ஜியோ ஏஐ கிளவுட் (JioAICloud) ஆகிய ஆப்களையும் இந்த ஜியோ ரூ.1199 திட்டத்தில் கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். இதில் சில நிபந்தனைகள் இருக்கின்றன.
அதாவது, ஜியோஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் நன்மைகளைப் பெற, கஸ்டமர்கள் தங்களது ஜியோ எண்ணை பயன்படுத்தியே லாகின் செய்ய வேண்டும். மாதாந்திர திட்டத்தில் இருக்கும் வாடிக்கையாளர்கள், தங்களின் முந்தைய திட்டம் காலாவதியான 48 மணி நேரத்திற்குள் அடுத்த ரீசார்ஜை செய்தால் மட்டுமே 2ஆவது மற்றும் 3ஆவது மாதத்திற்கான ஜியோஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கும்.
அதேபோல, ரூ.35,100 மதிப்புள்ள கூகுள் ஜெமினி சலுகையை 18 மாதங்களுக்கு தொடர்ந்து பயன்படுத்த, கஸ்டமர்கள் சலுகைக் காலம் முழுவதும் ரூ.349 அல்லது அதற்கு மேல் விலை கொண்ட அன்லிமிடெட் 5ஜி டேட்டா கொண்ட திட்டத்தில் தொடர்ந்து ஆக்டிவாக வைத்திருக்க வேண்டும். வாய்ஸ் ஒன்லி திட்டங்களை ரீசார்ஜ் செய்தால், இந்த சலுகைகளை தொடர்ந்து பயன்படுத்த முடியாது.


Click it and Unblock the Notifications