Home
News

ஒத்த ரீசார்ஜ் போதும்.. 84 நாட்களுக்கு 3 ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. 2 மாதம் இலவச ட்ரையல்.. 50 ஜிபி கிளவுட்!

ஜியோ (Jio) கஸ்டமர்களுக்கு ஒரேவொரு ரீசார்ஜ் மூலம் தினசரி டேட்டா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா, கிளவுட் ஸ்டோரேஜ் போன்ற சலுகைகள் மட்டுமல்லாமல், 2 மாத ஜியோஹோம் ட்ரையல், கூகுள் ஜெமினி ப்ரோ (Google Gemini AI Pro) சந்தா, ஜியோஹாட்ஸ்டார் சாந்தா போன்ற சலுகைகள் கொடுக்கப்படுகின்றன. இதுபோக வழக்கமாக கிடைக்கும் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் போன்ற சலுகைகள் 84 நாட்களுக்கு கொடுக்கப்படுகிறது. இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தின் (Jio Prepaid Plan) முழு சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ ரூ 1199 திட்ட விவரங்கள் (Jio Rs 1199 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு வழக்கமாக கிடைக்கும் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை முதலில் பார்க்கலாம். இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா கிடைக்கும். 84 நாட்களுக்கு மொத்தமாக 252 ஜிபி டேட்டா கொடுக்கப்படும்.

ஒத்த ரீசார்ஜ் போதும்.. 84 நாட்களுக்கு 3 ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்!

இந்த டேட்டா 4ஜி வேகத்தில் கிடைக்கும். இந்த டேட்டா முடிந்தவுடன் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா (Post Data) கொடுக்கப்படும். இந்த டேட்டா சலுகைகள் போக அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகையும் கொடுக்கப்படுகிறது. ஜியோ டிவி (Jio TV) சலுகை கிடைக்கும். இந்த சலுகைகள் மட்டுமே வழக்கமாக கொடுக்கப்படுகிறது.

ஆனால், இப்போது ஓடிடி, டிஜிட்டல் கோல்டு, வை-பை ட்ரையல் மற்றும கிளவுட் ஸ்டோரேஜ் சலுகைகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. ஆகவே, இதுவரை பார்த்த சலுகைகள் போக 90 நாட்களுக்கான ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தா கொடுக்கப்படுகிறது. ஜியோஹோம் திட்டம் மூலம் வை-பை டேட்டா கிடைக்கிறது.

அதேபோல இதில் கிடைக்கும் ஓடிடி ஆப்கள் மற்றும் லைவ் டிவி சேனல்களின் சந்தாவும் கொடுக்கப்படுகிறது. இதை பெறுவதற்கு மைஜியோ ஆப் மூலம் ஜியோஹோம் (JioHome) 2 மாத இலவச ட்ரையல் அணுக வேண்டும். இந்த சலுகைகளுக்கு அடுத்து ஜியோ டிஜிட்டல் கோல்டு வாங்குவோருக்கு 2 சதவீத கூடுதல் கோல்டு கொடுக்கப்படுகிறது.

மேலும், ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சலுகையும் இதற்கு கிடைக்கிறது. இதில் 50 ஜிபிக்கான ஸ்டோரேஜ் பெற்று கொள்ளலாம். ஆனால், இதை ஜியோ மொபைல் நம்பர் வைத்து மட்டுமே பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த சலுகைகள் ஃபெஸ்டிவ் சலுகையாக கொடுக்கப்படுகிறது. இந்த கூடுதல் சலுகைகளுக்கு அடுத்து ஒரு முக்கிய சந்தா கிடைக்கிறது.

அதாவது, ஜியோவுக்கு போட்டியாக இருக்கும் ஏர்டெல் நிறுவனம், அதனுடயை கஸ்டமர்களுக்கு பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI) சந்தாவை கொடுக்கிறது. அதிலும் 12 மாதங்களுக்கு கொடுத்து ஒட்டுமொத்த கஸ்டமர்களையும் மூக்கில் விரல் வைக்க செய்தது. ஆனால், ஜியோ அதுபோல ஏஐ சந்தாவை கொடுக்காமல் இருந்து வந்தது.

இப்போது, ஏர்டெல்லை தூக்கி சாப்பிடும்படி 18 மாதங்களுக்கு கூகுள் ஜெமினி ப்ரோ சந்தாவை களமிறக்கி இருக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கும் ஜெமினி ப்ரோ சந்தா கிடைக்கிறது. இதன் மதிப்பு ரூ.35100ஆக இருக்கிறது. இந்த ஒட்டுமொத்த கஸ்டமர்களுக்கு கிடைக்காது. 18 வயது முதல் 25 வரையில் இருக்கும் கஸ்டமர்களுக்கு மட்டும் இந்த ஜெமினி ப்ரோ சந்தா கிடைக்கும்.

இந்த நிபந்தனை மட்டுமல்லாமல், தொடர்ந்து அன்லிமிடெட் 5ஜி டேட்டா திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு மட்டுமே இந்த ஜெமினி ப்ரோ சந்தா 18 மாதங்கள் முழுவதும் பயன்படுத்த கிடைக்கும். ஆகவே, ரூ.349 விலை கொண்ட திட்டம் மற்றும் அதற்கு மேல் விலை கொண்ட திட்டத்தில் மட்டுமே அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைப்பதால், அந்த விலைக்கு திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 1199 Plan With 84 Days Validity 3GB Data Unlimited Voice Calls Free Google Gemini Pro
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X