நோ டென்ஷன்.. வாரி கொடுத்த ஜியோ.. 84 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ்.. 3 ஜிபி டேட்டா.. ரீசார்ஜ் பண்ண ரெடியா?
ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்களில் (Jio Prepaid Plan) இதைவிட அதிகமாக டேட்டா சலுகைகளை 84 நாட்களுக்கு கொடுக்க முடியாது என்று அடித்து சொல்லும்படியான சலுகைகள் இரண்டு திட்டங்களில் வாரி வழங்கப்பட்டுள்ளன. நெட்பிளிக்ஸ் ஓடிடி சந்தா (Netflix OTT Subscription) மட்டுமல்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) சலுகைகளையும் இந்த திட்டத்தில் பெற்று கொள்ளலாம். இதுபோக அன்லிமிடெட் 5ஜி டேட்டாவையும் (Unlimited 5G Data) இந்த திட்டங்கள் கொடுக்கின்றன.
84 நாட்கள் வேலிடிட்டியில் நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவுடன் ஜியோவில் இரண்டு திட்டங்கள் மட்டுமே இருக்கின்றன. ஆகவே, இந்த திட்டங்கள் மட்டுமே அதிகப்படியான டேட்டா சலுகைகளை கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு கொடுக்கும் திட்டங்களாக இருக்கின்றன. ஆன்லைன் கேமிங் அல்லது ஓடிடி சலுகைகளை அதிகம் பயன்படுத்தும் கஸ்டமர்களுக்கு இதைவிட்டால் வேறு ஆப்ஷன் இருக்காது.

ஜியோ ரூ 1199 திட்ட விவரங்கள் (Jio Rs Rs 1199 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 84 நாட்கள் வேலிடிட்டியில் 3 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். ஆனால், ஓடிடி சலுகை மட்டும் இந்த திட்டத்தில் கிடைக்காது. ஆகவே, நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா மற்றும் அதற்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா (Post Data) இந்த திட்டத்தில் கொடுக்கப்படுகிறது.
ஆகவே, 252 ஜிபி டேட்டாவை 84 நாட்கள் முழுவதும் பெற்று கொள்ளலாம். இந்த டேட்டா சலுகைகளே ஒரு நாளுக்கு போதுமானதாக இருக்கிறது. ஆனால், அதைவிட கூடுதல் வேகம் மற்றும் டேட்டாவை கொடுக்கும்படி அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகைகளை இந்த திட்டம் கொடுக்கிறது. 84 நாட்கள் முழுவதும் வெல்கம் ஆஃபர் பெறும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா கொடுக்கப்படுகிறது.
இந்த ஜியோ ரூ 1199 திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகை வருகிறது. ஓடிடி சந்தா கிடைக்கவில்லை என்றாலும்கூட ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ கிளவுட் (Jio Cloud) ஆகிய ஆப்களை இதில் பயன்படுத்த முடியும். இப்போது அடுத்த ப்ரீபெய்ட் திட்டத்தை பற்றி பார்ப்போம்.
ஜியோ ரூ 1799 திட்ட விவரங்கள் (Jio Rs Rs 1799 Plan Details): இந்த திட்டத்தில் 84 நாட்கள் வேலிடிட்டி, வாய்ஸ் கால்கள், 3 ஜிபி டேட்டா, எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா மட்டுமல்லாமல், கூடுதலாக ஓடிடி சந்தாவும் கொடுக்கப்படுகிறது. ஆகவே, இந்த ஜியோ திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு மூன்று மாதங்களுக்கான பிரீமியம் ஓடிடி ஆப்-ஆன நெட்பிளிக்ஸ் (Netflix) சந்தா கொடுக்கப்படுகிறது.
மற்ற சலுகைகளை பார்க்கையில், 84 நாட்கள் முழுவதும் நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவை பயன்படுத்தலாம். முந்தைய திட்டத்தை போலவே வெல்கம் ஆஃபர் பெறும் கஸ்டமர்கள் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பெற்று கொள்ளலாம், 100 எஸ்எம்எஸ்கள், ஜியோ டிவி மற்றும் ஜியோ கிளவுட் சலுகைகளை இந்த திட்டம் கஸ்டமர்களுக்கு கொடுக்கிறது.
இறுதியாக அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்களையும் கொடுக்கிறது. நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா என்பது அதிகபட்ச டேட்டா சலுகையாகும். ஏனென்றால், இதற்கு மேல் தினசரி டேட்டா கொடுக்கும் திட்டங்கள் ஜியோ மட்டுமல்ல மற்ற நிறுவனங்களிலும்கூட கிடையாது. ஆகவே, இதில் எந்த ப்ரீபெய்ட் திட்டம் உங்களுக்கு சரியாக இருக்கும் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.


Click it and Unblock the Notifications








