சும்மாவா ஜியோ.. ரூ.399 கொடுத்தா.. 3 மாதங்கள் வாய்ஸ்.. 14 ஓடிடி சந்தா.. அன்லிமிடெட் 5G டேட்டா!
ஜியோ (Jio) நிறுவனமானது, மாதத்துக்கு ரூ.399 செலவில் கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டத்தில் அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் போன்ற 14 ஓடிடி தளங்களில் சந்தா மட்டுமல்லாமல், அன்லிமிடெட் 5ஜி டேட்டா, 2 ஜிபி தினசரி டேட்டா, வாய்ஸ் கால்கள் என்று சலுகைகளை அள்ளிக்கொடுக்கிறது.
ஜியோ ரூ 1198 திட்ட விவரங்கள் (Jio Rs 1198 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), வாய்ஸ் கால்கள் (Voice Calls), எஸ்எம்எஸ் (SMS) மற்றும் ஓடிடி (OTT) சலுகைகள் மட்டுமல்லாமல், ப்ரீ டேட்ட வவுச்சர்களும் (Data Vouchers) கொடுக்கப்படுகிறது.

இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது. மொத்தமாக 168 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல், 6 ஜிபிக்கான 3 டேட்டா வவுச்சர்கள் கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் கூடுதலாக 18 ஜிபி டேட்டாவானது, இந்த திட்டத்தில் கிடைக்கிறது.
இந்த டேட்டா வவுச்சரை ஜியோ ஆப் மூலம் பெற்று கொள்ளலாம். தினசரி டேட்டா 2 ஜிபி முடிந்த பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், ஜியோ 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகளில் ப்ரீ 5ஜி டேட்டா சலுகையை பயன்படுத்தலாம்.
ஜியோ வெல்கம் ஆஃபர் பெறும் கஸ்டமர்களுக்கு இந்த சலுகை கிடைக்கிறது. இது போக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice Calls) சலுகைகள் வழங்கப்படுகிறது. அதேபோல தினசரி 100 எஸ்எம்எஸ்களை கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம்.
இவ்வளவு சலுகைகளும் போக 14 ஓடிடி தளங்களில் சந்தா கொடுக்கப்படுகிறது. ஆகவே, 90 நாட்களுக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் (Disney+Hotstar Mobile) சந்தாவை பயன்படுத்தலாம். அதேபோல 84 நாட்களுக்கான அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video௰ சந்தா கொடுக்கப்படுகிறது.
இதுவொரு மொபைல் எடிஷன் (Mobile Edition) சந்தாவாகும். ஜியோ சினிமா பிரீமியம் (JioCinema Premium) சந்தா 84 நாட்களுக்கு கிடைக்கிறது. இந்த ஓடிடி தளங்களின் சந்தா போக, சோனி லிவ் (Sony LIV), ஜீ5 (ZEE5), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரி பிளஸ் (Discovery+) மற்றும் சன் நெக்ஸ்ட் (Sun NXT) சந்தா கிடைக்கிறது.
அதோடு கான்ச்சா லங்கா (Kanchha Lannka), பிளாட் மராத்தி (Planet Marathi), சவ்பால் (Chaupal), டாகுபே (Docubay), எபிக் ஆன் (EPIC ON), ஹோய்சோய் (Hoichoi) மற்றும் ஜியோ டிவி (JioTV) ஆகிய தளங்களில் சந்தாவையும் பெற்று கொள்ளலாம். இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 84 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.
ஆகவே, இந்த திட்டத்துக்கான மாதாந்திர செலவை பார்த்தால், ரூ.399 மட்டுமே தேவைப்படுகிறது. இந்த விலைக்கு 14 ஓடிடி சந்தா, 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், ப்ரீ டேட்டா போன்ற சலுகைகள் கிடைப்பதென்பது, கஸ்டமர்களுக்கு சற்று லாபத்தை தரக்கூடியதாகவே இருக்கிறது.


Click it and Unblock the Notifications