ஆட்டமே வேற.. மாதத்துக்கு ரூ.392 போதும்.. 84 நாட்கள் வேலிடிட்டி.. 2GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. ஓடிடி சந்தா!
ஜியோ கஸ்டமர்களை குஷி படுத்தும் விதமாக மாதத்துக்கு வெறும் ரூ.392 செலவில் 84 நாட்கள் வேலிடிட்டி உடன் 2 ஜிபி டெய்லி டேட்டா, அன்லிமிடெட் கால்கள், எஸ்எம்எஸ்கள் மட்டுமல்லாமல், நெட்பிளிக்ஸ் சப்ஸ்கிரிப்ஷனையும் ஒரு ப்ரீபெய்ட் திட்டம் வழங்குகிறது. இதுகுறித்த விவரம் இதோ.
ஓடிடி பிரியர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா உடன் நெட்பிளிக்ஸ் சப்ஸ்கிரிப்ஷனும் மிகவும் மலிவான விலையில் வேண்டுமனால், ஜியோவில் 2 திட்டங்கள் மட்டுமே இருக்கின்றன. இந்த திட்டங்களில் 3 மாதங்களுக்கான நெட்பிளிக்ஸ் சப்ஸ்கிரிப்ஷன் கிடைக்கும். இதுபோக மற்ற சலுகைகள் என்ன இருக்கிறது என்பது பின்வருமாறு.

ஜியோ ரூ 1099 திட்ட விவரங்கள் (Jio Rs 1099 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் டேட்டா (Data), வாய்ஸ் கால்கள் (Voice Calls), எஸ்எம்எஸ்கள் (SMS) மட்டுமல்லாமல் ஓடிடி (OTT) மற்றும் ஜியோ அன்லிமிடெட் ட்ரூ 5ஜி டேட்டா (Jio Unlimited True 5G Data) சலுகையும் கொடுக்கப்படுகிறது.
இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி வீதம் மொத்தமாக 168 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. அதோடு நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகள் வழங்கப்படுகிறது. அதே போல அன்லிமிடெட் லோக்கல் (Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்களை (Roaming) செய்து கொள்ள முடிகிறது.
இந்த தினசரி டேட்டா 2 ஜிபியை முழுவதும் பயன்படுத்திவிட்டாலும், அதற்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema) மற்றும் ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றின் சப்ஸ்கிரிப்ஷன் வழங்கப்படுகிறது. இதில் ஜியோ சினிமாவில் ப்ரீமியம் சலுகைகள் கொடுக்கப்படாது.
இந்த சலுகைகள் போக உங்களுக்கு நெட்பிளிக்ஸ் மொபைல் (Netflix Mobile) சப்ஸ்கிரிப்ஷன் கொடுக்கப்படுகிறது. அதோடு ஜியோ 5ஜி சேவை கிடைக்கும் நகரங்களில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை வழங்கப்படுகிறது. இதன் மூலம், இந்த திட்டத்தின் டேட்டாவை மட்டுமல்லாமல், இலவச 5ஜி டேட்டாவையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இப்படி ஏராளமான சலுகைகளை கொண்ட இந்த திட்டத்துக்கு 84 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இதே சலுகைகளுடன் கூடுதல் டேட்டா சலுகை வேண்டுமானால், நீங்கள் ரூ 1,499 விலையில் கிடைக்கும் மற்றொரு ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இப்போது, இந்த திட்டத்தின் சலுகைகளை பார்ப்போம்.
ஜியோ ரூ 1499 திட்ட விவரங்கள் (Jio Rs 1499 Plan Details): இந்த திட்டத்திலும் டேட்டா, வாய்ஸ், எஸ்எம்எஸ் மற்றும் ஓடிடி சலுகைகள் கொடுக்கப்படுகிறது. அதேபோல அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையும் கிடைக்கிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு நாளொன்றுக்கு 3 ஜிபி வீதம் மொத்தமாக 252 ஜிபி டேட்டா வழங்கப்படும்.
இந்த டேட்டாவை முழுவதும் பயன்படுத்தினால், முந்தைய திட்டத்தைப் போலவே 64 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்தலாம். அதேபோல அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி கால்களை செய்து கொள்ளலாம். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகையும் கொடுக்கப்படுகிறது. மேலும் ஜியோ டிவி, ஜியோசினிமா, ஜியோ கிளவுட் மற்றும் நெட்பிளிக்ஸ் சப்ஸ்கிரிப்ஷன் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் நெட்பிளிக்ஸ் பேஸிக் (Netflix Basic) சலுகைகளை பெற்றுக்கொள்ள முடியும். அதோடு ஜியோ 5ஜி ஏரியாக்களில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பயன்படுத்தலாம். ஜியோவில் நெட்பிளிக்ஸ் சப்ஸ்கிரிப்ஷன் வேண்டுமானால், இந்த 2 திட்டங்கள் மட்டுமே இருக்கின்றன. இந்த திட்டங்களின் மாதாந்திர கட்டணத்தை பார்த்தால், ரூ.1499 திட்டத்துக்கு ரூ.535 செலவும், ரூ.1099 திட்டத்துக்கு ரூ.392 செலவும் ஆகிறது.


Click it and Unblock the Notifications








