Home
News

ஒரே ரீசார்ஜ்.. OTT சந்தா.. தினசரி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. 84 நாட்கள் வேலிடிட்டி.. ஜியோவின் செம திட்டம்..

ஜியோ நிறுவனம் ஓடிடி சந்தா உடன் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறது. குறிப்பாக ஏர்டெல் நிறுவனத்தை விட கம்மி பட்ஜெட்டில் ஓடிடி மற்றும் அன்லிமிடெட் சலுகைகள் வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஜியோ. எனவே தான் ஜியோ நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய பலர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம் அதாவது ஜியோவின் ரூ.1049 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது மூன்று அசத்தலான ஓடிடி நன்மைகளை வழங்குகிறது. இப்போது இந்த திட்டத்தின் வேலிடிட்டி மற்றும் நன்மைகளை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஒரே ரீசார்ஜ்.. OTT சந்தா.. தினசரி டேட்டா.. ஜியோவின் செம திட்டம்..

ஜியோ ரூ.1049 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1049 prepaid plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். ஆகவே நீங்கள் ஜியோவின் ரூ.1049 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும்.

அதேபோல் ஜீ5, சோனிலிவ் (SonyLIV) ஆகிய ஓடிடி சந்தா வழங்குகிறது இந்த ஜியோ ரூ.1029 ப்ரீபெய்ட் திட்டம். இதுதவிர ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தாவும் இந்த திட்டத்தில் கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையைப் பயன்படுத்தலாம். பின்பு இதில் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை வழங்கப்படுகிறது.

குறிப்பாக ரூ.35100 மதிப்புள்ள கூகுள் ஜெமினி ப்ரோ மற்றும் Nano Banana அணுகல், ஜியோடிவி (JioTV), ஜியோ கிளவுட் ( JioCloud), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட அசத்தலான நன்மைகளை வழங்குகிறது ஜியோ ரூ.1049 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேடடா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும். மேலும் இந்த திட்டம் மூலம் கிடைக்கும்.

மூன்று ஓடிடி சந்தா மற்றும் அன்லிமிடெட் சலுகைகள் இந்த ஜியோ ரூ.1049 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைப்பதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம். ஒருவேளை நெட்பிளிக்ஸ் (Netflix) சந்தா எதிர்பார்க்கும் ஜியோ பயனர்கள் ரூ.1299 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யலாம். இப்போது ஜியோ ரூ.1299 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகளை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஜியோவின் ரூ.1299 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1299 prepaid plan) நெட்பிளிக்ஸ் (Netflix) மொபைல் சந்தாவை வழங்குகிறது. குறிப்பாக ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவும் இதில் கிடைக்கும். இந்த திட்டம் தினமும் 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் ஜியோ ரூ.1299 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 168ஜிபி டேட்டா கிடைக்கும் என்பதை நினைவில் கொள்க.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.1299 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ் இதில் கிடைக்கிறது. இதுதவிர பல்வேறு சிறப்பான சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

ரூ.35100 மதிப்புள்ள கூகுள் ஜெமினி ப்ரோ மற்றும் Nano Banana அணுகல், ஜியோடிவி (JioTV), ஜியோ கிளவுட் ( JioCloud), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது ஜியோவின் ரூ.1299 திட்டம். மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.

Best Mobiles in India

English summary
Jio Rs 1049 Prepaid Plan Offers 168GB Data, OTT Benefits and Unlimited Calls
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X