Jio சிம் இருக்கா? அடுத்த 84 நாட்களுக்கு இதுதான்.. OTT.. தினசரி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எந்த திட்டம்?
ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் பல ப்ரீபெய்ட் திட்டங்களை நீக்கியது. ஆனால் ஜியோ நிறுவனம் இதுவரை எந்தவொரு திட்டத்தையும் நீக்கவில்லை. குறிப்பாக ஜியோ நிறுவனம் தொடர்ந்து பட்ஜெட் விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. அதுவும் இந்நிறுவனத்தின் ஓடிடி சந்தா ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது.
அதாவது தற்போது டேட்டா, வாய்ஸ் கால்கள் நன்மைகளுடன் ஓடிடி சந்தா தரும் ப்ரீபெய்ட் திட்டங்களில் தான் ரீசார்ஜ் செய்ய தான் பலர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதுவும் இந்நிறுவனம் பட்ஜெட் விலையில் ஓடிடி சந்தா தரும் திட்டங்களை வைத்துள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஜியோவின் ரூ.1049 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது ஓடிடி நன்மைகளுடன் அன்லிமிடெட் சலுகைகளை வழங்குகிறது. இங்கே இந்த திட்டத்தின் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஜியோ ரூ 1049 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1049 prepaid plan) தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதுவும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். ஆகவே நீங்கள் ஜியோவின் ரூ.1049 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்
ஜியோஹாட்ஸ்டார், ஜீ5, சோனிலிவ் (SonyLIV) ஆகிய ஓடிடி சந்தாவை வழங்குகிறது ஜியோ ரூ1049 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தில் கொடுக்கப்படுகிறது. இதுதவிர பல நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளன.
அதாவது தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா, ஜியோடிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றுக்கான அணுகல் வழங்கும் இந்த ஜியோ ரூ.1049 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் ஜியோ ரூ.1049 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரூ.35100 மதிப்புள்ள கூகுள் ஜெமினி ப்ரோ சந்தாவும் வழங்கப்படுகிறது.
குறிப்பாக அதிக ஓடிடி சந்தா, வாய்ஸ் கால்கள், டேட்டா, கூகுள் ஜெமினி ப்ரோ சந்தா ஆகிய பல நன்மைகளை ஜியோ ரூ.1049 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைப்பதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம். அதேபோல் இந்நிறுவனத்தின் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 98 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. இந்த திட்டத்தின் நன்மைகளையும் இப்போது பார்க்கலாம்.
ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 999 prepaid plan) தினசரி 2ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக 98 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த ஜியோ திட்டம். எனவே நீங்கள் ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 196ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.

ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா வழங்குகிறது இந்த ஜியோ திட்டம். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த திட்டம். இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளன.
அதாவது ரூ.35100 மதிப்புள்ள கூகுள் ஜெமினி ப்ரோ, ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) போன்றவற்றை இந்த ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications