Home
News

அம்பானி போட்ட போடு.. மாசம் ரூ.349-க்கு 84 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. ஓடிடி சந்தா.. 2GB டேட்டா!

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் சலுகைகளுடன் அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் சோனிலிவ், ஜீ5 ஓடிடி ஆப்களின் சந்தாவையும் மாதத்துக்கு வெறும் ரூ.349 செலவில் கொடுத்து இருக்கிறது. கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு டேட்டா மற்றும் ஓடிடி சலுகைகளை குறையில்லாமல் கிடைப்பதால், ப்ரீபெய்ட் கஸ்டமர்களிடையே இந்த திட்டம் மிகப்பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இந்த ஜியோ திட்டத்தின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்வோம்.

ஜியோ ரூ 1049 திட்டம் சலுகைகள் (Jio Rs 1049 Plan Offers): இந்த திட்டம் ஆல்-இன் ஆல் சலுகைகளை கொடுக்கிறது. அதாவது, வழக்கமான வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் சலுகைகளுடன் கூடுதலாக ஓடிடி சலுகைகை பேக் செய்து கொடுக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை (Prepaid Plan) பெறும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) கால்கள் சலுகை கிடைக்கிறது.

அம்பானி போட்ட போடு.. மாசம் ரூ.349-க்கு 84 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ்!

மேலும், அன்லிமிடெட் ரோமிங் வாய்ஸ் கால்களை (Unlimited Roaming Voice Calls) செய்து கொள்ளலாம். டேட்டா சலுகையை பார்க்கையில், ஜியோ 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகளில் இருக்கும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை கொடுக்கப்படுகிறது. இதுபோக நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ள முடியும்.

இந்த 2 ஜிபி டேட்டாவை அன்றைய நாளில் முழுவதும் பயன்படுத்திவிட்டாலும், ஃபேர் யூசேஜ் பாலிசி சலுகையின்படி 64 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா சேவை கொடுக்கப்படும். ஆகவே, ஜியோ கஸ்டமர்களுக்கு டேட்டாவுக்கு எந்தவித பஞ்சமும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் இருக்காது. வழக்கமாக கிடைக்கும் 100 எஸ்எம்எஸ் சலுகை இந்த திட்டத்திலும் கிடைக்கிறது.

இந்த முக்கிய சலுகைகள் போக ஓடிடி ஆப்களின் சந்தா கொடுக்கப்படுகிறது. சோனிலிவ் (Sony LIV) மற்றும் ஜீ5 (ZEE5) ஓடிடி ஆப்களை இந்த திட்டத்தில் பயன்படுத்தி கொள்ளலாம். ஜியோடிவி மொபைல் ஆப் (JioTV Mobile App) இந்த ஓடிடி ஆப்களை பயன்படுத்த முடியும். ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) சந்தாவும் வருகிறது.

இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 84 நாட்கள் வேலிடிட்டி பெற்று கொள்ளலாம். ஆகவே, ஓடிடி ஆப்களுக்கும் 84 நாட்கள் சந்தா கிடைக்கும். இந்த திட்டத்துக்கான மாத செலவு வெறும் ரூ.349 ஆக இருக்கிறது. இந்த விலையில் அன்லிமிடெட் டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் 2 ஓடிடி ஆப்களின் சந்தா கிடைக்கிறது. ஒருவேளை அமேசான் பிரைம் சந்தா வேண்டுமானால் பின்வரும் திட்டத்துக்கு செல்லுங்கள்.

ஜியோ ரூ 1029 திட்ட சலுகைகள் (Jio Rs 1029 Plan Offers): இந்த ப்ரீபெய்ட் திட்டத்திலும் 84 நாட்கள் வேலிடிட்டியை பெற்று கொள்ளலாம். இந்த நாட்களில் அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) மொபைல் எடிஷன் சந்தாவை பயன்படுத்தி கொள்ளலாம். மற்ற சலுகைகள் முந்தைய ப்ரீபெய்ட் திட்டத்தை போலவே கிடைக்கின்றன. அதாவது, அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள் கிடைக்கிறது.

அதேபோல 2 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையும் கொடுக்கப்படுகிறது. 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவும் கிடைக்கிறது. அமேசான் பிரைம் மட்டுமல்லாமல், ஜியோ சினிமா, ஜியோ டிவி சந்தாவும் வருகிறது. ஜியோகிளவுட் கிடைக்கிறது. 100 எஸ்எம்எஸ் சலுகை கிடைக்கும். இந்த 2 ப்ரீபெய்ட் திட்டங்களுக்கும் 168 ஜிபி டேட்டாவை மொத்தமாக கொடுக்கின்றன. ஆகவே, டேட்டாவுக்கு ஏற்ற திட்டங்களாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 1049 Plan With 84 Days Validity 168GB Data Unlimited Voice Calls 2 OTT Subscription
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X