Home
News

Jio குஷிதான்.. ஒரே திட்டம் போதும்.. 84 நாட்கள் வேலிடிட்டி.. 2 ஓடிடி சந்தா.. வாய்ஸ் கால்கள்.. அன்லிமிடெட் 5ஜி!

சோனிலிவ் மற்றும் ஜீ5 ஆகிய 2 ஓடிடி சந்தா மட்டுமல்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், அன்லிமிடெட் 5ஜி டேட்டா, 2 ஜிபி தினசரி டேட்டா, 100 எஸ்எம்எஸ்கள் போன்ற சலுகைகளை கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு கொடுக்கும் ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தை (Jio Prepaid Plan) பற்றி இப்போது பார்க்கலாம்.

ஓடிடி பிரியர்களிடையே இப்போது சோனிலிவ் (SonyLIV) மற்றும் ஜீ5 (Zee5) ஆகியவை தனி கவனம் பெற்று வருகின்றன. இதனாலேயே, ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்கள், ப்ரீபெய்ட் திட்டங்களில் இந்த ஓடிடி ஆப்களின் சந்தாவை கொடுக்க தொடங்கிவிட்டன. இதில் ஜியோ நிறுவனம் 2 ஓடிடி ஆப்களையும் ஒரே திட்டத்தில் கொடுக்கிறது.

Jio குஷிதான்.. ஒரே திட்டம் போதும்.. 84 நாட்கள் வேலிடிட்டி.. 2 ஓடிடி!

ஜியோ ரூ 1049 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1049 Prepaid Plan): இந்த ஜியோ திட்டத்தில் டேட்டாவுக்கும் ஓடிடிக்கும் குறையில்லை. ஏனென்றால், 84 நாட்களுக்கான சோனிலிவ் மற்றும் ஜீ5 ஓடிடி ஆப்களின் சந்தா கிடைக்கிறது. இதற்கு ஏற்ப அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகையை கொடுக்கிறது. இதுபோக தினசரி டேட்டா மற்றும் போஸ்ட் டேட்டா இருக்கிறது.

அதாவது, 5ஜி டேட்டா அல்லாமல், 4ஜி வேகத்தில் 2 ஜிபி டேட்டா தினசரிக்கு பயன்படுத்தலாம். இந்த 4ஜி டேட்டா முடிந்துபோன பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் ஜியோ கஸ்டமர்களுக்கு போஸ்ட் டேட்டா கொடுக்கப்படும். ஆகவே, 2 ஓடிடிக்கு ஏற்ப கொஞ்சமும் குறையில்லாத டேட்டாவை பெற்று கொள்ள முடிகிறது. இதேபோல வாய்ஸ் கால்களும் கிடைக்கின்றன.

ஆகவே, 84 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் ஜியோ கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்கள் (Roaming Calls) கிடைக்கின்றன. மேலும், 100 எஸ்எம்எஸ் சலுகைகளை தினசரி லிமிட்டில் 84 நாட்களுக்கு கொடுக்கிறது. சோனிலிவ் மற்றும் ஜீ5 ஆப்களுக்கு அடுத்து ஜியோ டிவி (Jio TV) சந்தா கொடுக்கப்படுகிறது.

அதேபோல ஜியோ சினிமா (Jio Cinema) சந்தாவும் கொடுக்கப்படுகிறது. ஆனால், இந்த சந்தாக்களில் பிரீமியம் கன்டென்ட்கள் வராது. இந்த திட்டத்துக்கும் 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. அதிகப்படியான டேட்டாவுடன் சோனிலிவ் மற்றும் ஜீ5 ஆப்களின் சந்தா வேண்டுமானால், இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள்.

இதைவிட மலிவான விலைக்கு சோனிலிவ் மற்றும் ஜீ5 ஆப்கள் வேண்டுமானால், ரூ 175 விலைக்கு ஒரு திட்டம் இருக்கிறது. ஆனால், இதில் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் தினசரி டேட்டா போன்ற சலுகைகள் கிடைக்காது. 10 ஜிபி லம்ப்-சம் டேட்டாவுடன் 10 ஓடிடிகளுடன் பயன்படுத்த கிடைக்கும். ஆமாம், இது டேட்டா வவுச்சரே தான்.

இந்த ரூ 175 திட்டத்தில் 28 நாட்களுக்கு டேட்டா மற்றும் ஓடிடி ஆப்களின் சந்தாவை பெற்று கொள்ளலாம். ஓடிடி சலுகையில் சோனிலிவ் மற்றும் ஜீ5 மட்டுமல்லாமல், ஜியோ சினிமா பிரீமியம் சந்தா, லயன்ஸ்கேட்ஸ் சந்தா கிடைக்கிறது. மேலும், டிஸ்கவரி பிளஸ், சன்நெக்ஸ்ட் மற்றும் கான்ச்சா லங்கா போன்ற ஆப்களும் கிடைக்கின்றன.

இதுபோக பிளானட்மராத்தி, ஹோய்சோய் மற்றும் ஜியோ டிவி ஆப்கள் வருகின்றன. டேட்டாவை பார்க்கையில் 10 ஜிபி மட்டுமே கிடைக்கும். இந்த டேட்டாவுக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா இருக்கும். ஆகவே, சோனிலிவ் மற்றும் ஜீ5 ஆப்களின் சந்தாவை விரும்பும் கஸ்டமர்கள் இந்த திட்டங்களை ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 1049 Plan Offer SonyLIV Zee5 OTT With Unlimited Voice Call 84 Days Validity 2GB Data
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X