அம்பானியா கொக்கா.. 3 மாசத்துக்கான பெஸ்ட் Jio ரீசார்ஜ்னா இதுதான்.. டெய்லி 2GB, வாய்ஸ், SMS, ஓடிடி!
ஒவ்வொரு மாதமும் ரீசார்ஜ் செய்யாமல்.. ஆண்டுக்கு 4 முறை மட்டுமே ரீசார்ஜ் செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் அல்லவா? அதற்கு நீங்கள் 3 மாதங்கள் வேலிடிட்டி வழங்கும் திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும். இப்படி செய்வதால் ஆண்டுக்கு 4 முறை மட்டுமே மொபைல் ரீசார்ஜ் செய்ய வேண்டியதாக இருக்கும்; உங்கள் பட்ஜெட்டை திறமையாக நிர்வகிக்கவும் முடியும்.
3 மாதங்களுக்கான பெஸ்ட் ஜியோ ரீசார்ஜ்: இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் ஆபரேட்டர் ஆன ரிலையன்ஸ் ஜியோவிடம் நிறைய 3 மாத (84 நாட்கள்) திட்டங்கள் உள்ளன. அவைகளில் பயனர்களுக்கு அதிக ஓடிடி (ஓவர்-தி-டாப்) நன்மையுடன் சேர்த்து டெய்லி டேட்டா, வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் ஆகிய வழக்கமான நன்மைகளை வழங்கும் ஒரு திட்டத்தை பற்றித்தான் நாம் இங்கே விரிவாக காணவுள்ளோம்.

அது ஜியோவின் ரூ.1049 ப்ரீபெய்ட் திட்டமாகும். இந்தியா முழுவதும் உள்ள ஜியோ பயனர்களுக்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் இந்த திட்டம் 84 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி உடன் வருகிறது. அதாவது தோராயமாக மாதத்திற்கு ரூ.375 என்கிற செலவின் கீழ் டெய்லி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் ஓடிடி ஆகிய நன்மைகளை வழங்குகிறது.
ரிலையன்ஸ் ஜியோ ரூ.1049 திட்டத்தின் நன்மைகள்: டேட்டா நன்மையை பொறுத்தவரை இது டெய்லி 2ஜிபி டேட்டாவை வழங்கும். எப்யுபி (FUP) லிமிட்டை தாண்டிய பின்னர், அதாவது டெய்லி 2ஜிபி டேட்டா லிமிட்டை தாண்டிய பின்னர், இந்த திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீட் 64 கேபிபிஎஸ் ஆக குறையும்.
சுவாரசியமாக இந்த திட்டத்துடன் அன்லிமிடெட்5ஜி டேட்டா நன்மையும் இணைக்கப்பட்டுள்ளது. முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ நிறுவனம் 2ஜிபி தினசரி டேட்டா அல்லது அதற்கு மேல் வழங்கும் எந்தவொரு ஜியோ திட்டத்திலும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா ஆபரை வழங்குகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
டேட்டா நன்மையுடன் சேர்த்து ஜியோவின் ரூ.1049 திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் டெய்லி 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளும் கிடைக்கும். ஓடிடி நன்மைகளை பொறுத்தவரை 90 நாட்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) மொபைல் / டிவி சந்தா கிடைக்கும். கூடவே சோனி லைவ் (SonyLIV) மற்றும் ஜீ5 (ZEE5) ஆகிய நன்மைகளும் கிடைக்கும்.
கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை ஜியோ டிவி (JioTV) மற்றும் ஜியோ ஏஐ க்ளவுட் (JioAICloud) ஆகியவைகளும் கிடைக்கும். முன்னரே குறிப்பிட்டபடி இந்த திட்டம் இந்தியா முழுவதும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. மேலும் கிட்டத்தட்ட இந்தியா முழுவதுமே ஜியோ 5ஜி சேவைகள் கிடைப்பதால்.. எப்படி பார்த்தாலும் இதுவொரு பெஸ்ட் 3 மாத ரீசார்ஜ் ஆக உள்ளது.
ஆர்வமுள்ள ஜியோ வாடிக்கையாளர்கள் - மைஜியோ (MyJio) ஆப் வழியாக அல்லது ஜியோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து ரீசார்ஜ் செய்யலாம். மாற்றாக, நீங்கள் கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe) மற்றும் பல போன்ற மூன்றாம் தரப்பு ரீசார்ஜ் தளங்களின் வழியாகவும் ரீசார்ஜ் செய்யலாம்.
ஜியோ தொடர்பான மற்ற சமீபத்திய செய்தியை பொறுத்தவரை, ஜியோ நிறுவனம் தனது அன்லிமிடெட் 5ஜி ப்ரீபெய்ட் திட்டம் (Unlimited 5G Prepaid Plan) ஒன்றை "ஜியோ ஸ்டார்டர் பேக்" (Jio Starter Pack) என்று விளம்பரப்படுத்த தொடங்கி உள்ளது. அது ரூ.349 ரீசார்ஜ் திட்டமாகும் தற்போது இது ஜியோ ஸ்டார்டர் பேக் ரூ.349 என்று அழைக்கப்படுகிறது.
ஜியோ ஸ்டார்டர் பேக் (Jio Rs 349 Starter Pack) என சந்தைப்படுத்தப்படும் இந்த திட்டம் - 28 நாட்கள் என்கிற வேலிடிட்டி கொண்ட என்ட்ரி லெவல் அன்லிமிடெட் 5ஜி திட்டம் (Entry-level 28-day Unlimited 5G plan) ஆகும். இது ஜியோ சேவையின் கீழ் இணைந்த புதிய பயனர்களுக்கான திட்டமாகும் மற்றும் இது ரூ.2,600 மதிப்புள்ள நன்மைகளுடன் வருகிறது.


Click it and Unblock the Notifications