புது ஆஃபர்.. மறுபடியும் ரூ.103-க்கு இறக்கிய அம்பானி.. 28 நாட்கள் வேலிடிட்டி.. 5 ஜிபி டேட்டா.. பிரீமியம் ஓடிடி!
2026 ஆம் ஆண்டுக்கான புத்தாண்டு திட்டங்களை ஜியோ (Jio) நிறுவனம் களமிறக்கி இருக்கிறது. இதில் ரூ.103 விலை கொண்ட திட்டத்தில் ஆப்ஷன் முறையில் சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, மூன்று ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டு, அதில் ஒன்றை கஸ்டமர்கள் தேர்ந்தெடுத்து கொள்ளும்படி இந்த திட்டம் கிடைக்கிறது. இந்த ஜியோ ஃப்ளெக்ஸி திட்டத்தின் (Jio Flexi Plan) விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
ஜியோ ரூ 103 திட்ட விவரங்கள் (Jio Rs 103 Plan Details): இந்த திட்டமானது டேட்டா பேக்குகளில் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. ஆகவே, ஆக்டிவ் ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்து இருக்கும் கஸ்டமர்களுக்கு மட்டுமே ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த நாட்களுக்கு 5 ஜிபி டேட்டா கிடைக்கும்.

இந்த டேட்டாவுக்கு பிறகு போஸ்ட் டேட்டா கிடைக்காது. இதில் 3 ஓடிடி ஆப்ஷன்களுடன் சந்தா கொடுக்கப்படும். இந்தி என்டர்டெயின்மென்ட் (Hindi Entertainment), இன்டர்நேஷனல் என்டர்டெயின்மென்ட் (International Entertainment) மற்றும் ரீஜினல் என்டர்டெயின்மென்ட் (Regional Entertainment) ஆகிய 3 ஆப்ஷன்கள் இந்த திட்டத்துக்கு கிடைக்கின்றன.
1. இந்தி என்டர்டெயின்மென்ட் ஆப்ஷனில் ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), சோனிலிவ் (SonyLIV) மற்றும் ஜீ5 (Zee5) ஆகிய ஓடிடி தளங்களின் சந்தா கிடைக்கின்றன.
2.இன்டர்நேஷனல் என்டர்டெயின்மென்ட் ஆப்ஷனில் ஜியோஹாட்ஸ்டார், பேன்கோட் (FanCode), லயன்ஸ்கேட் (Lionsgate) மற்றும் டிஸ்கவரிபிளஸ் (Discovery+) ஆகிய தளங்கள் கிடைக்கின்றன.
3. ரீஜினல் என்டர்டெயின்மென்ட் ஆப்ஷனில் ஜியோஹாட்ஸ்டார், சன்நெக்ஸ்ட் (Sun NXT), கான்ச்சா லங்கா (Kancha Lanka) மற்றும் ஹோய்சோய் (Hoichoi) ஆகிய ஓடிடி ஆப்கள் கிடைக்கின்றன.
இதில் ஒரு ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால், அந்த ஓடிடி ஆப்களை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த ஓடிடிகளுக்கு 28 நாட்கள் மட்டுமே சந்தா கிடைக்கும். ஆகவே, மைஜியோ ஆப் வழியாக பெற்று கொள்ளுங்கள். இந்த ஆப்ஷன்கள் வேண்டாம், அதிக ஓடிடி ஆப்கள் ஒரே திட்டத்தில் வேண்டும் என்று கேட்டால், வழக்கமாக கிடைக்கும் ரூ.175 விலை கொண்ட திட்டத்துக்கு செல்லலாம்.
ஜியோ ரூ 175 திட்ட விவரங்கள் (Jio Rs 175 Plan Details): இந்த திட்டத்துக்கும் ஆக்டிவ் ப்ரீபெய்ட் திட்டம் இருக்க வேண்டும். இந்த டேட்டா மற்றும் ஓடிடி கொண்ட திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 10 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது. இந்த 10 ஜிபிக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கொடுக்கப்படும். முன்பு பார்த்த திட்டத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்கவில்லை.
10 ஓடிடி சந்தாவை இந்த திட்டம் கொண்டுள்ளது. இதில் ஆப்ஷன்கள் கிடையாது. 10 ஓடிடிகளின் சந்தாவையும் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். சோனி லிவ் (Sony LIV), ஜீ5 (ZEE5), லயன்ஸ்கேட் பிளே (Liongate Play), டிஸ்கவரிபிளஸ் (Discovery+), சன்நெக்ஸ்ட் (Sun NXT), கான்ச்சா லங்கா (Kanchha Lannka) ஆகிய ஓடிடி ஆப்களின் சந்தா இதில் கொடுக்கப்படுகிறது.
மேலும், பிளானட் மராத்தி (Planet Marathi), சாவ்பால் (Chaupal) மற்றும் ஹோய்சோய் (Hoichoi) ஓடிடி ஆப்களும் கிடைக்கின்றன. ஜியோடிவி மொபைல் (JioTV Mobile) சந்தாவும் கிடைக்கிறது. டேட்டா வவுச்சரில் ஓடிடி சந்தாவை எதிர்பார்க்கும் கஸ்டமர்கள் இந்த திட்டங்களை பெற்று கொள்ளலாம். ரூ.100 விலையில் இருந்து டேட்டா மற்றும் ஓடிடி சந்தா திட்டங்கள் ஜியோவில் கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications








