Home
News

இப்படி இருக்கனும் ரீசார்ஜ்.. ரூ.103 க்கு இறக்கிய அம்பானி.. 28 நாட்களுக்கு கையில புடிக்க முடியாது.. என்ன வருது?

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட புதிய திட்டம் அறிமுகமாகி உள்ளது. இதில் மொத்தம் 3 ஆப்ஷன்கள் கொடுக்கப்படும். ஒவ்வொரு ஆப்ஷனிலும் குறிப்பிட்ட ஓடிடி ஆப்களின் சந்தா கிடைக்கும். இதில் ஒன்றை தேர்ந்தெடுத்து பெற்று கொள்ளலாம். ஆனால், விலையில் எந்த மாற்றமும் இருக்காது. இந்த புதிய திட்டத்தில் என்னென்ன ஓடிடி சந்தாக்கள் கிடைக்கிறது?

டேட்டா பேக்குகளின் கீழ் இந்த திட்டம் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. ஆகவே, ஏற்கனவே ஆக்டிவ் திட்டத்தை வைத்து இருக்கும் கஸ்டமர்கள் மட்டுமே இதை ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும். இதில் டேட்டா மற்றும் ஓடிடி ஆப்களின் சந்தா மட்டுமே கிடைக்கும். வேறு சலுகைகளை எதிர்பார்க்க முடியாது. மைஜியோ வவுச்சர் (MyJio Voucher) வழியாக இதில் கிடைக்கும் ஓடிடி ஆப்களை பெற்று கொள்ளலாம்.

இப்படி இருக்கனும் ரீசார்ஜ்.. ரூ.103 க்கு இறக்கிய அம்பானி.. என்னென்ன?

ஜியோ ரூ.103 ஃப்ளெக்ஸி திட்ட சலுகைகள் (Jio Rs 103 Flexi Plan Offers): இந்த ஃப்ளெக்ஸி திட்டத்தில் மூன்று ஆப்ஷன்கள் கிடைக்கும். முதலாவது ஆப்ஷனில் ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), சோனிலிவ் (SonyLIV) மற்றும் ஜீ5 (Zee5) ஆகிய ஓடிடி ஆப்களின் சந்தா கொடுக்கப்படும். இதை இந்தி என்டர்டெயின்மென்ட் (Hindi Entertainment) கன்டென்ட்களுக்கு தேர்வு செய்து கொள்ளலாம்.

இரண்டாவது ஆப்ஷனில் ஜியோஹாட்ஸ்டார், பேன்கோட் (FanCode), லயன்ஸ்கேட் (Lionsgate) மற்றும் டிஸ்கவரிபிளஸ் (Discovery+) ஆகிய ஓடிடி ஆப்களின் சந்தா கொடுக்கப்பட்டு உள்ளன. இதை இன்டர்நேஷனல் என்டர்டெயின்மென்ட் (International Entertainment) கன்டென்ட்களுக்கு கஸ்டமர்கள் தேர்வு செய்து கொள்ளலாம். மூன்றாவதாக ரீஜினல் என்டர்டெயின்மென்ட் (Regional Entertainment) கன்டென்ட்கள் இருக்கின்றன.

இதில் ஜியோஹாட்ஸ்டார், சன்நெக்ஸ்ட் (Sun NXT), கான்ச்சா லங்கா (Kancha Lanka) மற்றும் ஹோய்சோய் (Hoichoi) ஆகிய ஓடிடி ஆப்களின் சந்தா கொடுக்கப்படும். இந்த மூன்று ஓடிடி பண்டில்களில் ஏதாவது ஒரு ஆப்ஷனை தேவைக்கு ஏற்ப கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். கூடுதலாக 5 ஜிபி டேட்டா சலுகையும் கிடைக்கும். ஒருவேளை ஓடிடி ஆப்களுடன் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்களுக்கு மற்றொரு திட்டம் உள்ளது.

ஜியோ ரூ.500 ஓடிடி திட்ட சலுகைகள் (Jio Rs 500 OTT Plan Offers): இந்த திட்டத்துக்கும் 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். இந்த நாட்களில் தினமும் 2 ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும், 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) செய்து கொள்ள முடியும். இதுபோக பிரீமியம் ஓடிடி ஆப்களின் சந்தா கிடைக்கும்.

இதில் யூடியூப் பிரீமியம் (YouTube Premium), பிரைம் வீடியோ மொபைல் (Prime Video Mobile), சோனிலிவ் (Sony LIV), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), ஜீ5 (ZEE5), டிஸ்கவரிபிளஸ் (Discovery+), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), சன்நெக்ஸ்ட் (Sun NXT) மற்றும் பிளானட் மராத்தி (Planet Marathi) ஆகிய ஓடிடி ஆப்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. மேலும், சாவ்பால் (Chaupal) மற்றும் ஹோய்சோய் உள்ளது.

இதுபோக பேன்கோட், ஜியோ டிவி, கான்ச்சா லங்கா போன்ற ஓடிடி ஆப்களின் சந்தாவும் கிடைக்கும். 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கொடுக்கப்படும். 50 ஜிபிக்கு ஜியோ ஏஐ கிளவுட் ஸ்டோர்ஜ் கொடுக்கப்படும். 18 மாதங்களுக்கு கூகுள் ஜெமினி ப்ரோ சந்தா கொடுக்கப்படும். இந்த ஓடிடி ஆப்களை 28 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்தி கொள்ள முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 103 Flexi Plan Offer Premium OTT Option Through MyJio Voucher Check OTT List
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X