Home
News

Jio vs Vi.. 84 நாட்கள் வேலிடிட்டி.. அமேசான் பிரைம் சந்தா.. அன்லிமிடெட் சலுகைகள்.. எது சிறந்தது?

ஜியோ (jio) நிறுவனத்துக்குப் போட்டி கொடுக்கும் வகையில் வோடபோன் ஐடியா (Vi) நிறுவனம் பல அசத்தலான சலுகைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக இந்த இரண்டு நிறுவனங்களும் தற்போது ஓடிடி சந்தா தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்வதில் தான் அதிக ஆர்வம் காட்டுகின்றன.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது இந்நிறுவனங்கள் 84 நாட்கள் வேலிடிட்டி உடன் அமேசான பிரைம் சந்தா தரும் திட்டங்களை வைத்துள்ளன. இதில் எந்த திட்டம் அதிக நன்மைகளை வழங்குகிறது மற்றும் எதை தேர்வு செய்வது நல்லது என்பதைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

Jio vs Vi.. 84 நாட்கள் வேலிடிட்டி.. அமேசான் பிரைம் சந்தா..

ஜியோ ரூ.1029 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1029 prepaid plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். ஆகவே நீங்கள் ஜியோவின் ரூ.1029 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும்.

அதேபோல் 84 நாட்களுக்கு அமேசான் பிரைம் லைட் (Amazon Prime lite) சந்தா வழங்குகிறது இந்த ஜியோ ரூ.1029 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையைப் பயன்படுத்தலாம். பின்பு இதில் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை வழங்கப்படுகிறது.

ரூ.35100 மதிப்புள்ள கூகுள் ஜெமினி ப்ரோ மற்றும் Nano Banana அணுகல், ஜியோடிவி (JioTV), ஜியோ கிளவுட் ( JioCloud), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட அசத்தலான நன்மைகளை வழங்குகிறது ஜியோ ரூ.1029 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேடடா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும். மேலும் ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா இந்த திட்டம் மூலம் கிடைக்கும்.

வோடபோன் ஐடியா ரூ.996 ப்ரீபெய்ட் திட்டம் ( Vodafone Idea Rs 996 Prepaid Plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேடடா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) வழங்குகிறது வோடபோன் ஐடியா ரூ.996 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் நள்ளிரவு 12 மணி முதல் மதியம் 12 மணி வரையில் அன்லிமிடெட் நைட் டேட்டா இந்த வோடபோன் ஐடியா ப்ரீபேய்ட் திட்டத்தில் கிடைக்கிறது

Jio vs Vi.. 84 நாட்கள் வேலிடிட்டி.. அமேசான் பிரைம் சந்தா..

தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது வோடபோன் ஐடியா ரூ.996 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் மற்றும் டேட்டா டிலைட்ஸ் இந்த வோடபோன் ஐடியா திட்டத்தில் கிடைக்கிறது. இதுதவிர பல அசத்தலான சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

எது சிறந்த திட்டம்?
இரண்டு திட்டங்களும் ஒரே மாதிரியான பலன்களை வழங்குகிறது. ஆனால் வோடபோன் ஐடியா சற்று குறைவான விலையில் திட்டத்தை வழங்குவதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம். அதேபோல் வோடபோன் ஐடியா நிறுவனம் விரைவில் பல அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Jio Rs 1029 vs Vi Rs 996 Plan: Compare Data, Validity and Benefits
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X