Home
News

Jio வின் ரூ.1029 மற்றும் ரூ.1049 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்.. தினமும் 2ஜிபி டேட்டா.. OTT.. எது பெஸ்ட்?

ஜியோ நிறுவனம் கடந்த மாதம் முக்கியமான ப்ரீபெய்ட் திட்டங்களை உயர்த்தியது. அதவும் கம்மி விலையில் ஒடிடி சந்தா தரும் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையும் உயர்த்தப்பட்டதால் பயனர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தற்போது ஓடிடி சந்தா திட்டங்கள் சற்று உயர்வான விலையில் தான் கிடைக்கின்றன. ஏர்டெல் நிறுவனமும் ஓடிடி சந்தா தரும் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையைக் கூட உயர்த்தியுள்ளது.

சரி இப்போது விஷயத்து வருவோம். அதாவது ஜியோ நிறுவனம் ரூ.1029 மற்றும் ரூ.1049 ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. குறிப்பாக இந்த இரண்டு திட்டங்களும் தினமும் 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இப்போது இந்த இரண்டு திட்டங்களில் சிறந்த திட்டம் எது என்று இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

Jio வின் ரூ.1029 மற்றும் ரூ.1049 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்..

ஜியோ நிறுவனத்தின் ரூ.1029 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் (Jio Rs 1029 prepaid recharge plan) தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் ஜியோவின் ரூ.1029 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் 84 நாட்களுக்கு அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) சந்தா வழங்குகிறது இந்த ஜியோ ரூ.1029 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையைப் பயன்படுத்தலாம். பின்பு இதில் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை வழங்கப்படுகிறது. இதுதவிர பல சலுகைகள் வழங்குகிறது இந்த திட்டம்.

அதாவது ஜியோடிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் ( JioCloud), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட பல அசத்தலான நன்மைகளை வழங்குகிறது ஜியோ ரூ.1029 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேடடா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.

ஜியோவின் ரூ.1049 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1049 prepaid recharge plan) தினமும் 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே ஜியோ ரூ.1049 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். இந்த திட்டமும் ஓடிடி நன்மைகளை வழங்குகிறது.

அதாவது சோனிலிவ் (SonyLIV) மற்றும் ஜீ5 (ZEE5)ஆகிய இரண்டு தளங்களின் சந்தா வழங்குகிறது ஜியோவின் ரூ.1049 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும் என்பதை நினைவில் கொள்க.

Jio வின் ரூ.1029 மற்றும் ரூ.1049 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்..

மேலும் ஜியோ ரூ.1049 திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையை பயன்படுத்தலாம். குறிப்பாக தினமும் 100 எஸ்எம்எஸ் ஜியோ ரூ.1049 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும் கிடைக்கும். இதுதவிர ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

எது சிறந்தது? ஜியோவின் ரூ.1029 மற்றும் ரூ.1049 ப்ரீபெய்ட் திட்டங்கள் டேட்டா, அழைப்புகள், எஸ்எம்எஸ் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரே மாதிரியான பலன்களை வழங்குகின்றன. ஆனால் OTT நன்மைகளில் தான் வேறுபாடு உள்ளது. அமேசான் பிரைம் சந்தாவை விரும்பினால் ரூ.1029 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்வது நல்லது. அதேபோல் சோனிலிவ் மற்றும் ஜீ5 சந்தா எதிர்பார்க்கும் பயனர்கள் ரூ.1049 திட்டத்தைத் தேர்வு செய்வது நல்லது. குறிப்பாக இந்த இரண்டு திட்டங்களும் சிறந்த திட்டங்கள் தான்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 1029 vs Rs 1049 Plans Comparison: Which Offers Better Benefits? check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X