Home
News

இதுதான் கட்டணம்.. 84 நாட்களுக்கு ரூ.1029 கொடுத்தா அன்லிமிடெட் வாய்ஸ்.. டேட்டா.. கூடவே அமேசான் பிரைம் வீடியோ!

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனத்தின் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) சந்தா வேண்டுமானால், ரூ.1029 விலையில் கிடைக்கும் ஒரேவொரு திட்டம் மட்டுமே இருக்கிறது. இந்த சந்தா மட்டுமல்லாமல், அன்லிமிடெட் 5ஜி டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் போன்ற மற்ற சலுகைகளிலும் பின்னிப்பெடல் எடுத்துள்ளது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் (Prepaid Plan) முழு சலுகைகளை பார்த்துவிட்டு, பட்ஜெட்டுக்கு ஏற்பட வொர்த்தாக இருக்கிறதா? என்பதை ஜியோ கஸ்டமர்களே முடிவு செய்து கொள்ளலாம்.

ஜியோ ரூ 1029 திட்ட விவரங்கள் (Jio Rs 1029 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் அமேசான் பிரைம் வீடியோ சந்தா கிடைக்கிறது. இதுவொரு மொபைல் எடிஷன் சந்தாவாகும். 84 நாட்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இதுபோக ஜியோசினிமா (JioCinema), ஜியோடிவி (JioTV) சந்தாவும் கிடைக்கிறது. இதில் ஜியோசினிமா பிரீமியம் சலுகைகளை கொடுக்காது.

இதுதான் கட்டணம்.. 84 நாட்களுக்கு ரூ.1029 கொடுத்தா அன்லிமிடெட் வாய்ஸ்!

இந்த ஓடிடி ஆப்களுக்கு அடுத்தபடியாக தினசரி டேட்டா (Daily Data), எஸ்எம்எஸ் (SMS), அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை கிடைக்கிறது. ஆகவே, 2 ஜிபி டேட்டாவை தினமும் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா சலுகை கிடைக்கும்.

மொத்தமாக 168 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். ஜியோ 5ஜி சேவைகள் கிடைக்கும் பகுதியில், வெல்கம் ஆஃபர் பெறும் கஸ்டமர்களுக்கு மட்டுமே அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை கொடுக்கப்படும். பெரும்பாலான கஸ்டமர்களுக்கு இந்த சலுகை கிடைக்கிறது. ஆகவே, டேட்டாவை பற்றி கவலையே இந்த ரூ 1029 திட்டத்தில் இருக்காது.

மேலும், வழக்கமாக கிடைக்கும் 100 எஸ்எம்எஸ் சலுகை மற்றும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையை தினசரிக்கு பெற்று கொள்ளலாம். ஜியோகிளவுட் (JioCloud) சலுகையும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு கிடைக்கிறது. 84 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.

அமேசான் பிரைம் வீடியோ வேண்டுமானால், இந்த திட்டத்தை மட்டுமே ஜியோவில் ரீசார்ஜ் செய்ய முடியும். ஒருவேளை கஸ்டமர்கள் டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவை தேர்ந்தெடுத்தால், இதே சலுகைகள் மற்றும் வேலிடிட்டியை வெறும் ரூ 949 விலையில் பெற்று கொள்ளலாம். இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ ரூ 949 திட்ட விவரங்கள் (Jio Rs 949 Plan Details): இந்த ஜியோ ஓடிடி திட்டத்தில் டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் (Disney+Hotstar Mobile) சந்தா கொடுக்கப்படுகிறது. ஆனால், இந்த சந்தாவை 90 நாட்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். முந்தைய திட்டத்தை போலவே ஜியோசினிமா மற்றும் ஜியோடிவி சந்தாவும் இந்த திட்டத்தில் வருகிறது.

மற்ற சலுகைகளை பார்க்கையில், அன்லிமிடெட் 5ஜி டேட்டா, அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகையை பயன்படுத்தி கொள்ளலாம். அதேபோல நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகையும் வருகிறது. இந்த திட்டத்திலும் தினசரிக்கு 2 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது. அதேபோல 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகை கிடைக்கிறது.

மொத்தமாக 168 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். இந்த திட்டத்துக்கும் அதே 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, ஓடிடிக்கு கூடுதல் வேலிடிட்டி மட்டுமல்லாமல், விலையிலும் இந்த திட்டம் மாலிவாகவே கிடைக்கிறது. எனவே, அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் என்று குறிப்பிட்ட ஓடிடி சந்தா இல்லாமல், ஏதாவது ஒரு ஓடிடி இருந்தால் போதும் என்று கேட்கும் கஸ்டமர்கள், இதை ரீசார்ஜ் செய்யுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 1029 Plan With 84 Days Validity 2GB Daily Data Unlimited Voice Calls Prime Video Subscription
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X