ஒன்னு தானா சார்.. இனிமே ரூ.1029-க்கு மட்டும்தான் இந்த சலுகை.. 2 ஜிபி டேட்டா.. அமேசான் பிரைம் லைட் சந்தா!
ஜியோ (Jio) ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு அமேசான் பிரைம் லைட் சந்தா (Amazon Prime Lite Subscription) வேண்டுமானால், அவர்களுக்கு ஒரே திட்டத்தில் மட்டுமே அது கிடைக்கிறது. இந்த திட்டத்தின் விலையும் ரூ.1,000-க்கும் மேல் இருக்கிறது. ஆனால், சலுகைகளை சும்மாவென்று சொல்லிவிட முடியாது. அன்லிமிடெட் 5ஜி டேட்டா தொடங்கி, தினசரி டேட்டா, எஸ்எம்எஸ் மட்டுமல்லாமல், ஜியோ டிஜிட்டல் கோல்டு, ஜியோஹாட்ஸ்டார் போன்ற பல்வேறு சலுகைகள் வாரி வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஜியோ ரூ 1029 திட்ட விவரங்கள் (Jio Rs 1029 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 84 நாட்கள் வேலிடிட்டியில் வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ லைட் சந்தா கொடுக்கப்படுகிறது. ஆகவே, அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) செய்து கொள்ளலாம்.

அதேபோல நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் அதற்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவும் (Post Data) கொடுக்கப்படுகிறது. இந்த டேட்டா 4ஜி வேகத்தில் கிடைக்கும். ஆனால், அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் (Unlimited 5G Data) இந்த திட்டத்துக்கு கிடைப்பதால், 4ஜி டேட்டா இல்லாமலேயே 84 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்தலாம்.
நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கிறது. இதுபோக ஜியோ டிவி (Jio TV) சந்தாவை கொடுக்கிறது. ஆனால், இது பிரீமியம் சலுகைகளை கொடுக்காது. இலவமாக கிடைக்கும் கன்டென்ட்கள் மற்றும் டிவி சேனல்கள் மட்டுமே கொடுக்கப்படும். இந்த சலுகைகளே இதில் கிடைத்துவந்தன. ஆனால், இப்போது ஜியோ ஸ்பெஷல் ஆஃபர் சேர்க்கப்பட்டுள்ளது.
அதாவது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூடுதலாக 4 சலுகைகள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. இதில் ஜியோஹாட்ஸ்டார் சந்தா (JioHotstar Subscription ), ஜியோ கோல்டு சலுகை (Jio Gold Offer), ஜியோஹோம் சலுகை (JioHome Offer) மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் ஸ்டோரேஜ் (Jio AI Cloud Storage) சலுகை ஆகியவறை சேர்க்கப்பட்டு இருக்கின்றன. இவற்றை இப்போது பார்க்கலாம்.
ஜியோ ஃபைனான்ஸ் (Jio Finance) ஆப் மூலம் ஜியோ கோல்டு வாங்கும் கஸ்டமர்களுக்கு அவர்கள் வாங்கும் அளவில் இருந்து 2 சதவீதம் கூடுதலாக கோல்டு கொடுக்கப்படுகிறது. இதற்காக இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்த பிறகு 91-8010000524 என்ற எண்ணுக்கு மிஸ்ட்-கால் கொடுத்து இதை பெற்று கொள்ளலாம். அதேபோல ஜியோ ஃபைனான்ஸ் ஆப்-ஐ டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும்.
ஜியோ ஃபைபர் மூலமாக கொடுக்கப்படும் ஜியோஹோம் (JioHome) சலுகை 2 மாதங்களுக்கு இலவமாக கொடுக்கப்படுகிறது. இதில் ஃபைபர் டேட்டா மட்டுமல்லாமல், ஓடிடி ஆப்கள், லைவ் டிவி சேனல்கள் மற்றும் வை-பை காலிங் சலுகையும் கிடைக்கும். ஆனால், இது புதிதாக ஜியோஹோம் சேவையை பெறும் கஸ்டமர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட இருக்கிறது.
இந்த திட்டத்தில் கிடைக்கும் அமேசான் பிரைம் லைட் சந்தா மட்டுமல்லாமல், கூடுதலாக ஜியோஹாட்ஸ்டார் சந்தாவையும் இந்த சலுகை மூலமாக பெற்று கொள்ளலாம். அதேபோல இந்த திட்டத்துக்கு 84 நாட்கள் வேலிடிட்டி கிடைத்தாலும், ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவை 3 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, அடுத்த ரீசார்ஜ் 48 மணி நேரத்துக்குள் செய்து கொள்ளுங்கள்.
இறுதியாக ஜியோ ஏஐ கிளவுட் ஸ்டோரேஜ் சலுகை இந்த திட்டத்துக்கு கிடைக்கிறது. இதில் 50 ஜிபிக்கான ஸ்டோரேஜ் கொடுக்கப்படுகிறது. இதை ஜியோ கிளவுட் ஆப் மூலம் கஸ்டமர்கள் பயன்படுத்த முடியும். இந்த கூடுதல் சலுகைகளுடன் சேர்த்து பார்த்தால், இந்த ப்ரீபெய்ட் திட்டம் அதிகப்படியான சலுகைகளை கொடுத்து இருப்பது தெரிகிறது.


Click it and Unblock the Notifications








