Home
News

Jio SIM-க்கு அடுத்து 84 நாட்களுக்கு இதுதான் ரீசார்ஜ்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 168 ஜிபி டேட்டா.. அமேசான் பிரைம்!

ஜியோ (Jio) சிம் கார்டு வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு அடுத்த 84 நாட்கள் முழுவதும் அமேசான் பிரைம் லைட் சந்தா வேண்டுமானால், இப்போது பார்க்க இருக்கும் ப்ரீபெய்ட் திட்டத்தை (Prepaid Plan) கண்ணை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த டேட்டா திட்டம் கிடையாது. ஆகவே, ஆக்டிவ் திட்டம் இருக்க வேண்டிய அவசியம் கிடையாது.

ஜியோ ரூ.1029 திட்ட விவரங்கள் (Jio Rs 1029 Plan Details): இந்த அமேசான் பிரைம் லைட் திட்டத்துக்கு டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள் மட்டுமல்லாமல், அன்லிமிடெட் 5ஜி டேட்டா, கிளவுட் ஸ்டோரேஜ், கேன்வா சந்தா மற்றும் ஜெமினி சந்தா உள்ளிட்ட ஏகப்பட்ட சலுகைகள் கிடைக்கின்றன. 84 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கிறது.

Jio SIM-க்கு அடுத்து 84 நாட்களுக்கு இதுதான் ரீசார்ஜ்.. வாய்ஸ் கால்கள்!

இந்த நாட்களில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை (Unlimited 5G Data) பயன்படுத்தி கொள்ளலாம். இது 5ஜி கஸ்டமர்களுக்கு கிடைக்கும் டேட்டாவாக இருக்கிறது. 4ஜி கஸ்டமர்களாக இருந்தால், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். மொத்தமாக வேலிடிட்டி முழுவதும் 168 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி இருக்க முடியும்.

இதுபோக 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா சலுகையை இந்த திட்டம் கொடுத்து இருக்கிறது. அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையை இந்த ஜியோ ரூ.1029 திட்டம் கொடுக்கிறது. 100 எஸ்எம்எஸ்களையும் நாளொன்றுக்கு கொடுத்து இருக்கிறது.

ஓடிடி சந்தாவை பார்க்கையில், அமேசான் பிரைம் லைட் சந்தா (Amazon Prime Lite Subscription) கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த சந்தாவை 84 நாட்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இந்த ஓடிடி சந்தா மட்டுமல்லாமல், ஜியோவின் ஸ்பெஷல் ஆஃபில் ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா (JioHotstar Mobile Subscription) கொடுக்கப்படுகிறது. இதை 3 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.

ஆகவே, 2 பிரீமியம் ஓடிடி சந்தாவை இந்த திட்டம் கொடுத்து இருக்கிறது. இதே ஜியோ ஸ்பெஷல் ஆஃபரின் கீழ் ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சந்தா கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் 50 ஜிபிக்கு கிளவுட் ஸ்டோரேஜ் கொடுக்கப்படும். இதை ஜியோ மொபைல் நம்பரை வைத்து லாகின் செய்து மட்டுமே பெற்று கொள்ள முடியும். ஜியோ கிளவுட் ஆப்பை பயன்படுத்தலாம்.

இந்த சந்தா போக 18 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளும்படி கூகுள் ஜெமினி ப்ரோ (Google Gemini Pro) சந்தா கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் கிடைக்கும் பிரீமியம் சலுகைகளையும் 18 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். ஆகலே, நானோ பனானா (Nano Banana) அணுகல் மற்றும் வீடியோ ஜெனரேஷன் உள்ளிட்ட அணுகல்கள் கொடுக்கப்படும்.

மேலும், 5000 ஜிபிக்கு கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கிறது. ஜிமெயில், கூகுள் டிரைவ் உள்ளிட்ட ஆப்களில் இந்த கிளவுட் ஸ்டோரேஜ் சலுகையை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த சந்தாவை தனியாக பெற்றால் ரூ.35,100 செலவு செய்ய வேண்டி இருக்கும். ஆனால், இந்த ஜியோ ரூ.1029 திட்டத்தில் முற்றிலும் இலவசமாக கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இதை தொடர்ந்து பெறுவதற்கு குறைந்தபட்சம் ரூ.349 விலை கொண்ட அன்லிமிடெட் 5ஜி டேட்டா திட்டத்தை தொடர்ந்து ஆக்டிவில் வைக்க வேண்டும். இந்த சலுகைகள் போக லேட்டஸ்ட் சலுகையாக கேன்வா ப்ரோ சந்தாவை (Canva Pro Lite) பெற்று கொள்ளலாம். இதை 12 மாதங்களுக்கு கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Jio Rs 1029 Plan With 168 GB Data 84 Days Validity Unlimited Voice Check Amazon Prime Lite Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X