Home
News

புது ஆஃபர்.. பழைய திட்டத்துல கைவெச்ச அம்பானி.. இந்த வாட்டி குஷியில் Jio யூசர்கள்.. அதே விலையில அம்பானி ஆட்டம்!

இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமான ஜியோவில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்ட பிறகு, அதன் கஸ்டமர்கள் வேறு வழியில்லாமல் ரீசார்ஜ் செய்து வந்தனர். அதே நேரத்தில் பிஎஸ்என்எல் சிம் கார்டுகளை செகண்டரி சிம் கார்டாக மாற்றவும் தொடங்கினர். இதனால், ஜியோ நிறுவனம் பழையபடி திட்டங்களில் மாற்றங்களை செய்ய தொடங்கியது. இப்போது, ஜியோ (Jio) யூசர்களை குஷியாக்கும்படி பழைய ப்ரீபெய்ட் திட்டத்தில் சத்தமே இல்லாமல் புது சலுகையை கொடுத்துக்கிறது. இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஜியோவில் அமேசான் பிரைம் வீடியோ சந்தா கொடுக்கும் ஒரேவொரு திட்டமாக ஜியோ ரூ 1029 திட்டம் (Jio Rs 1029 Plan) இருக்கிறது. இந்த திட்டத்திலேயே இப்போது சலுகை மாற்றப்பட்டிருக்கிறது. ஓடிடி சலுகை மட்டுமல்லாமல், அன்லிமிடெட் 5ஜி டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் போன்ற பல்வேறு சலுகைகளை இந்த திட்டம் பேக் செய்கிறது. முதலில் முழு சலுகைகளை பார்ப்போம்.

புது ஆஃபர்.. பழைய திட்டத்துல கைவச்ச அம்பானி.. இந்தவாட்டி குஷியில் Jio!

ஜியோ ரூ 1029 திட்ட சலுகைகள் (Jio Rs 1029 Plan Offers): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை கிடைக்கிறது. இதுபோக நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது. இந்த 2 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா (Post Data) சலுகையை பெற்று கொள்ளலாம். இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.

ஆகவே, 168 ஜிபிக்கான 4ஜி டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த டேட்டா சலுகைக்கு அடுத்தபடியாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையை இந்த திட்டம் கொடுக்கிறது. டேட்டாவை போலவே தினசரிக்கு 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ள முடியும்.

இந்த முக்கிய சலுகைகள் போல அமேசான் பிரைம் வீடியோ சந்தா (Amazon Prime Subscription) கொடுக்கப்பட்டது. ஆனால், இது மொபைல் எடிஷன் (Mobile Edition) சந்தாவாக இருந்தது. இந்த சந்தாவே இப்போது அமேசான் பிரைம் லைட் சந்தாவாக (Amazon Prime Lite Subscription) அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது. இந்த சந்தாவையும் திட்டத்தின் வேலிடிட்டி போலவே 84 நாட்களுக்கு பயன்படுத்தலாம்.

இந்த சந்தாவில் 2 டிவைஸ்களை பயன்படுத்தி கொள்ள முடியும். ஆனால், மொபைல் சந்தாவில் ஒரு டிவைஸ்க்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். ஆகவே, இது ஜியோ கஸ்டமர்களை குஷிப்படுத்தக்கூடிய சலுகையாகவே இருக்கிறது. இந்த ஓடிடி சலுகை போலவே ஜியோசினிமா (Jio Cinema) மற்றும் ஜியோடிவி (Jio TV) ஆப்களின் சந்தாவும் கொடுக்கப்படுகிறது. ஆனால், இவற்றில் பிரீமியம் சலுகைகள் கிடைக்காது.

இதே வேலிடிட்டியில் நெட்பிளிக்ஸ் சந்தா வேண்டுமானால், ரூ 1299 மதிப்பிலான திட்டத்துக்கு நீங்கள் செல்லலாம். ஆனால், இதில் நெட்பிளிக்ஸ் மொபைல் சந்தா (Netflix Mobile Subscription) மட்டுமே கொடுக்கப்படும். இருப்பினும், மற்ற சலுகைகளுக்கு துளியும் குறை இருக்காது. ஆகவே, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், முந்தைய திட்டத்தை போல நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவானது பயன்படுத்த கிடைக்கும்.

அதேபோல அன்லிமிடெட் 5ஜி டேட்டாவையும் நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம். அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி கால்களை செய்து கொள்ளலாம். மேலும், ரோமிங் வாய்ஸ் கால்களும் கிடைக்கிறது. 100 எஸ்எம்எஸ் சலுகை தினசரிக்கு அனுப்ப கிடைக்கிறது. இந்த நெட்பிளிக்ஸ் திட்டத்துக்கும் ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் 84 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 1029 Plan Silently Upgraded With Amazon Prime Lite Subscription Along Voice Calls 2GB Data
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X