Home
News

Jio அண்ணே.. இது நல்லாருக்கேணே.. Amazon Prime உடன் 84 நாளுக்கு 2GB டேட்டா, வாய்ஸ், SMS மஜா.. அடிமட்ட ரேட்..

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் அதன் ஜியோ வாடிக்கையாளர்களின் (Jio customers) தேவையை பூர்த்தி செய்வதில் ஒருபோதும் குறைவைத்ததில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக, ஜியோ தற்போது அதன் ப்ரீபெய்ட் திட்டங்களில் அமேசான் பிரைம் சந்தாவை (Jio prepaid plan with Amazon Prime) வழங்கும் நன்மையை இணைந்துள்ளது. இந்த புதிய திட்டத்தின் விலை என்ன? இந்த திட்டத்துடன் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? இந்த திட்டத்துடன் கிடைக்கும் அமேசான் பிரைம் சாந்தாவின் செல்லுபடி எத்தனத்தை நாட்களை என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்.

ஜியோ நிறுவனம் அதன் ப்ரீபெய்ட் திட்டங்களின் பட்டியலின் (Jio prepaid plan) கீழ் பல விதமான ப்ரீபெய்ட் திட்டங்களை பல விலை வரம்புகளில், பலதரப்பட்ட வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அறிமுகம் செய்து வழங்கி வருகிறது. இதில் அமேசான் பிரைம் சந்தாவை (Amazon Prime subscription) தேடும் அல்லது தேவைப்படும் வாடிக்கையாளர்களின் தேவையை உணர்ந்து, ஜியோ நிறுவனம் தற்போது ஒரு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அமேசான் பிரேம் சந்தவுடன் வழங்கியுள்ளது.

Jio அண்ணே.. இது நல்லாருக்கேணே.. Amazon Prime உடன் 84 நாளுக்கு மஜா..

Jio அண்ணே.. இது நல்லாருக்கேணே.. Amazon Prime உடன் 84 நாளுக்கு மஜா:

ஜியோ அறிமுகம் செய்துள்ள ஒரு தனித்துவமான ப்ரீபெய்ட் திட்டம் தான் ஜியோ ரூ. 1029 திட்டம் (Jio Rs 1029 Plan). இந்த திட்டம் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி (Jio 84 days validity) உடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. விலைக்கு ஏற்ற வேலிடிட்டியை இந்த திட்டம் வழங்கி, 84 நாட்களுக்கும் இந்த திட்டத்தின் பயனர்கள் பயன்பெறும் வகையில், பின்வரும் நன்மைகளை வாரி வழங்கியுள்ளது.

ஜியோ 1029 பிளான் (Jio 1029 Plan) 84 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (unlimited voice calls) நன்மையை வழங்குகிறது. இதில் அணைத்து நெட்வொர்க் லோக்கல் (all network local calls), STD மற்றும் இன்டர்நேஷனல் ரோமிங் (international roaming) போன்ற அணைத்து நன்மைகளையும் Jio உள்ளடக்கியுள்ளது. இத்துடன், இந்த திட்டம் தினசரி 2GB டேட்டா (2GB data per day) நன்மையை வழங்குகிறது.

ஜியோ ரூ. 1029 திட்டம் (Jio Rs 1029 Plan):

வழக்கமான ப்ரீபெய்ட் திட்டங்களுடன் கிடைக்கும் தினசரி 100 எஸ்எம்எஸ் (SMS) நன்மையையும் இந்த திட்டத்துடன் ஜியோ நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த நன்மைகளுடன் புதிய இலவச சேர்ப்பாக (Free benefit), அமேசான் பிரைம் சந்தாவை இந்த திட்டத்துடன் இணைத்து வழங்கியுள்ளது. இந்த திட்டத்துடன் ஜியோ வழங்கும் அமேசான் பிரைம் சந்தா Amazon Prime Lite சந்தா என்பது குறிப்பிடத்தக்கது.

அமேசான் பிரைம் ஒரு வருட சந்தா (Amazon prime 1 year subscription) தற்போது ரூ. 1499 என்ற விலையில் வழங்கப்படுகிறது. இதை இந்த திட்டத்துடன் வழங்கினால் கம்பெனிக்கு கட்டுப்படி ஆகாது என்பதனால், ஜியோ ரூ. 799 மதிப்புள்ள அமேசான் பிரைம் லைட் (Amazon Prime Lite) சந்தாவை இந்த திட்டத்துடன் இணைத்து வழங்கியுள்ளது. அமேசான் பிரைம் சந்தாவுடன் கிடைக்கும் அணைத்து நன்மைகளும் இத்துடன் கிடைக்கிறது.

அமேசான் பிரைம் லைட் (Amazon Prime Lite) சந்தாவில் என்ன கிடைக்கும்?

இருப்பினும், விளம்பரங்கள் இல்லாத சேவை (ad-free), 4K UHD Prime Video சேவை, பிரைம் மியூசிக் (Prime Music), பிரைம் ரீடிங் (Prime Reading) மற்றும் பிரைம் கேமிங் (Prime Gaming) சேவைகளை மட்டும் அமேசான் பிரைம் லைட் சந்தா வழங்காது. இந்த திட்டத்துடன் கிடைக்கும் அமேசான் பிரைம் சந்தா 84 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது என்பது கவனிக்கத்தக்கது.

இந்த ஜியோ திட்டத்துடன் நிறுவனம் ஜியோ டிவி (Jio TV), ஜியோ சினிமா (Jio Cinema) மற்றும் ஜியோ கிளவுட் (Jio Cloud) போன்ற இலவச சந்தா சேவைகளை வழங்குகிறது. இந்த திட்டம் ஜியோ ட்ரூ 5ஜி (Jio True 5G) நன்மையையும் வழங்குகிறது. அதாவது, ஜியோ 5ஜி நெட்வொர்க் (Jio 5G) வட்டத்தில் 5ஜி மொபைல் உடைய வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டம் அன்லிமிடெட் 5ஜி டேட்டா நன்மையையும் வழங்குகிறது.

அடிமட்ட ரேட் ரூ. 230-க்கு இத்தனை நன்மையா?

இந்த திட்டத்தின் விலை ரூ. 1029 என்று நீங்கள் பட்டியளிப்பட்டிருந்தாலும் கூட, இதனுடன் நமக்கு ரூ. 799 மதிப்பிலான அமேசான் பிரைம் லைட் சந்தா கிடைக்கிறது. இந்த கட்டணத்தை நீங்கள் செலுத்திய தொகையில் இருந்து கழித்துவிட்டால் வெறும் ரூ. 230 விலையில் 84 நாட்களுக்கு தினமும் 2GB டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், தினமும் 100 SMS நன்மைகளை பெறுகிறீர்கள். இதை விட அடிமட்ட மலிவு விலையில் இவ்வளவு நன்மையுடன் இப்படியொரு சிறந்த திட்டம் கிடைக்க வாய்ப்பே இல்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 1029 Plan With 84 Days Validity Provide Amazon Prime Lite 2GB Data Per Day Unlimited Voice 100 SMS
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X