Home
News

Jio SIM இருக்கா.. ரூ.50 கேஷ்பேக்.. இதை மட்டும் ரீசார்ஜ் பண்ணுங்க.. வாய்ஸ் கால்கள், டேட்டா, ஃபுட் டெலிவரி!

ஜியோ நிறுவனத்தின் ப்ரீபெய்ட் சிம் கார்டு வைத்து இருக்கும் கஸ்டமர்களுக்கு இந்த ஒரு ரீசார்ஜ் திட்டத்தில் ரூ.50 கேஷ்பேக் மட்டுமல்லாமல், ஆன்லைன் ஃபுட் டெலிவரி முதல் மளிகை பொருட்கள் டெலிவரி வரையில் இலவசமாக கொடுக்கப்படுகிறது. வழக்கமாக கிடைக்கும், வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகளும் கொடுக்கப்படும்.

ஜியோ ரூ.1028 திட்ட விவரங்கள் (Jio Rs 1028 Plan Details): இந்த ரூ.1000 ரீசார்ஜ் செக்மெண்ட்டில் அதிகப்படியான சலுகைகளுடன் கிடைக்கும் திட்டமாக இது இருக்கிறது. ஏனென்றால், அவ்வளவு சலுகைகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்துவது மட்டுமல்லாமல், அதற்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா கிடைக்கும்.

Jio SIM இருக்கா.. ரூ.50 கேஷ்பேக்.. இதை மட்டும் ரீசார்ஜ் பண்ணுங்க!

இது 4ஜி கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது. அதுவே 5ஜி ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் கஸ்டமர்களாக இருந்தால், அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை (Unlimited 5G Data) பயன்படுத்த முடியும். இதற்கும் 4ஜி டேட்டாவுக்கும் தொடர்பில்லை. இந்த திட்டத்தில் 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, அந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கும்.

2 ஜிபி தினசரிக்கு கிடைப்பதால், 4ஜி கஸ்டமர்களே வேலிடிட்டி முழுவதும் 168 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ள முடியும். வேலிடிட்டி நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கிடைக்கிறது. மேலும், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த சலுகைகளுக்கு பிறகே கூடுதல் சலுகைகள் கிடைக்கின்றன. அதுவும் ஏகப்பட்ட சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளன. முதலில் ஜியோ ஸ்பெஷல் ஆஃபரில் கீழ் ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தா கொடுக்கப்படுகிறது. 3 மாதங்களுக்கு இந்த சந்தா கொடுக்கப்படும். ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சந்தா கொடுக்கப்பட்டு உள்ளது.

இதில் 50 ஜிபிக்கு கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கிறது. 18 மாதங்களுக்கு இலவசமாக பயன்படுத்தி கொள்ளும்படி ஜெமினி ப்ரோ (Gemini Pro) சந்தா கிடைக்கிறது. இந்த சந்தாவை தனியாக பெற்றால், ரூ.35,100 செலவாகும். ஆனால், இதில் முற்றிலும் இலவமாக கிடைக்கிறது. 5000 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் (Cloud Storage), நானோ பனானா (Nano Banana) அணுகல்கள் கிடைக்கிறது.

இந்த சலுகைகள் போக ஆன்லைன் ஃபுல் மற்றும் மளிகை டெலிவரிக்கான சந்தா கிடைக்கிறது. ஆகவே, ஸ்விக்கி ஒன் மெம்பர்ஷிப் (Swiggy One Membership) பெற்று கொள்ளலாம். இந்த மெம்பர்ஷிப் வழியாக 7 கிலோ மீட்டர்களுக்குள் ரூ.99 மேல் ஆர்டர் செய்தால், அதற்கு டெலிவரி சார்ஜ் கிடையாது. முற்றிலும் இலவமாக ஆர்டர் செய்து கொள்ளலாம்.

இதுபோக ஃபுட் ஆர்டர்களில் 30 சதவீத கூடுதல் டிஸ்கவுண்ட் பெற்று கொள்ளலாம். இந்த மெம்பர்ஷிப்பில் சர்ஜ் கட்டணம் (Surge Fee) செலுத்த வேண்டியது கிடையாது. மேலும், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் ஆர்டர்களிலும் சலுகைகள் இருக்கின்றன. ஆகவே, ரூ.199 மேல் ஆர்டர் செய்தால், கட்டணம் ஏதும் இல்லாமல் ப்ரீ டெலிவரி கிடைக்கும்.

ரூ.399 மேல் ஆர்டர் செய்தால், சர்ஜ் கட்டணம் வசூலிக்கப்படாது. இதுபோக டைன்அவுட் (Dineout) வழியாக ப்ரீ-புக்கிங் செய்யும் கஸ்டமர்களுக்கு டாப் உணவகங்களில் 50 சதவீதம் வரையில் ஆஃபர் கொடுக்கும்படும். இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு ரூ.50 கேஷ்பேக் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இவ்வளவு சலுகைகளும் ஒரே திட்டத்தில் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Jio Rs 1028 Plan With Rs 50 Cashback SWIGGY ONE Membership Voice Calls 2GB Daily Data
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X