Home
News

Jio அடிச்சான் பாரு.. 84 நாட்களுக்கு ஒரே ரீசார்ஜ்.. ரூ.50 கேஷ்பேக்.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 2ஜிபி டேட்டா!

ஜியோ (Jio) நிறுவனத்தின் ப்ரீபெய்ட் (Prepaid) கஸ்டமர்களுக்கு 84 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கும் திட்டத்தில் ரூ.50 கேஷ்பேக் கிடைக்கிறது. மேலும், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா, தினசரி எஸ்எம்எஸ், ஓடிடி சந்தா மட்டுமல்லாமல், ஆன்லைன் ஃபுட் டெலிவரி சந்தாவும் கிடைக்கிறது. இந்த கேஷ்பேக் சலுகை கொண்ட திட்டத்தின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

84 நாட்கள் வேலிடிட்டியுள்ள திட்டங்களில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவுடன் கிடைக்கும் திட்டமாக ஜியோ ரூ.1028 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் உள்ளது. இதில் ரூ.50 கேஷ்பேக் மற்றும் ஸ்விக்கி ஒன் லைட் (Swiggy One Lite) சந்தா கூடுதலாக கொடுக்கப்பட்டு உள்ளது. ஜியோ ஸ்பெஷல் ஆஃபரில் ஓடிடி சந்தா, கிளவுட் ஸ்டோரேஜ் உள்ளிட்ட சலுகைகளையும் பெற்று கொள்ளலாம்.

Jio அடிச்சான் பாரு.. 84 நாட்களுக்கு ஒரே ரீசார்ஜ்.. ரூ.50 கேஷ்பேக்!

ஜியோ ரூ.1028 திட்ட விவரங்கள் (Jio Rs 1028 Plan Details): இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு ரூ.50 கேஷ்பேக் கொடுக்கப்படும். 84 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) மற்றும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கொடுக்கப்பட்டு உள்ளது.

நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை 4ஜி வேகத்தில் பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, 84 நாட்களுக்கு 168 ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும், தினசரி டேட்டா 2 ஜிபி முடிந்த பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கொடுக்கப்பட்டு உள்ளது. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை இந்த திட்டத்தின் வழியாக அனுப்பி கொள்ளலாம்.

கூடுதல் சலுகையில் ஜியோஹாட்ஸ்டார் மொபைல் & டிவி (JioHotstar Mobile/TV) சந்தா கிடைக்கிறது. இந்த ஓடிடி சந்தாவை 3 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், 50 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் கொண்ட ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சலுகை கொடுக்கப்பட்டு உள்ளது. 18 மாதங்களுக்கு ஜெமினி ஏஐ ப்ரோ (Gemini AI Pro) சந்தா கொடுக்கப்படும்.

இந்த சலுகைகள் போக ஸ்விக்கி ஒன் லைட் (Swiggy One Lite) சந்தா கிடைக்கும். இதையும் 3 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். ரூ.600 மதிப்பிலான சலுகைகளை இந்த சந்தா கொடுத்து உள்ளது. ஆகவே, ரூ.149 மேல் ஆர்டர் செய்யும்போது, 10 ப்ரீ ஹோம் டெலிவரிகளை பெற்று கொள்ளலாம். அதேபோல இன்ஸ்டாமார்ட் வழியாக 10 ப்ரீ ஹோம் டெலிவரிகளை பெற்று கொள்ளலாம்.

ஆனால், இன்ஸ்டாமார்ட்டில் ரூ.199 விலைக்கும் மேல் ஆர்டர் செய்ய வேண்டும். இந்த ஸ்விக்கி ஒன் லைட் வைத்து இருந்தால் சர்ஜ் கட்டணம் (Furge Fees) வசூலிக்கப்படாது. 20K+ ஃபுட் டெலிவரிகளில் 30 சதவீதத்துக்கும் மேல் ஆஃபர் கிடைக்கும். ஜீனீ டெலிவரிகளில் ரூ.60 மேக் சென்றால் 10 சதவீத தள்ளுபடியும் கொடுக்கப்படும்.

இவ்வளவு சலுகைகளுடன் ரூ.50 கேஷ்பேக் கொடுத்து உள்ளது. இதே போல 84 நாட்கள் வேலிடிட்டியுடன் அமேசான் பிரைம் லைட் (Amazon Prime Lite) சந்தா வேண்டுமானால், மற்றொரு திட்டம் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. இந்த திட்டத்திலும் முந்தைய திட்டத்தில் பார்த்த எல்லா சலுகைகளும் கிடைக்கும். ஆனால், ஸ்விக்கி ஒன் லைட் சந்தா மட்டுமே கிடைக்காது.

அதற்கு பதிலாக அமேசான் பிரைம் லைட் சந்தா கிடைக்கும். இந்த திட்டத்தின் விலை ரூ.1029ஆக இருக்கிறது. நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ்கள், ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி சந்தா கிடைக்கிறது. ஜியோ ஏஐ கிளவுட் சலுகை வருகிறது. 84 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுத்து இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 1028 Plan With Rs 50 Cashback 84 Days Validity 2GB Data Unlimited Local STD Voice Calls
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X