ஒரே Jio ரீசார்ஜ்.. 90 நாட்கள் இலவசம்.. ரூ.50 கேஷ்பேக்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 2 ஜிபி டேட்டா.. ஸ்விக்கி சந்தா!
முகேஷ் அம்பானியின் ஜியோ (Jio) நிறுவனம் கொடுக்கும் சலுகைகளை வேறு எந்த நிறுவனங்களாலும் கொடுக்க முடியாது என்று அடித்து சொல்லும்படியான ஆஃபர் இப்போது கொடுக்கப்பட்டுள்ளது. ஒரேவொரு ரீசார்ஜ் மூலம் 90 நாட்களுக்கு இலவச ஜியோஹாட்ஸ்டார் சந்தா மட்டுமல்லாமல், 90 நாட்களுக்கு ஸ்விக்கி ஒன் லைட் மற்றும் ரூ.50 கேஷ்பேக் கிடைக்கிறது. இதுபோக வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் போன்ற சலுகைகள் வாரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஜியோ திட்டம் (Jio Plan) குறித்த விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஜியோ ரூ 1028 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs Prpaid 1028 Plan): இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தில் (Jio Prepaid Plan) ஏற்கனவே ரூ.50 கேஷ்பேக் (Rs 50 Cashback), ஸ்விக்கி ஒன் லைட் (SWIGGY ONE LITE) சலுகைகள் இலவமாக கிடைத்தது. இப்போது, ஐபிஎல் 2025 போட்டிகளை முன்னிட்டு ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தாவும் இலவசமாக கிடைக்கிறது.

ஆகவே, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 90 நாட்களுக்கான ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தா கொடுக்கப்படுகிறது. இந்த சந்தாவுக்கு அடுத்து 90 நாட்களுக்கான ஸ்விக்கி ஒன் லைட் சந்தா கிடைக்கிறது. இந்த சந்தா மூலம் ரூ.600 மதிப்பிலான சலுகைகளை பெற்று கொள்ளலாம். அதாவது, 10 ப்ரீ ஹோம் டெலிவரிகள் கிடைக்கிறது.
ஆனால், ரூ 149-க்கு மேல் ஆர்டர் செய்யும் டெலிவரிகளுக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும். இதுபோக 10 ப்ரீ ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் (Swiggy Instamart) டெலிவரிகளும் கிடைக்கின்றன. ஆனால், ரூ 199-க்கு மேல் ஆர்டர் செய்தால் மட்டுமே இந்த இலவச டெலிவரியை பெற்று கொள்ள முடியும். அதேபோல ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் ஆர்டர்களுக்கு சர்ஜ் கட்டணம் (Surge Fees) கிடையாது.
இந்த சலுகைகள் போக ஜீனி டெலிவரிகளுக்கு 10 சதவீத டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. இந்த டிஸ்கவுண்ட் பெறுவதற்கு ரூ.60-க்கு மேல் ஆர்டர்கள் இருக்க வேண்டும். இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு ரூ.50 கேஷ் பேக் கொடுக்கப்படுகிறது. இதை ஜியோ ஆப் மூலம் பயன்படுத்தி கொள்ளலாம். இதுபோக மற்றொரு இலவச சலுகை கிடைக்கிறது.
அதாவது, புதிதாக சேர்க்கப்பட்ட ஜியோ ஏஐகிளவுட் (Jio AICloud) சலுகை இதில் வருகிறது. ஆகவே, 50 ஜிபிக்கான சேவைகளை பெற்று கொள்ளலாம். மேற்கண்ட இலவச சலுகைகள் போகவே அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), தினசரி டேட்டா, தினசரி எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்களின் சலுகை வருகிறது.
ஆகவே, இந்த சலுகைகளை 84 நாட்கள் வேலிடிட்டியில் பயன்படுத்தி கொள்ளலாம். அதாவது, ஜியோஹாட்ஸ்டார் மற்றும் ஸ்விக்கி ஒன் லைட் சலுகைகள் 90 நாட்களுக்கு கிடைத்தாலும் வாய்ஸ், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்களுக்கு 84 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். ஆகவே, 84 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை பெறலாம்.
இதுபோக 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா மற்றும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கிடைக்கிறது. தினசரிக்கு 100 எஸ்எம்எஸ்கள், ஜியோ டிவி (JioTV) மற்றும் ஜியோகிளவுட் (JioCloud) போன்ற சலுகைகளும் கிடைக்கின்றன. இலவச சலுகைகளை பார்க்கையில் இதில் நல்ல லாபமான சலுகைகளே வருகின்றன.


Click it and Unblock the Notifications








