Home
News

IPL ரசிகர்களுக்கு Jio டிரீட்.. 100 ரூபாய்க்கு 90 நாள் வேலிடிட்டி.. ஒரே கல்லில் 2 மாங்காய்.. JioHotstar இலவசம்!

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) அதன் வடிக்கையாளர்களுக்காக புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை வெறும் 100 ரூபாய் விலையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் விலை வெறும் 100 ரூபாய் தான் என்றாலும், இதன் வேலிடிட்டி 90 நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையில் ஜியோ நிறுவனம் வழங்கியுள்ளது டெலிகாம் துறையில் பெரிய ஆச்சரியத்தை உருவாக்கியுள்ளது. ஜியோ அறிமுகம் செய்துள்ள இந்த புதிய திட்டத்தின் கீழ் கிடைக்கும் நன்மைகள் என்ன? இந்த திட்டத்தை ஏன் ஜியோ நிறுவனம் இந்த காலகட்டத்தில் அறிமுகம் செய்துள்ளது என்பது போன்ற விபரங்களை இப்போது பார்க்கலாம்.

ஜியோ நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் அதிக நன்மைகளை வழங்கும் திட்டங்களை வழங்கி வருகிறது. இந்த வரிசையில், ஜியோ நிறுவனம் தற்போது அதன் வடிக்கையாளர்களுக்காகவும், இந்தியன் பிரீமியர் லீக் IPL போட்டி ரசிகர்களுக்காகவும் பல புதிய திட்டங்களை அறிமுகம் செய்ய துவங்கியுள்ளது. இதில் குறிப்பிட்டு கூறும் விதமாக, ஜியோ நிறுவனம் தற்போது வெறும் 100 ரூபாய் விலையில் ஒரு புதிய திட்டத்தை IPL ரசிகர்களுக்காக அறிமுகம் செய்துள்ளது.

IPL ரசிகர்களுக்கு Jio டிரீட்.. 100 ரூபாய்க்கு 90 நாள் வேலிடிட்டி.. ஒரே

IPL ரசிகர்களுக்கு Jio டிரீட்.. 100 ரூபாய்க்கு 90 நாள் வேலிடிட்டி:

IPL போட்டியின் 18வது சீசன் ஒளிபரப்புகளை ஜியோ பயனர்கள் எந்தவித தடங்கலும் இல்லாமல் கண்டு மகிழ வேண்டும் என்பதற்காக ஜியோ நிறுவனம் தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. ஜியோஹாட்ஸ்டார் நன்மையை மிகமிக குறைந்த விலையில் வழங்க வேண்டும் என்பதற்காக, டெலிகாம் நிறுவனம் இப்போது 100 ரூபாய் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்த திட்டம் 100 ரூபாய் விலையில் 90 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி நன்மையை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது அணைத்து IPL போட்டிகளையும் காண ரசிகர்களை அனுமதிக்கிறது. அதுமட்டுமின்றி, ஜியோ OTT தளம் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் உள்ளடக்கங்களை காண அனுமதிக்கிறது. இது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல டபுள் நன்மையை வழங்குகிறது.

ஜியோ ரூ. 100 திட்டம் (Jio Rs 100 Plan):

ஜியோ அறிமுகம் செய்துள்ள புதிய 100 ரூபாய் திட்டம் என்ன நன்மைகளை வழங்குகிறது என்று இப்போது பார்க்கலாமா? ஜியோ ரூ. 100 திட்டம் (Jio Rs 100 Plan) அதன் பயனருக்கு 5GB டேட்டா நன்மையை வழங்குகிறது. இது 90 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இருப்பினும், இந்த திட்டம் வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளை வழங்காது என்பது கவனிக்கத்தக்கது மக்களே.

வாய்ஸ் கால்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் உடன் டேட்டா நன்மையை வேண்டுமென்றால் நீங்கள் கட்டாயம் வழக்கமான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை தான் தேர்வு செய்ய வேண்டும். இது டேட்டா நன்மையுடன், JioHotstar சந்தா நன்மையை 90 நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையில் 5GB டேட்டாவுடன் வழங்குகிறது. இதேபோல், ஜியோ நிறுவனம் இன்னும் பல திட்டங்களை 90 நாட்கள் செல்லுபடியாகும் JioHotstar நன்மையுடன் வழங்குகிறது.

- ஜியோ ரூ. 299 திட்டம்
- ஜியோ ரூ. 349 திட்டம்
- ஜியோ ரூ. 899 திட்டம்
- ஜியோ ரூ. 999 திட்டம்

போன்ற திட்டங்கள் 90 நாட்கள் செல்லுபடியாகும் JioHotstar நன்மையை வழங்குகின்றன. இருப்பினும் இந்த திட்டங்கள் 100 ரூபாய் திட்டம் போல இல்லாமல், வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் மற்றும் தினசரி டேட்டா நன்மைகளை இணைத்து வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 100 Plan Offers 90 Days Validity With Free JioHotstar Subscription Along 5GB Data Benefit For IPL Season 18
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X