Home
News

போச்சு.. இனிமேல் 7 நாள் மட்டும் தான் டேட்டா கிடைக்கும்.. 2 Jio திட்டங்களின் வேலிடிட்டியில் திடீர் மாற்றம்!

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனமானது அதன் ப்ரீபெய்ட் பிரிவின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் 2 பிரபலமான வேலிடிட்டியில் முக்கிய திருத்தம் ஒன்றை செய்துள்ளது. அதென்ன திட்டங்கள்? அவைகளின் பழைய வேலிடிட்டி என்ன? புதிய வேலிடிட்டி என்ன? இதோ விவரங்கள்:

ரிலையன்ஸ் ஜியோ அதன் 2 டேட்டா ஆட் ஆன் திட்டங்களின் (Data Add on Plans) வேலிடிட்டியை திருத்தி உள்ளது. அந்த திட்டங்கள் ரூ.69 மற்றும் ரூ.139 மதிப்புள்ள டேட்டா பிளான்கள் (Jio Rs 69 and Rs 139 Data Plans) ஆகும். தற்போது இந்த 2 திட்டங்களும் ஸ்டேண்ட்அலோன் வேலிடிட்டி (Standalone Validity) கொண்ட திட்டங்களாக மாற்றப்பட்டுள்ளன.

2 Jio திட்டங்களின் வேலிடிட்டியில் திடீர் மாற்றம்!

முன்னதாக இந்த 2 திட்டங்களும், ஒரு ஜியோ மொபைல் நம்பரில் உள்ள மெயின் ரீசார்ஜ்ஜின் வேலிடிட்டி உடன் ஒற்றுப்போகும் படியான வேலிடிட்டியை கொண்டிருந்தன. அதாவது உங்களுடய மெயின் ரீசார்ஜ்ஜின் வேலிடிட்டி 28 நாட்கள் என்றால் ரூ.69 அல்லது ரூ.139 திட்டங்களின் கீழ் கிடைக்கும் டேட்டாவும் (தீரும் வரையிலாக) 28 நாட்களுக்கு கிடைக்கும்; இதேபோல 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட மெயின் ரீசார்ஜை கொண்டிருந்தால் 84 நாட்களுக்கு கிடைக்கும்.

ஆனால் தற்போது ஜியோ அறிவித்துள்ள புதிய திருத்தத்தின் கீழ், இனிமேல் இந்த 2 ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்களும் வெறும் 7 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதாவது உங்களுடைய மெயின் ரீசார்ஜ் ஆனது 28 நாட்களுக்கு செல்லுபடி ஆனாலும் சரி அல்லது 84 நாட்களுக்கு செல்லுபடி ஆனாலும் சரி.. நீங்கள் ரூ.69 அல்லது ரூ.139 டேட்டா பிளான்களை ரீசர்ஜ் செய்தால் அது 7 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.

அதாவது இந்த திட்டங்களின் கீழ் வழங்கப்பட்ட டேட்டாவை பயன்படுத்த பயனர்களுக்கு 7 நாட்கள் அல்லது 1 வாரம் மட்டுமே நேரம் இருக்கும். அதன் பின்னர் நீங்கள் பயன்படுத்தாதா டேட்டா காணாமல் போய்விடும். இந்த 2 திட்டங்களின் நன்மைகளை பொறுத்தவரை, ரூ.69 டேட்டா பிளானிங் கீழ் 6ஜிபி அளவிலான அதிவேக டேட்டா கிடைக்கும். மறுகையில் உள்ள ரூ.139 டேட்டா பிளானின் கீழ் 12ஜிபி அளவிலான ஹைஸ்பீட் டேட்டா கிடைக்கும்

இவ்விரு திட்டங்களிலும் ஒதுக்கப்பட்ட டேட்டாவை பயன்படுத்தியவுடன், இண்டர்நெட் ஸ்பீட் ஆனது 64 கேபிபிஸ் ஆக குறையும். இவ்விரு திட்டங்களும் டேட்டா-ஒன்லி பிளான்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது ரூ.69 மற்றும் ரூ.139 திட்டங்களின் கீழ் வாய்ஸ் கால்கள் அல்லது எஸ்எம்எஸ் போன்ற பலன்கல் கிடைக்காது.

மேலும் ரூ.69 மற்றும் ரூ.139 ஆகிய 2 திட்டங்களையுமே தனியாக ரீசார்ஜ் செய்ய முடியாது. உங்களுடைய ஜியோ நம்பரில் ஏற்கனவே ஒரு ஆக்டிவ் ரீசார்ஜ் அல்லது மெயின் ரீசார்ஜ் அல்லது பேஸ் ரீஎசார்ஜ் இருந்தால் மட்டுமே இந்த டேட்டா பிளான்களை ரீசார்ஜ் செய்ய முடியும். அதாவது உங்களுடைய மெயின் ரீசார்ஜ்ஜில் உள்ள டெய்லி டேட்டா லிமிட் தீர்ந்து போய்விட்டால், மீதமுள்ள நாளில் உங்களுக்கு டேட்டா தேவைகள் இருந்தால் ரூ.69 அல்லது ரூ.139-ஐ ரீசார்ஜ் செய்து கூடுதல் டேட்டாவை பெறலாம்.

முகேஷ் அம்பானி (Mukesh Ambani) தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது ஜியோ சினிமா (JioCinema) மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரை (Disney Plus Hotstar) ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட புதிய ஸ்ட்ரீமிங் தளமான ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) தளத்தை அறிமுகம் செய்து வேகத்தில் இந்த மாற்றம் வந்துள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஜியோவின் இந்த புதிய இயங்குதளமானது, ஓடிடி (OTT) என்று சுருக்கமாக அழைக்கப்படும் 2 ஓவர்-தி-டாப் (Over-the-top) இயங்குதளங்களின் (ஜியோசினிமா மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்) முழு கன்டென்ட் லைப்ரரியையும் ஒன்றிணைக்கிறது. ஜியோவின் இந்த புதிய இயங்குதளம் ஒரு புதிய லோகோவையும் (New Logo) பெறுகிறது, இது சமச்சீரற்ற ஏழு புள்ளிகள் கொண்ட நட்சத்திரத்துடன் ஜியோஹாட்ஸ்டார் என்கிற வார்த்தையை உள்ளடக்குகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio revised Rs 69 Rs 139 Prepaid Recharge Data Plan Now Offers Standalone Validity Of Just 7 days
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X